Exclusive: காந்தாவுக்காக டைம் டிராவல் செஞ்சேன்.. கலை இயக்குநர் ராமலிங்கம் பேட்டி!
சென்னை: சினிமாவுக்குள் ஒரு சினிமா எடுத்தோம்! "காந்தா" படப்பிடிப்பில் ஒரே அறையில் பல சீன்கள் எடுத்தோம் என கலை இயக்குநர் ராமலிங்கம் மனம் திறந்துள்ளார். படத்தின் பிரம்மாண்ட செட் உருவாக்கம், கலை இயக்கத்தில் இருந்த சவால்கள் குறித்து பல தகவல்களை பகிர்ந்துகொண்டது சுவாரஸ்யமாக இருந்தது.
டைம் மிஷனில் ஏறி பழைய படத்தில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என யோசித்தேன். அந்த கதையில் இருந்த இயக்குநருக்கு வேலை செய்யணும். ஐயாவ சாட்டிஸ்பேக்ஷன் பண்றதுதான் நான் செல்வாவ சாட்டிஸ்பேக்ஷன் பண்றது என ராமலிங்கம் அந்த அனுபவத்தை விவரிக்கிறார்.

செல்வாக்கு ஏதோ ஒன்று தேவைப்படும். ஆனால் அது என்னவென்று அவரே நம்மகிட்ட பேசி தெரிஞ்சுக்குவார். நிறைய வாசிக்கிற பழக்கம் உள்ளவர் செல்வா. விஷுவல் நாலேட்ஜ் அவருக்கு அதிகம். ஒளிப்பதிவாளர் சந்தோஷின் உதவியாளராக இருந்ததால் விஷுவல் சென்ஸ் பற்றி புரிஞ்சுக்க ஈஸியா இருந்தது என்கிறார் ராமலிங்கம்.
சென்னையில் ஆரம்பித்து ஹைதராபாத்தில் முடிந்தது செல்வாவோட உரையாடல். இந்த ப்ராஜெக்ட்டுக்காக இரண்டு மூணு வருஷம் பயணிச்சிருக்கேன். கதை ஏழு எட்டு வருஷமா அவர் மனசுல இருந்துச்சு. இடையில் போன் கூட எடுக்கமாட்டார். ஆஸ்திரேலியா போய்ட்டாரான்னு நினைப்போம் என பகிர்ந்துகொண்டார்.
செல்வா இயக்கிய வீரப்பன் சீரிஸ் பார்த்து மிரண்டு போய்ட்டேன். டாக்குமெண்ட்ரியை விஷுவல் லாங்குவேஜ்ல சொல்ல முடியுமான்னு ஆச்சரியப்பட்டேன். ஆபீசர்ஸ் பேசும்போது லைட்டிங், கலர் பேலட் எல்லாம் சூப்பரா இருந்தது. இந்தியன் டாக்குமெண்ட்ரில அது பெஸ்ட் என ராமலிங்கம் குறிப்பிட்டார்.
1950களில் தமிழ் சினிமா எப்படி இருந்ததுன்னு செல்வா சொன்னாரு. எம்.ஜி.ஆரின் ஸ்பாட் போட்டோஸ், நாகேஷ் படங்கள் பார்த்தேன். அப்போதைய ஷூட் அட்மாஸ்பியர், ட்ராக் அண்ட் ட்ராலி, லைட்மேன் காஸ்டியூம், லைட் மீட்டர் இதெல்லாம் தேவைப்பட்டது என்கிறார் ராமலிங்கம்.
துல்கர் சல்மான் நடிப்பு சக்கரவர்த்தி. ஸ்பாட்ல சின்னதா கால தூக்கி சேர்ல வைக்கிறதுல ரஜினி மாதிரி மாடுலேஷன் பண்ணிருப்பாரு. அந்த அய்யா கிட்ட கால் ஆக்ஷன் பண்ணிருப்பாரு. ஒரு பீரியட் படத்துக்கு கரெக்டா பொருந்துறாரு என துல்கரை புகழ்ந்துள்ளார் ராமலிங்கம்.
ஒரு ஹாரர் மூவி எடுக்கறாருன்னா, ஐயா எப்படி ப்ராப்ஸ் செலக்ட் பண்ணுவாரு, அவர் டேஸ்ட் என்னன்னு தெரிஞ்சிக்கணும். ஐயாவோட வீடு எப்படி இருக்கும்னு டிசைன் பண்ணனும். சினிமாக்குள்ள சினிமா மாதிரி ரொம்ப நெருக்கமான படைப்பா இருந்துச்சு என்கிறார்.
செல்வாவோட கரண்ட்ல, அய்யாவோட கற்பனையில பயணிச்சேன். செல்வாவோட கிரியேட்டிவிட்டில தலையிட முடியாது. ஆனா அய்யா கிட்ட சுதந்திரம் எடுத்துக்க முடியும். டைரக்டர் எப்படி கதைய எழுதுவாங்க, என்ன பேனா யூஸ் பண்ணுவாங்கன்னு உள்வாங்கிக்கிட்டேன் என ராமலிங்கம் கூறினார்.
