Don't Miss!
- News
அடடே .. பீகாரில் இனி நிலையான அரசு தொடரும்... நிதிஷ்குமாரை ஓஹோவென பாராட்டிய பிரசாந்த் கிஷோர்!
- Finance
குழந்தை, வேலை எனது அற்புதமான இரட்டையர்கள்.... எடெல்வீஸ் MD ராதிகா குப்தா!
- Lifestyle
ஆண்களைப் பற்றிய இந்த ரகசியங்களை பெண்கள் ஒருபோதும் தெரிந்து கொள்ள முடியாதாம்... அது என்னென்ன தெரியுமா?
- Sports
"நீங்களே இப்படி செய்யலாமா".. இந்திய மகளிர் அணி குறித்து கங்குலி போட்ட ட்வீட்.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology
Jio சுதந்திர தின ஆபர்: 75GB FREE டேட்டாவுடன் சிங்கிள் ரீசார்ஜ்ல டபுள் நன்மைகள்!
- Automobiles
ரூ.27.7 லட்சத்திற்கு அடாஸ் அம்த்துடன் ஹூண்டாய் டூஸான் விற்பனைக்கு அறிமுகம்... செம்ம ஸ்டைலா இருக்கு!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
செஃப் தாமுவின் ஆசையை நிறைவேற்றுவாரா அஜித் ? அஜித்துக்கு பிடிச்ச டிஷ் செஞ்சி தர தாமு ரெடி
சென்னை: இந்தியாவிலேயே ஹோட்டல் மேனேஜ்மெண்ட் அண்டு கேட்டரிங் டெக்னாலஜியில் பிஹெச்டி பெற்ற முதல் செஃப், அனைவரும் நன்கு அறிந்த செஃப் தாமு என்ற தாமோதரன். உலக நாடுகள் பல சென்று நம் தென்னிந்திய உணவு வகைகளை கொண்டு சேர்த்திருக்கிறார்.
தன் 50வது வயதில் இடைவெளி இல்லாமல், 24 மணி நேரம், 30 நிமிஷம்,12 நொடிகள் கிட்டத்தட்ட 617 உணவு வகைகள் சமைத்து கின்னஸ் ரெக்கார்ட் செய்தவர்.
தற்போது சமையல் நிகழ்ச்சிகளுடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நமது ஃபிலிம் பீட் சேனலுக்காக அவர் கொடுத்த சுவையான பதில்கள் இதோ, உங்களுக்காக சுடச்சுட..
நடிக்க நான் ரெடி, ரசிக்க நீங்க ரெடியா?
கேள்வி : " உங்கள் சமையல் கலை தாண்டி, நடிப்பு பயணம் எப்படி போயிட்டு இருக்கு"
பதில் : குக் வித் கோமாளி டீம்- எல்லாருமே இன்னைக்கு படங்கள்ல நடிச்சிட்டு இருக்காங்க. பாக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு. எல்லாருக்கும் வாழ்த்துக்கள். சினிமாவுல நானும் நாலு படம் நடிச்சிருக்கேன். உள்குத்து,அரவான், சந்தானம் நடிச்ச சர்வர்சுந்தரம், ஒரு பக்க கதை படத்தில லாயரா நடிச்சிருந்தேன். இன்னும் நிறைய படங்கள் நடிக்க ரெடி.. வாய்ப்பும் நல்ல கேரக்டரும் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன். காத்திருக்கேன். நடிக்க நான் ரெடி, அதை ரசிக்க ருசிக்க நீங்க ரெடியா என்ற பாணியில் சிரித்தார் .

இந்த இடங்கள மிஸ் பண்ணாதீங்க
கேள்வி: சென்னையில உங்களுக்கு பிடிச்ச, மிஸ் பண்ண கூடாத உணவகங்கள் சொல்லுங்களேன்.
பதில் : "சென்னையிலயே சாப்பாட்டுல ஐ.கான்-ன்னு சொன்னா அது தோசை வடகறிதான். அது சிறப்பா கிடைக்கும் இடம் சைதாப்பேட்டை மாரி ஹோட்டல். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறையா வச்சிருக்காங்க. பெரிய தோசயா செஞ்சி, அதுல வடகறி, சட்னி வச்சி, மடிச்சி தருவாங்க. தோசையில அந்த வடகறி ஊறி இருக்கும். தோசைய அப்படியே கிள்ளி சாப்பிடும் போது அவ்ளோ டேஸ்ட்டா அலாதியா இருக்கும். வடகரி ஸ்பெஷல்-ன்னாலே அது சைதாப்பேட்டை மாரி ஹோட்டல்தான்.அடுத்ததா, தி.நகர் ல விருதுநகர் ஹோட்டல்-ல கல்தோசை ஆட்டுக்கால் பாயா. அவ்ளோ அருமையா இருக்கும். சூடா சாப்பிடும் போது, எத்தன கல்தோசை உள்ள போகுதுன்னே தெரியாது. அவ்ளோ சூப்பரா இருக்கும்.அன்னலட்சுமி,சங்கீதா, டைனாசிட்டி ரெஸ்டாரெண்ட்ல எல்லாமே வெஜிடேரியன் சாப்பாடு ரொம்பவே நல்லாருக்கும்.

தாமுவின் ஃபேவரைட்
கேள்வி: உங்களுக்கு ரொம்ப பிடிச்ச மெனு எது?
பதில்: " என்னோட ஃபேவரைட் ரெண்டு. முதல்ல தயிர்சாதம்+சுண்டைக்காய் வத்தக்குழம்பு காமிபினேஷன் ரொம்ப பிரமாதமா இருக்கும். அடுத்தது, தயிர்சாதம்+மீன்கறி. ரொம்ப நல்லாருக்கும்.
கேள்வி: "அந்த காமினேஷன் சாப்பிட கூடாதுன்னு சொல்றாங்களே?"
பதில் : "அப்படியெல்லாம் இல்லங்க.. நான் நல்லாதான இருக்கேன். எல்லாம் சாப்பிடலாம். யாராச்சும் ஒரு சிலருக்கு ஒத்துகாம இருக்கலாம். அவ்வளவுதான். ஜீரனம் ஆகாது, நைட் ல சாப்பிட கூடாதுன்னுல்லாம் இல்ல.. கூடவே வெண் பொங்கல் + மீன்கறி அதுவும் ரொம்ப பிரமாதமா இருக்கும்.

எந்த மீடியாவுலயும் சொன்னதில்ல
கேள்வி : "எந்த செலிப்ரிட்டிக்கு சமைச்சி தரனும்ன்னு ஆசப்படறீங்க?"
பதில்: "அஜித் ரொம்ப அருமையா பிரியாணி செய்வாருன்னு எல்லாருக்கும் தெரியும். அவர் சமையல் ல ரொம்ப ஆர்வம் உள்ளவர். அவருக்கு பிடிச்ச ஒரு டிஷ் நான் செஞ்சி தரனும்ன்னு ஆசப்படறேன். இது வரைக்கும் எந்த மீடியாவுலயும் சொன்னதில்ல.. இப்பதான் முதல் தடவையா நம்ம ஃபிலிம்பீட் மூலமா சொல்றேன்"
என சொல்லி அகமகிழ்ந்தார் செஃப் தாமு.

மகிழ்வித்து மகிழ்ந்த
பலரையும் மகிழ்வித்து மகிழும் செஃப் தாமுவின் ஆசை, நிச்சயம் நிறைவேறும். அஜித்க்கு உங்கள் கையாலேயே சமைத்து தருவீர்கள். நிறைய படங்களிலும் நடிப்பீர்கள். வாழ்த்துக்கள் என்று வாழ்த்தியது, அவரைப்போலவே மகிழ்வித்து மகிழ்ந்த சந்தோசம் கிடைத்தது . இந்த விடியோவை காண பில்மிபீட் யூட்யூப் லிங்கை https://youtu.be/dstmF1CtHRE கிளிக் செய்து ஸ்வாரஸ்யமாக பேசும் தாமுவின் பேட்டியை எளிதில் காணலாம்