Exclusive: பராசக்தி முன்னாடி வர தயாரிப்பாளர் தான் காரணம்.. 2வது இடத்தில் கூலி.. கமலா தியேட்டர் ஓனர் பேட்டி!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் சென்னை தியேட்டரான கமலா தியேட்டர் ஓனர் விஷ்ணு கமல் ஒன் இந்தியா தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது. இந்த ஆண்டு விஜய் அண்ணா படம் வராதது தனக்கும் மற்ற தியேட்டர் ஓனர்களுக்கும் ரொம்பவே வருத்தம் எனக் கூறியுள்ளார்.

மேலும், கமலா தியேட்டரின் டாப் 5 படங்களின் லிஸ்ட்டையும் பிரத்யேகமாக ரிவீல் செய்துள்ளார். ரீ ரிலீஸ் படங்களுக்கு கே டிவிக்கே டஃப் கொடுக்கும் வகையில் போட்டிப் போட்டு வரும் விஷ்ணு இந்த ஆண்டு படையப்பா ரீ ரிலீஸ் தான் அதிக வசூலை ஈட்டியது.

Exclusive Kamala Theater owner reveals about Parasakthi preponed decision and his top 5 list

கில்லி vs படையப்பா, ஜன நாயகன் vs பராசக்தி, கூலி படத்துக்கு கிடைத்த இடம் என விஷ்ணு வெளிப்படையாக பேசிய பேட்டி குறித்து முழுமையாக இங்கே பார்க்கலாம் வாங்க..

கில்லி vs படையப்பா: இந்த ஆண்டு வெளியான ரீ ரிலீஸ் படங்களில் படையப்பா படம் தான் அதிக வசூலை ஈட்டியது என விஷ்ணு ஓபன் செய்துள்ளார். சச்சின், குஷி உள்ளிட்ட படங்கள் படையப்பா படத்தை விட வசூல் சற்றே குறைவு தான் எனக் கூறிய அவரிடம், கில்லி vs படையப்பா என்கிற கேள்வியை தொகுப்பாளினி முன் வைக்க கில்லி தான் அதிக வசூல் ஈட்டியது. அதன் பிறகு தான் படையப்பா என்று ஹானஸ்ட்டாக பதில் அளித்துள்ளார்.

கூலிக்கு எந்த இடம்: இந்த ஆண்டு ஒவ்வொரு தியேட்டர்களும் தங்களின் டாப் 10 படங்கள் லிஸ்ட்டை வெளியிட்டு வரும் நிலையில், கமலா சினிமாவின் டாப் 5 ஃபூட் ஃபால் லிஸ்ட் மற்றும் பாக்ஸ் ஆபீஸ் கிராஸ் லிஸ்ட்டை பிலிமிபீட் நேயர்களுக்காக கூறியுள்ளார் விஷ்ணு.

Exclusive Kamala Theater owner reveals about Parasakthi preponed decision and his top 5 list

ஃபூட் ஃபால் லிஸ்ட்:

5. காந்தாரா சாப்டர் 1
4. தலைவன் தலைவி
3. குட் பேட் அக்லி
2. கூலி
1. டிராகன்

பாக்ஸ் ஆபீஸ் கிராஸ் லிஸ்ட்

5. காந்தாரா சாப்டர் 1
4. தலைவன் தலைவி
3. டிராகன்
2. குட் பேட் அக்லி
1. கூலி

பராசக்தி ப்ரீபோன்ட் ஏன்?: ஜன நாயகன் படம் 9ம் தேதி வருகிறது, பராசக்தி 14 வருகிறது என ரொம்பவே சந்தோஷத்தில் இருந்தோம். விஜய் அண்ணாவோட கடைசி படம் என்பதால் ஃபேர்வெல் சிறப்பாக இருக்கும் என ஆசைப்பட்டோம். ஆனால், பராசக்தி படம் முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறது. பொங்கல் விடுமுறை பெரிது என்பதால், பெரிதாக எந்தவொரு பாதிப்பும் வராது. பராசக்தி முன்கூட்டியே ரிலீஸ் ஆவது முற்றிலும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் முடிவு தான் என கமலா தியேட்டர் ஓனர் கூறியுள்ளார். அவரது வீடியோ பேட்டியை மறக்காமல் பார்த்து ரசியுங்கள்.. மேலும், பல விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X