எக்ஸ்க்ளூசிவ்.. 96, மாஸ்டர், கர்ணன் பட நடிகை கெளரி கிஷன் மாஸ்டர் பத்தி என்ன சொல்றாங்க பாருங்க!

சென்னை: நடிகர் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி ஜானுவாக வந்து ரசிகர்கள் மனங்களை கொள்ளையடித்த நடிகை கெளரி கிஷன், இன்று வெளியாகி உள்ள தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்திலும் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

படத்தின் ஷூட்டிங் தொடங்கியதில் இருந்து இறுதி வரை மாஸ்டர் ஷூட்டிங்கில் பங்கேற்ற நடிகை கெளரி கிஷன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள எக்ஸ்க்ளூசிவ் பேட்டி வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் தனது போர்ஷன் பற்றி மனம் திறந்து பேசும் அவரது பேட்டி வைரலாகி வருகிறது.

குட்டி ஜானு

குட்டி ஜானு

கடந்த 2018ம் ஆண்டு விஜய்சேதுபதி, திரிஷா, ஆதித்யா பாஸ்கர் நடிப்பில் வெளியான 96 படத்தில் குட்டி ஜானுவாக திரிஷாவின் இளமை பருவ கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை கெளரி கிஷன். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கில் சமந்தா நடிப்பில் வெளியான ஜானு படத்திலும் குட்டி ஜானுவாக நடித்து கலக்கினார்.

ஸ்வீட் சிஸ்டர்

ஸ்வீட் சிஸ்டர்

மாஸ்டர் படத்தில் கல்லூரி வாத்தியாராக விஜய் நடித்துள்ள நிலையில், கல்லூரி மாணவியாக நடிகை கெளரி கிஷன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் சாந்தனுவின் ஸ்வீட் சிஸ்டர் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளதாகவும், ஷூட்டிங்கில் மட்டுமின்றி, ஷூட்டிங்கிற்கு பிறகும் சாந்தனு பிரதருடன் சேர்ந்து வெளியே சுற்றுவது சாப்பிடுவது, அரட்டை அடிப்பது என எங்கள் சகோதர பாசம் தொடர்ந்தது என்றார்.

சாந்தனு பற்றிய ரகசியம்

சாந்தனு பற்றிய ரகசியம்

மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்ற குட்டி ஸ்டோரி பாடல் வேற லெவல் ஹிட் ஆனது. சாந்தனுவுடன் பேசும் போது ஏகப்பட்ட குட்டி குட்டி கதைகளை சொல்வார். தந்தை பாக்கியராஜ் போலவே இவருக்கும் கதை சொல்லும் திறமை இயல்பிலே உள்ளது என்கிற ரகசியத்தையும் இந்த பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார் கெளரி கிஷன்.

பார்த்தாலே பயமா இருக்கும்

பார்த்தாலே பயமா இருக்கும்

மாஸ்டர் படத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பு பற்றி உங்களது கருத்து என்ன எனக் கேட்டதற்கு, மாஸ்டர் படத்திற்கு முன்னதாகவே கைதி படத்திலேயே அவர் தன்னை நிரூபித்துள்ளார். இந்த படத்திலும், அவரது ஸ்க்ரீன் ஸ்பேஸை பார்த்தாலே பயமா இருக்கும். வசனமே இல்லாத காட்சிகளிலும், பெரிய விழிகளை உருட்டி மிரட்டி நடிப்பார் எனக் கூறியுள்ளார்.

பாதுகாப்பா பாருங்க

பாதுகாப்பா பாருங்க

மாஸ்டர் படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், தியேட்டர்கள் எல்லாம் திருவிழா கோலம் பூண்டுள்ளன. மாஸ்டர் படத்தை பார்க்க செல்லும் ரசிகர்கள், சமூக இடை வெளியை கடைபிடிப்பது, மாஸ்க் அணிவது என அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின் பற்றி பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் க்யூட்டாக..

சமந்தா மாதிரி

சமந்தா மாதிரி

உங்களை பெரும்பாலும் மறைந்த நடிகை செளந்தர்யா அல்லது நஸ்ரியா போல இருக்கீங்கன்னு சொல்றாங்களே உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு, ஜானு படத்திற்கு பிறகு நடிகை சமந்தா மாதிரி இருக்கேன்னு நிறைய கமெண்ட்டுகள் வந்தன. என் குடும்பமும் அதையே சொன்னாங்க, சமந்தா அளவுக்கு அழகாவா இருக்கோம்னு நினைச்சிப்பேன். அவங்களோட கம்பேர் பண்றது ஹேப்பி என்றார்.

கர்ணனில் புரமோஷன்

கர்ணனில் புரமோஷன்

96 படத்தில் பள்ளி மாணவியாக நடித்து கெளரி கிஷன், மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக புரமோஷன் ஆகி உள்ளார். அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் திரைப்படத்தில் ஏதாவது புரமோஷன் இருக்கா? என்று கேட்டதற்கு, கண்டிப்பா இருக்கு, அது ஒரு சூப்பரான ரோல், இப்போதைக்கு எதையும் ரிவீல் பண்ண முடியாது என்று சிரித்தபடியே கூறும் பேட்டியை கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X