தமிழ்நாட்டுக்கு மருமகளா வர ஆசை.. டெங்கு ஜுரத்துடன் சுல்தானில் நடித்தேன்.. ராஷ்மிகா எக்ஸ்க்ளூசிவ்!

சென்னை: சுல்தான் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகி உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பேட்டி வெளியாகி உள்ளது.

Recommended Video

சூப்பர்ஸ்டார் பட்டம் எனக்கு வேண்டாம் |Actress Rashmika Mandanna Interview|Filmibeat Tamil

இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளியான படம் சுல்தான்.

பக்கா கமர்ஷியல் படமாக வெளியாகி உள்ள சுல்தான் படம் தியேட்டர்களில் வசூல் மழையை குவித்து வருகிறது.

தமிழில் அறிமுகம்

தமிழில் அறிமுகம்

பெங்களூருவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னடம், தெலுங்கு, இந்தி மற்றும் தமிழ் என 4 மொழிகளிலும் நடித்து வருகிறார். சுல்தான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி உள்ள ராஷ்மிகா, பிறந்தது பெங்களூருவாக இருந்தாலும், வளர்ந்தது சென்னையில் தான் என்றும் மேலும், அப்பாவுடன் அதிகமாக தமிழ் படங்களையே பார்த்து உள்ளேன் என கொஞ்சும் தமிழில் கஷ்டப்பட்டு பேசியுள்ளார்.

டெங்கு வந்துடுச்சி

டெங்கு வந்துடுச்சி

திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் சுல்தான் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. காய்ச்சல் வந்தாலும், என்னால் படப்பிடிப்பு தடைபடக் கூடாது என்பதற்காக எந்தவொரு நிலையிலும் சமாளித்து நடித்து விடுவேன். அப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது இயக்குநர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் கார்த்தி என் உடம்பு நடுங்குவதை கண்டு பிடித்துவிட்டனர். மருத்துவமனைக்கு சென்று பார்த்தால், எனக்கு டெங்கு ஜுரம் வந்துடுச்சுன்னு மருத்துவர்கள் சொன்னார்கள். இரண்டு, மூன்று நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் நடிக்க வந்துட்டேன் என செம க்யூட்டாக பேசியுள்ளார்.

கார்த்தி ஒரு ஜெம்

கார்த்தி ஒரு ஜெம்

நடிகர் கார்த்தி போன்ற நடிகர்களை காண்பது மிகவும் அரிது. நடிகரை தாண்டி மனிதராகவும் அவர் ஒரு ஜெம் தான். இவரை போன்றவர்கள் உலகம் முழுக்க இருக்க வேண்டும் என்பது தான் எனது ஆசையும் என்ற ராஷ்மிகா, நிறைய விஷயங்களை எனக்கு கார்த்தி கற்றுக் கொடுத்தார் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டு மருமகள்

தமிழ்நாட்டு மருமகள்

கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா இன்னும் சிங்கிளாகத் தான் உள்ளாராம். எந்த மாநிலத்தில் மாப்பிள்ளையை தேட போறீங்க என்கிற கேள்விக்கு, தமிழ்நாட்டு மருமகளாக மாறத் தான் தனக்கு ஆசை என்று சிரித்துக் கொண்டே கூறியுள்ளார். மேலும், நல்ல பையன், தன்னுடன் நல்லா மிங்கிளாகும் ஒரு இளைஞர் கிடைத்தால் கட்டிக்க ரெடி என்றும் ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்துள்ளார்.

சூர்யாவுடன் நடிப்பீங்களா

சூர்யாவுடன் நடிப்பீங்களா

கார்த்தி உடன் நடித்து விட்டீர்கள். அடுத்ததாக நடிகர் சூர்யாவுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா? என்கிற கேள்விக்கு யாரு சார் வேண்டாம்னு சொல்வாங்க, கண்டிப்பா பண்ணுவாங்க, மீண்டும் கார்த்தியுடனே ஒரு படத்திலும் நடிக்கவும் ஆசை என்றும் கூறியுள்ளார் ராஷ்மிகா.

சூப்பர்ஸ்டார் பட்டம்

ஆண்டுக்கு அயராது உழைத்து 5 படங்களுக்கு மேல் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் நேஷனல் கிரஷ் என்கிற பட்டம் ரசிகர்களால் கொடுக்கப்பட்டது. உங்களுக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்தால் என்ன சொல்வீங்க என்கிற கேள்விக்கு, பெரிய கும்பிடாக போடும் ராஷ்மிகா, ஏதோ நான் பாட்டுக்கு நடிச்சிட்டு இருக்கேன் அதுவே போதும். அதெல்லாம் பெரிய பட்டம் என்று கலகலப்பாக பேசும் பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X