எனக்கு அந்த பிரச்சனை இருக்கு.. தனுஷின் கர்ணன் பட ஹீரோயின் ரஜிஷா விஜயன் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சென்னை: கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வைரலாகி வருகிறது.

மலையாள நடிகையான இவர், முதன் முறையாக கர்ணன் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகிறார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது.

கர்ணனின் திரெளபதி

கர்ணனின் திரெளபதி

கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள கர்ணன் திரைப்படத்தில் திரெளபதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் நடிகை ரஜிஷா விஜயன். தமிழில் இப்படியொரு பெரிய படத்தின் மூலம் அறிமுகமாவது தனக்கு கிடைத்த பாக்கியம் என்கிறார்.

உதவிய தனுஷின் நடிப்பு

உதவிய தனுஷின் நடிப்பு

கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வரும் நடிகர் தனுஷ் உடன் நடிக்க கிடைத்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. தனுஷ் உடன் நடிக்கும் நடிகர்களின் நடிப்பையும் சர்வ சாதாரணமாக நல்ல நடிப்பாக மாற்றிவிடும் ஆற்றல் அவருக்கு இயல்பாகவே உள்ளது.

பாவடை தாவணி

பாவடை தாவணி

கர்ணன் படத்தில் அந்த கதைக்கு தேவையான காஸ்ட்யூம் அணிந்து தான் படம் முழுக்க நடித்திருக்கிறேன். என்னை ரஜிஷாவாக ரசிகர்கள் பார்ப்பதை விட அந்த கதாபாத்திரமாக பார்ப்பார்கள் என நினைக்கிறேன். அதிகமாக பாவடை தாவணி உடையணிந்து தான் படம் முழுக்க நடித்துள்ளேன்.

முத்தக் காட்சி

முத்தக் காட்சி

கர்ணன் படத்தில் நடிகர் தனுஷ் உடன் நல்லாவே ரொமான்ஸ் செய்து நடித்துள்ள ரஜிஷாவுக்கு முத்தக் காட்சி ஒன்று அதிக டேக் எடுத்ததாகவும், நடிகர் தனுஷே, போதும் மாரி சார் என்று சொன்னதாகவும் தகவல்கள் வெளியானதே அது குறித்து என்ன சொல்றீங்க என்கிற கேள்விக்கு, அந்த காட்சியை படத்தில் பாருங்க அப்போது தான் புரியும். இப்பவே சொல்லிட்டா சுவாரஸ்யம் போயிடும் என சிரித்துக் கொண்டே எதையுமே ரிவீல் செய்யவில்லை.

சைக்கிள் விபத்து

சைக்கிள் விபத்து

கடந்த 2019ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஃபைனல்ஸ் எனும் படத்தில் ஒலிம்பிக் போட்டிக்காக சைக்கிள் வீராங்கனையாக நடித்திருந்தேன். அதற்கு முன்பு வரை சைக்கிள் ஓட்டி எனக்கு பழக்கமில்லை. அந்த படத்திற்காக சைக்கிள் பயிற்சி எடுத்து நடித்த போது, ஒரு ரிஸ்க்கான காட்சியின் போது விழுந்து அடிபட்டு விட்டது. ஆனால், அதை பொருட்படுத்தாமல் தான் மற்ற படங்களில் நடனம் உள்ளிட்ட காட்சிகளில் நடித்து வருகிறேன் என்றார்.

ஆஸ்த்துமா

எனக்கு ஏற்கனவே ஆஸ்த்துமா பிரச்சனை இருக்கிறது. ஆனால், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு அது தெரியாது. கர்ணன் படத்தில் ஒரு முக்கியமான காட்சியில் நிஜ மிளகாய் பொடியை வைத்து விட அது, என் மூக்கில் ஏறி ஆஸ்த்துமா பிரச்சனையை வரவழைத்து விட்டது. ஒரு சில மணி துளிகள் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பித்து விட்டேன். அந்த தகவல் திடீரென வைரலாகி என்னால் ஒரு நாள் படப்பிடிப்பே கேன்சல் ஆனதாக எல்லாம் வதந்திகள் பரவின என்றும் ஜாலியாக பேசும் கர்ணன் நாயகி ரஜிஷா விஜயனின் பேட்டியை மறக்காமல் பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X