EXCLUSIVE: காலங்களில் அவள் வசந்தம் படத்தின் வரவேற்பு பிரமிப்பா இருக்கு.. படக்குழுவினர் உற்சாகம் !
சென்னை: அறம் எண்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் ராகவ் மிர்தத் இயக்கத்தில் நடிகை அஞ்சலி நாயர், அறிமுக நடிகர் கௌசிக் ராம், நடிகை ஹிரோஷினி நடிப்பில் உருவாகியுள்ள படம் காலங்களில் அவள் வசந்தம்.
இத்திரைப்படம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் படக்குழுவினர் பிலீம்பீட் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டியை இங்கு காணலாம்

வீடும் ஒரு கதாபாத்திரம்
கேள்வி: இயக்குநர் ராகவ் மிர்தத், காலங்களில் அவள் வசந்தம் படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?
பதில்: படத்திற்கு நன்றாக வரவேற்பு இருக்கிறது. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அனைத்து திரைப்படங்களும் நிறைய பேரின் உழைப்பால தான் உருவாகும். ஆனால் இந்தத் திரைப்படம் அனைவரின் அன்பால் உருவாகியுள்ளது. அந்த அன்பு தான் நிறைய ரசிகர்களை தேடித் தந்திருக்கிறது என்றார். இந்தப் படத்திற்காக நிறைய வீடுகளை தேடினோம். அப்பொழுது கிழக்கு கடற்கரை சாலையில் ஒரு வீடு கிடைத்தது. அந்த வீடு தான் ரொம்ப ரொமான்டிகா இருந்தது. அந்த வீட்டோட புவியியல் அமைப்பு அப்படி. அந்த வீடும் படத்தில ஒரு கேரக்டர் மாதிரி தான். நிறைய பிரபலங்கள் இயக்கிய படங்களும், நிறைய பிரபலங்கள் நடித்து வெளிவரும் படங்களுக்கு மத்தியில் எங்கள் படம் வெளிவந்தது எங்களுக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது. மேலும் இந்த அக்டோபர் மாதத்திற்கு விடை கொடுப்பது எங்கள் திரைப்படம் தான் என்றார்.

நம்பி வாய்ப்பு கொடுத்தார்கள்
கேள்வி: ராகவ், இப்படத்திற்கான வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது?
பதில்: புதுகதை, புது டெக்னிஷியன் இந்த மாதிரி சூழ்நிலையில யாரும் படம் எடுக்க யோசிப்பார்கள். ஆனா, அறம் எண்டர்டெயிண்மெண்டும், ஸ்ரீ அண்ட் ஸ்ரீ ஸ்டுடியோஸ்ம் கதையை மட்டுமே நம்பி எங்களுக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரசிகர்கள் அன்பானவர்கள்
கேள்வி: கௌசிக், படத்திற்கு வரவேற்பு... உங்கள் பார்வையில்...
பதில்: எனக்கு இது முதல் படம், அதனால் ரொம்ப பிரமிப்பாக இருக்கிறது. நானும் இப்பொழுது காலேஜ் முடித்தேன். இதனால் மாணவர்களிடையே ஈஸியாக கனெக்ட் ஆக முடிந்தது. ரசிகர்கள் ரொம்பவும் அன்பானவர்கள். புதுமுகமான எனக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் கொடுத்திருக்கிறார்கள் என்றார்.

என்னுடைய காட்சி குறைவு
கேள்வி: ஹிரோஷினி, படத்திற்கு வரவேற்பு... உங்கள் பார்வையில்...
பதில்: இந்தப் படம் என்னோட முதல்படம். முதல் படத்திலேயே எனக்கு ரசிகர்களிடையே இவ்வளவு வரவேற்பு கிடைத்திருப்பது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு. படம் வெளிவருவதற்கு முன்பே திருச்சி, கோயம்புத்துர், மதுரை போன்ற இடங்களுக்கு போனோம். எல்லா இடத்திலேயும் டிரைலர், டீசர், பாடல் காட்சிகள் போட்டுக் காட்டும்போது மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இது எங்களுக்கு நிறைய நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. படத்தில் நான் வர்ற காட்சிகள் குறைவு தான். ஆனா படத்தில் எனக்குன்னு தனியான கதை கிடையாது. ராதை, ஷ்யாம் இரண்டு பேருக்குமான கதையில் நான் எப்படி உள்ளே வருகிறேன் என்பது தான். நான் வருகின்ற காட்சிகளை நான் சிறப்பாக செய்யணுங்கறது மட்டும் தான் என் நினைவில் இருந்தது என்றார்.

எனக்கு வைத்த டெஸ்ட்
கேள்வி: ஹரி, உங்கள் பார்வையில் படத்தின் வரவேற்பு எப்படியிருக்கிறது?
பதில்: இந்தப் படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இருக்கிறது. புதிய பாடகர்களை அறிமுகப்படுத்தியிருக்கோம். இந்தப் படத்திற்கான வாய்ப்பு வந்த போது, பப்பாளி- என்கிற வார்த்தையில் ஒரு பாடல் ரெடி பண்ணிட்டு வரச் சொன்னாங்க. அது எனக்கு வச்ச டெஸ்ட். இந்தப் படத்தில் 'எதற்கென்னை சந்தித்தாய்' பாடலை முகேன் பாடியிருக்கிறார். இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/SdVD51KdQVA இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம்.


Click it and Unblock the Notifications