twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வர் ஸ்டாலினுக்கு பிடிச்ச டிஷ் என்ன தெரியுமா?...இயக்குநர் டி.பி.கஜேந்திரன் கலகல பேட்டி

    |

    சென்னை: இயக்குநரும் குணசித்ர நடிகருமான டி.பி. கஜேந்திரன் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கல்லூரியில் படித்த நண்பர்.

    Recommended Video

    ஸ்டாலின் படாத கஷ்டங்கள் கிடையாது | T. P. Gajendran Exclusive part -01| Filmibeat Tamil

    விசு, கே.ஆர். விஜயா நடிப்பில் கடந்த 1988ம் ஆண்டு வெளியான வீடு மனைவி மக்கள் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் டி.பி. கஜேந்திரன்.

    கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்புடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகை கைது.. குவியும் கண்டனம்! கோவிலுக்கு சொந்தமான பாம்பு படகில் செருப்புடன் போட்டோ ஷூட் நடத்திய நடிகை கைது.. குவியும் கண்டனம்!

    ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு டி.பி. கஜேந்திரன் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் முதல்வர் ஸ்டாலின் உடன் கல்லூரி காலங்களில் பழகிய நாட்கள் குறித்து விரிவாக பேசியுள்ளார்.

    டி.பி. கஜேந்திரன்

    டி.பி. கஜேந்திரன்

    1988ம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கி உள்ளார் இயக்குநர் டி.பி. கஜேந்திரன். வீடு மனைவி மக்கள், எங்க ஊரு காவல்காரன், நல்ல காலம் பொறந்துடுச்சு, பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், சீனா தானா, மகனே என் மருமகனே என ஏகப்பட்ட படங்களை இயக்கி உள்ளார்.

    நடிகராக

    நடிகராக

    1985ம் ஆண்டு சிதம்பர ரகசியம் படத்தில் நடிக்க ஆரம்பித்த டி.பி. கஜேந்திரன் பிரியமுடன், பம்மல் கே சம்பந்தம், சொக்க தங்கம், பிதாமகன், திருமலை, இயற்கை, மன்மதன், மஜா, பானா காத்தாடி, வேலாயுதம், கனவு வாரியம், ஓவியாவ விட்டா யாரு என ஏகப்பட்ட படங்களில் நகைச்சுவை கலந்த குணசித்ர கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

    மு.க. ஸ்டாலின் நண்பர்

    மு.க. ஸ்டாலின் நண்பர்

    தமிழ்நாடு முதல்வராக செயலாற்றி வரும் மு.க.ஸ்டாலினும் டி.பி. கஜேந்திரனும் கல்லூரி நண்பர்கள். ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு இயக்குநர் டி.பி. கஜேந்திரன் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் மு.க. ஸ்டாலின் உடன் கல்லூரியில் பழகிய நாட்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை மனம் திறந்து பேசியுள்ளார்.

    பிடித்த இடம்

    பிடித்த இடம்

    முதல்வர் ஸ்டாலினுக்கும் தனக்கும் சென்னையில் ரொம்பவே பிடித்த இடம் என்றால் அது மெரினா பீச் தான் என பேசிய டி.பி. கஜேந்திரன் அந்த கடற்கரையில் தான் பல உரையாடல்களை நிகழ்த்தி உள்ளோம் என்றும் அந்த நாள் ஞாபகங்களில் மூழ்கியபடி சில ருசிகர தகவல்களையும் கூறி உள்ளார்.

    சமோசாவும் டீயும்

    சமோசாவும் டீயும்

    மேலும், மெரினா கடற்கரை அருகே அப்போது இருந்த புஹாரி ஹோட்டல் சமோசா மற்றும் டீயும் தான் எங்களுடைய ஃபேவரைட் உணவு என்றும் இப்போ அந்த ஹோட்டல் அந்த இடத்தில் இருக்கா? இல்லையான்னு தெரியல என்று கூறினார்.

    நேரில் வந்து பார்த்தார்

    நேரில் வந்து பார்த்தார்

    விரைவில் 70வது பிறந்தநாளை கொண்டாட உள்ள இயக்குநர் டி.பி. கஜேந்திரன் சமீபத்தில் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கல்லூரி கால நண்பரை நேரில் சந்தித்து பார்த்த நிகழ்வுகளையும் இந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

    மிடில் கிளாஸ் மாதவன் பார்ட் 2

    மிடில் கிளாஸ் மாதவன் பார்ட் 2

    மீண்டும் படம் இயக்குவீர்களா? உங்கள் இயக்கத்தில் பட்ஜெட் பத்மநாபன் மற்றும் மிடில் கிளாஸ் மாதவன் படங்களின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என்கிற கேள்விகளை கேட்டவுடன் பழைய சுறுசுறுப்புக்கு வந்த டி.பி. கஜேந்திரன் மிடில் கிளாஸ் மாதவன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி கொண்டிருப்பதாகவும் விரைவில் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறி அசத்தினார்.

    விஜய்சேதுபதி உடன்

    இன்றைய கால இளம் நடிகர்களான சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி உடன் படம் பண்ணுவீர்களா? என்ற கேள்விக்கு விஜய்சேதுபதியை கண்டிப்பாக இயக்குவேன் என அதிரடியாக கூறியுள்ள டி.பி. கஜேந்திரனின் பிரத்யேக பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

    English summary
    Director and Supporting actor TP Gajendran’s exclusive interview first part is here. TP Gajendran who is a college friend of CM Stalin reveals lot about their college days memories.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X