சங்கீதா அவ்ளோ அழகு.. அவங்கள வொர்த் இல்லைன்னு சொல்லலாமா.. விஜய்யின் தவறுகளை அடுக்கிய டெலிபோன் ராஜ்!

சென்னை: வடிவேலுவுடன் சேர்ந்து காமெடி காட்சிகளில் நடித்து கலக்கிய நடிகர் டெலிபோன் ராஜ் சமீப காலமாக வில்லனாகவும் குணசித்ர வேடங்களிலும் நடித்து வருகிறார். விஜய்யை தனக்கு ரொம்பவே பிடிக்கும் என்றும் அவரை திட்டக்கூட மனசு வராது என்றும் சொன்ன டெலிபோன் ராஜ், விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்து செய்து வரும் தவறுகளை பிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில் அடுக்கியுள்ளார்.

திமுகவை எதிர்த்து விஜய் அரசியல் செய்வது சரி கிடையாது என்று பேசிய டெலிபோன் ராஜ் கடந்த தேர்தல் வரை திமுகவுக்கு ஆதரவாகவே விஜய்யின் நிலைப்பாடு இருந்து வந்தது என்றும் கருப்பு சிவப்பு நிறத்தில் சைக்கிள் ஓட்டி தனது ஆதரவை தெரிவித்த விஜய் இப்போ திடீரென திமுகவை தீயசக்தி என சொல்வது எல்லாம் வேடிக்கையாகவே பார்க்கப்படுகிறது என விளாசி உள்ளார்.

Exclusive Interview Telephone Raj list out the Mistakes done by Actor and TVK Head Vijay

மேலும், விஜய்யை எந்தளவுக்கு காதலித்து இருந்தால் வெளிநாட்டில் இருந்து எப்படியாவது விஜய்யை சந்தித்துப் பேசி திருமணம் செய்துவிட வேண்டும் என்கிற முடிவுடன் வந்து திருமணம் செய்திருப்பார் சங்கீதா. அவரை போய் வொர்த் இல்லைன்னு சொல்லலாமா? என டெலிபோன் ராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்மா, அப்பாவை அநாதையா விட்டுட்டாரு: விஜய் தனது அப்பாவுக்கு எதிராகவே வழக்கு தொடுத்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதன் பின்னர் 60ம் கல்யாணத்தைக் கூட அவர்கள் இருவரும் மட்டுமே ஏதோ அநாதைகள் போல தனியாக நின்று செய்ததை பார்க்கும் போது அவ்வளவு மன வேடனையாக உள்ளது. சாதாரண டிவி நடிகர்கள் கூட தங்களின் சொந்தக்காரங்களின் விசேஷ நிகழ்ச்சிகளை செம கிராண்டாக நடத்தி வரும் நிலையில், விஜய் அம்மா, அப்பாவை அம்போன்னு விட்டது சரி கிடையாது என்றார்.

மனைவியை வொர்த் இல்லைன்னு சொல்லலாமா?: விஜய்க்கு ஆன் ஸ்க்ரீன் ஜோடி யாரு நல்லா இருப்பாங்கன்னு கேட்கும் போது கூட ஜெனிலியா என அவ்ளோ அழகா சொல்லுவாங்க சங்கீதா. விஜய்யை திருமணம் செய்ய வேண்டும் என விரும்பிய அவரது ரசிகை அவரை எந்தளவுக்கு காதலித்து இருந்தால் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு வந்து அவரது வீட்டுக்குள் ஒருவராக நுழைந்து திருமணம் செய்திருப்பார். மேலும், இத்தனை ஆண்டுகள் இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்து நல்லா வளர்த்து வரும் அவரை போய் வொர்த் இல்லைன்னு விஜய் சொன்னது முற்றிலும் தவறு என டெலிபோன் ராஜ் கண்டித்துள்ளார்.

பதவி ஆசை வந்துடுச்சு: விஜய் அரசியலுக்கு வந்தது மக்களுக்கு நன்மை செய்யவெல்லாம் கிடையாது. சினிமாவில் எல்லா உச்சத்தையும் பார்த்தாச்சு. அடுத்து, அரசியலுக்கு சென்றால் முதல்வர் ஆகிவிடலாம் என்கிற பதவி ஆசை தான் ஒரே காரணம். ஆனால், விஜய்யால் 75 ஆண்டுகளாக வேரூன்றி மலை போல இருக்கும் திமுகவை அசைத்து பார்க்கவே முடியாது. தனது மகளின் பட்டமளிப்பு விழாவுக்கு கூட விஜய் போகாமல் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது சகோதரிக்காக சென்றதை எல்லாம் பார்க்கும் போது விஜய் தொடர்ந்து அடுக்கடுக்காக பல தவறுகளை செய்து வருகிறார் என்றே தோன்றுகிறது என பேட்டியளித்துள்ளார். அவரது வீடியோவை காண வீடியோ லின்க்கை க்ளிக் செய்யுங்க..

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X