ஒரு ஆர்ட் டைரக்டரா மட்டும் இல்லாம, கதையோட பயணிக்கிற கதாசிரியரா இருக்கணும். டைரக்டரோட சேர்ந்து ஒரு டைரக்டரா, டிஓபியோட சேர்ந்து ஒரு கேமராமேனா பயணிக்கணும். மொத்த விஷுவலுக்கும் நீங்கதான் பொறுப்பு எனவும் கூறினார் ராமலிங்கம்.
நாலு நாள் வேலைய ஒரு நாள்ல பண்ண சொல்லுவாங்க. பீரியட் படம்னா எல்லாமே கிரியேட் பண்ணனும். டக்குன்னு ஒரு ஐடியா தோணும். அது தப்பு இல்ல. ப்ரொடியூசர் ஆபீஸ் டக்குன்னு ரெடி பண்ண வேண்டிய நெருக்கடி வந்துச்சு. ராத்திரி பகலா வேலை செஞ்சோம் என்கிறார் ராமலிங்கம்.
மேக்கப் ரூமை புரொடியூசர் ரூமா மாத்தினோம். துப்பாக்கியில ஷூட் பண்ற இடம் அது ஃப்ளோரே கிடையாது. கீழதான் ஷூட் பண்ணோம். அப்படியே ரூம்க்கு வந்தா ரூம் செட், ஸ்டெப்ஸ் வேற இடம். ஒரே இடமா பில்டிங்க மாத்தினோம் என சிரித்துக்கொண்டே கூறினார் ராம்.
டைரக்டர் சேர் சின்ன மேட்டர்தான். டிசைன் பண்ணப்போ கொஞ்சம் பெருசா பண்ணிட்டான். டென்ஷனா இருந்துச்சு. அப்புறம் வேற சேர் எடுத்தோம். டைரக்டர் ஓகே சொல்லிட்டாரு என சேர் ஒன்று வாங்கிய அனுபவத்தை பகிர்ந்துகொண்டார் ராமலிங்கம்.
செட் என்ன கலர்ல இருக்கோ, அதுக்கு ஏத்த மாதிரி காஸ்டியூம் இருக்கணும். கலர் பேலட் பத்தி காஸ்டியூம் டிசைனர்கிட்ட பேசுவோம். நான் ரியலிஸ்டிக்ல இருந்து வெளிய வரது கஷ்டம். 1940ல சில கலர்ஸ் கிடையாது. பிரைமரியான கலர்ஸ் மட்டும்தான் இருக்கும் என்றார் ராம்.
டிஓபி ஒரு ஃபாரினர். நம்ம கல்ச்சர் வேற. அதனால கலரை அடாப்ட் பண்ணிக்கிறது கஷ்டமா இருந்துச்சு. அப்புறம் நிறைய இங்கிலீஷ் படங்கள் பார்த்தோம். நம்ம யூஸ்வலா பண்றதையே பண்ணிட்டு இருந்தா எப்படி? வேற ஒரு சினிமா பண்ணனும் என்று ராம் கூறினார்.
துல்கர் ஸ்பாட்ல கரெக்டா உள்வாங்கி நடிப்பாரு. பீரியட்ல எல்லாமே ஓவர்டூப் பண்ண மாதிரி இருக்கும். ஆனா அது சட்டிலா இருக்கணும். அவரு அந்த காலத்து நடிகனாவே உணர்றேன்னு சொன்னாரு என துல்கரை பாராட்டினார்.
தோட்டா தரணி சாருக்கு செவாலியே விருது கிடைச்சது சந்தோஷமா இருக்கு. நடிகர்களுக்குதான் இந்த மாதிரி கிடைக்கும். ஒரு டெக்னீஷியனுக்கு கிடைக்குறது பெரிய விஷயம். இனிமே ஆர்ட் டைரக்டருக்கும் மரியாதை கிடைக்கும்னு நம்புறேன் என ராமலிங்கம் கூறினார்.
சினிமாவுக்குள்ள ஆர்ட் டைரக்டர் ஒரு முக்கியமான கிராஃப்ட். கேமரா வைக்க முடியாது. ஸ்பாட்டுக்கு போக முடியாது. ஆனா சரியில்லாத ஆட்கள் உள்ள வந்துடுறாங்க. ஒரு மரம் வரையக்கூட தெரியாதவங்க கூட இருக்காங்க என வருத்தத்துடன் பகிர்ந்துகொண்டார் கலை இயக்குநர் ராமலிங்கம். காந்தா படம் மூலம் நம்மை 1940, 50 காலக்கட்டத்துக்கு அழைத்துச் சென்றவரின் பேட்டி வீடியோவை பார்த்து மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications











