எத்தனையோ தடவை அரை நிர்வாணமா நடிச்சிருக்கேன்.. இரண்டாம் குத்து நடிகர் டேனியலின் கசமுசா பேட்டி!
சென்னை: இரண்டாம் குத்து படத்தில் நாயகன் சந்தோஷ் பி. ஜெயக்குமாருக்கு அடுத்தபடியாக செகண்ட் ஹீரோவாகவும், காமெடியனாகவும் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியின் ஜாலி பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
ஏகப்பட்ட எதிர்ப்புகளையும் மீறி வெளியான இரண்டாம் குத்து படம் தியேட்டர்களில் இந்த கொரோனா காலத்திலும் நல்ல வசூல் செய்து முரட்டு வெற்றி பெற்றுள்ளது.
இரண்டாம் குத்து படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து இந்த பேட்டியில் டேனியல் மனம் திறந்து பேசி உள்ளார்.

வெறும் பேப்பர் தான் டிரெஸ்
இரண்டாம் குத்து படத்தின் போஸ்டர்கள் வெளியாகி மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் மூலம் பிரபலமான டேனியல் போப், அவரது ஜோடியுடன் நிர்வாணமாக வெறும் பேப்பரை சுற்றிக் கொண்டு நிற்கும் போஸ்டர் பெரும் சர்ச்சையை கிளப்பி வைரலானது.

அரை நிர்வாணமாக
தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டான டேனி, ஏகப்பட்ட வீதி நாடகங்களுக்காக அரை நிர்வாணமாக கோடம்பாக்கம் ஏரியாக்களில் நடித்துள்ளேன். இந்த படத்தில் நடிப்பது எனக்கு எந்த இடத்திலும் அசெளகரியமாக இல்லை. நடிக்க வந்திருக்கோம். நாளைக்கே ராஜா கேரக்டர் கிடைச்சா ராஜாவா நடிப்பேன். பிச்சைக்காரன் கேரக்டர் கிடைச்சா பிச்சைக்காரனா நடிப்பேன் என கேஷுவலாக பேசினார்.

ரொம்ப செக்ஸியான சீன்
இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அழைத்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனேன். அப்புறம் இதுவும் படம் தானே என நடிக்க ஒப்புக் கொண்டேன். ரொம்பவே செக்ஸியான சீன்ல எல்லாம் நான் நடிக்கவே இல்லை. எல்லாம் படத்தை பிசினஸ் பண்றதுக்கு உண்டான ஜிகினா வேலை போஸ்டர்களில் மட்டுமே அப்படியெல்லாம் இருக்கும், படம் வேற மாதிரி ஜாலியா இருக்கும் என்றார்.
எதிர்ப்பு தெரிவிங்க
முதல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பயங்கர ஹிட் ஆகிடுச்சு, இரண்டாம் பாகத்திற்கும் எதிர்ப்புகள் வருது, எல்லாம் இயக்குநர் எதிர்பார்த்த மாதிரியே அவருக்கு சாதகமாகத்தான் வருது. எதிர்ப்பு தெரிவிங்க, வேண்டாம்னு சொல்லல, ஆனால், இந்த ஜானர் படங்களையும் பார்க்க இளைஞர்கள், ரசிகர்கள் இருக்காங்க, பிடிக்காதவங்க தாராளமா ஸ்கிப் பண்ணிட்டு போகலாம் எனவும் தெளிவாக பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











