ரஜினி என்ன அப்படி கூப்பிடுவாரு.. கமல் என்கிட்ட அதைப் பத்தி கேட்டாரு.. நடிகை ஜெயமாலினி பேட்டி!
சென்னை: கிட்டத்தட்ட 500 படங்களுக்கு மேல் நடித்த கவர்ச்சி நடிகை ஜெயமாலினி அளித்துள்ள பிரத்யேக பேட்டி வெளியாகி உள்ளது.
Recommended Video
பொதுவாகவே அதிகம் பேசாமல் தனது படங்கள் மூலம் பேசும் ஜெயமாலினி தனது சினிமா அனுபவங்கள் குறித்து மிகவும் மனம் திறந்து ரொம்ப ஓப்பனாக பேசியுள்ள பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் கலக்கி வரும் ஜெயமாலினி இந்த பேட்டியில் எம்.ஜி.ஆர், ரஜினி மற்றும் கமல் குறித்தும் பல சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ளார்.

கவர்ச்சி ராணி
பன்னிரண்டு வயதில் சினிமாவில் பாடலுக்கு நடனமாட ஆரம்பித்த ஜெயமாலினி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கவர்ச்சி ராணியாக இந்திய சினிமாவில் கலக்கி உள்ளார்.

சொர்க்கத்தில் திருமணம்
நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் லதா நடிப்பில் வெளியான சொர்கத்தில் திருமணம் படம் தான் ஜெயமாலினி நடித்த முதல் திரைப்படம் என இந்த பேட்டியில் கூறியுள்ளார். வெறும் இரு காட்சிகளில் மட்டும் அந்த படத்தில் நடித்து சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஜெயமாலினி ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக இன்றும் நினைவு கொள்ளப் படுகிறார்.

விட்டாலாச்சாரியா
பேய் படங்களை எடுத்து மிரட்டிய விட்டாலாச்சாரியாவின் தெலுங்கு படமான ஆடாதானி அதிர்ஷ்டம் எனும் தெலுங்கு படத்தில் முதன் முதலாக கவர்ச்சி நடனம் ஆடி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ஜெயமாலினி, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் கவர்ச்சி நடிகையாக கலக்கினார்.

ஜோதி லட்சுமி
டி.ஆர். ராஜகுமாரியில் தொடங்கி ஏகப்பட்டபேர் இவருக்கு முன்பே இவரது குடும்பத்தில் இருந்து சினிமாவுக்குள் கால்பதித்து சாதித்துள்ளனர். இவரும் இவரது சகோதரி ஜோதி லட்சுமியும் கவர்ச்சி நடிகைகளாக மீண்டும் சினிமா உலகை ஒரு கலக்கு கலக்கினர்.

அம்மா பேச்சை தட்ட மாட்டேன்
விட்டாலாச்சாரியா படத்தில் நடிக்க கேட்டபோது அம்மா சற்றுத் தயங்கினார். 12 வயசு தானே ஆகுதுன்னு, அதன் பின்னர் இவ்வளவு பெரிய ஆள் கேட்கிறாரே என ஓகே சொல்லி விட்டார். நான் எப்போதுமே அம்மா பேச்சை தட்டியதே இல்லை. அவர் என்ன சொல்கிறாரோ அதை மட்டுமே கேட்டுக் கொண்டு செய்தேன்.

போர்த்திக் கொண்டு
ஸ்பாட்டுக்கு செல்லும் வரை மேலே ஒரு பெரிய ஆடை அல்லது டவல் வைத்து போர்த்திக் கொண்டு தான் இருப்பேன். கேமரா ஆன் ஆனதும், தான் என்ன உடையை அணிய கொடுத்தார்களோ அந்த உடையுடன் நடனமாடி விட்டு மீண்டும் போர்த்திக் கொண்டு ஓரமாக போய் உட்கார்ந்து விடுவேன். யாரிடமும் அதிகம் பேச மாட்டேன் எனக் கூறியுள்ளார்.

பேச வைத்த எம்ஜிஆர்
பொதுவாகவே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். நான் அதிகம் பேச மாட்டேன். ஆடுவது மட்டும் தான் எனக்குத் தெரியும். ஒரு நிகழ்ச்சி ஒன்றில் திடீரென எம்ஜிஆர் என்னை அழைத்து நன்றி உரை பேச சொல்லிவிட்டார். அவர் சொல்லி எப்படி மறுப்பது. மாதா, பிதா, குரு மற்றும் தெய்வத்தை மதிக்க வேண்டும் அப்போது தான் வாழ்வில் முன்னேற முடியும் என எம்ஜிஆர் எனக்கு சொல்லிக் கொடுத்ததையும், எனக்கு முன்னால் சினிமாவுக்கு வந்து சாதித்த என் குடும்பத்தினர் பற்றியும் முதன் முதலாக மைக் பிடித்து பேசினேன். எம்ஜிஆர் தான் என்னை பேச வைத்தார் என சூப்பரான தகவலை நம்முடன் பகிர்ந்துள்ளார் ஜெயமாலினி.

ஜகன் மோகினி
இயக்குநர் விட்டாலாச்சாரியா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் 1978ம் ஆண்டு உருவான படம் தான் ஜகன் மோகினி. ஜெயமாலினிக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் அது. அந்த படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் லீடு ரோலிலும் ஜெயமாலினி நடித்து வந்தார்.

ரஜினி வைத்த பட்டப்பெயர்
நான் அதிகம் பேச மாட்டேன் என்பது ரஜினிக்கு தெரியும். என்னை அவர் எப்போதுமே ஊமை என்றும் செட்டில் கேமராவை மூடுவது, மைக்கை ஆஃப் செய்வது என அட்டகாசம் செய்யும் ஸ்ரீபிரியாவை வாயாடி என்றும் அழைப்பார் என்று யாருக்கும் தெரியாத ரகசியத்தையும் கூறியுள்ளார்.
நீங்க தெலுங்கான்னு கேட்டார்
அதே போல கமல் என்னிடம் நீங்க தெலுங்கான்னு கேட்டார். இல்லை நான் தஞ்சாவூர் பொண்ணு தான்னு அவரிடம் சொன்னேன். அவருடனும் சில படங்களில் நடித்துள்ளேன் என ஏகப்பட்ட சுவாரஸ்ய தகவல்களை கூறியுள்ள ஜெயமாலினியின் பேட்டியை காணத் தவறாதீர்கள்!


Click it and Unblock the Notifications











