twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மதம் மாறியவர்கள் ஜாதியை பயன்படுத்த சட்டத்திலேயே இடம் கிடையாது.. இயக்குநர் மோகன் ஜி பரபரப்பு பேட்டி!

    |

    சென்னை: ருத்ர தாண்டவம் படத்தின் ரிலீசை முன்னிட்டு இயக்குநர் மோகன் ஜி அளித்துள்ள பரபரப்பு பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வைரலாகி வருகிறது.

    Recommended Video

    என் கொள்கைகள் H. RAJA வை நண்பராக்கியது | Director Mohan G Exclusive | #closecall | Filmibeat Tamil

    பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் வரும் அக்டோபர் 1ம் தேதி ருத்ர தாண்டவம் திரைப்படம் ரிலீசாகிறது.

    உன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி! உன்னை பெத்ததுக்கு உங்க அம்மா ரொம்ப பெருமைபடுவாங்க.. கணவர் குறித்து பேசிய நபரை விளாசிய தொகுப்பாளினி!

    திரெளபதி படத்தை தொடர்ந்து இந்த படத்திலும் ரிச்சர்ட் ரிஷி ஹீரோவாக நடித்துள்ளார். ஹீரோயினாக தர்ஷா குப்தா நடித்துள்ளார்.

    ஜாதி டு மதம்

    ஜாதி டு மதம்

    திரெளபதி படத்தில் நாடக காதல் பிரச்சனையை கையில் எடுத்து இயக்கி இருந்த இயக்குநர் மோகன் ஜிக்கு எதிராக ஏகப்பட்ட கண்டனங்கள் மற்றும் சர்ச்சைகள் குவிந்த நிலையில், அடுத்ததாக மத மாற்ற பிரச்சனையை கையில் எடுத்து ருத்ர தாண்டவம் படத்தை இயக்கி உள்ளதாக இந்த பேட்டியில் மோகன் ஜி கூறியுள்ளார்.

    ராதா ரவிஜே ஜெர்க் ஆனார்

    ராதா ரவிஜே ஜெர்க் ஆனார்

    எந்த இடத்திலும் துணிச்சலாக எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசும் நடிகர் ராதா ரவியே இந்த படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை பார்த்து ஜெர்க் ஆனார். இப்படியொரு கதாபாத்திரத்தில் நான் நடித்தே தீரணுமா? என்றே கேட்டுவிட்டார். படத்தில் அவர் பேசும் வசனம் இந்தியளவில் உள்ள பிரச்சனையை எடுத்து உரைக்கும் என்றும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளார்.

    மதமாற்ற பிரச்சனை

    மதமாற்ற பிரச்சனை

    மதமாற்றத்தில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளதை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். நம்முடைய கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிப்பதற்கு எதிராக நடக்கும் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டு காட்டவே இந்த படத்தை இயக்கி உள்ளேன். படத்திற்கு பிரச்சனைகள் வரத் தான் செய்யும் ஆனால், அனைத்தையும் சமாளித்து உண்மையை உரக்க சொல்வேன் எனக் கூறியுள்ளார்.

    சாதியை பயன்படுத்த

    சாதியை பயன்படுத்த

    இந்து மதத்தில் இருந்து கிறிஸ்துவ மதத்திற்கு மதம் மாறினால் கிறிஸ்துவ பிரிவுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் ஏற்கனவே இந்து மதத்தில் அவர்கள் பயன்படுத்திய சாதியை பயன்படுத்த சட்டத்தில் இடமே இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படத்தில் பதிவு செய்துள்ளேன் என பரபரப்பாக பேசிய மோகன் ஜியின் பேட்டி வைரலாகி வருகிறது.

    இஸ்லாமியர்கள் செய்வதில்லை

    இஸ்லாமியர்கள் செய்வதில்லை

    கிறிஸ்துவர்கள் அனைவரையும் கெட்டவர்களாக காட்டுவதோ சித்தரிப்பதோ எனது நோக்கம் இல்லை. புனித பைபிளில் பல நல்ல கோட்பாடுகள் உள்ளன. கிறிஸ்துவ மதத்தில் ஏகப்பட்ட நல்ல மனிதர்கள் உள்ளனர். சில அரசியல் காரணங்களுக்காக மதம் மாற்றும் முயற்சியில் ஈடுபடும் சில மோசடி கும்பலை பற்றி மட்டுமே படம் எடுத்துள்ளேன். எனக்கு தெரிந்தவரை இஸ்லாமியர்கள் யாரும் மதம் மாறிய பின்னரும் சாதியை பயன்படுத்துவது இல்லை என்றும் கூறியுள்ளார்.

    முதல்வர் ஸ்டாலினிடமும்

    முதல்வர் ஸ்டாலினிடமும்

    பாமக தலைவர் ராமதாஸ், எச். ராஜா, எடப்பாடி பழனிசாமி மற்றும் முதல்வர் ஸ்டாலின் என பல அரசியல் தலைவர்களையும் இந்த படத்தை பார்க்க அழைப்பு விடுத்து வருகிறேன். தவறாக எந்த கருத்தையும் பதிவிடவில்லை. அதே போல மற்ற மதத்தையோ, ஜாதியையோ குறை சொல்வது எனது நோக்கமில்லை. என் மதத்தினரை ஏமாற்றி யாரும் மதமாற்றம் செய்யக் கூடாது என்பது மட்டுமே எனது விருப்பம் என மனதில் பட்டதை வெளிப்படையாக இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

    அந்த தர்ஷா குப்தா இல்லை

    குக் வித் கோமாளியில் பார்த்த தர்ஷா குப்தாவை இந்த படத்தில் எதிர்பார்த்து வராதீங்க, இந்த படத்தில் செம வெயிட்டான ரோலில் அவர் நடித்துள்ளார். ரிச்சர்ட் ரிஷியை போலவே தர்ஷா குப்தாவுடனும் இணைந்து இன்னொரு படத்திலும் பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என இயக்குநர் மோகன் ஜி பேசியுள்ள பேட்டி வீடியோவை காண தவறாதீர்கள்.

    English summary
    Rudra Thandavam director G Mohan talks about religious conversion and problems which makes huge problem in India in this interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X