ஸ்ட்ரெஸ் பஸ்டர் இவங்க தான்.. கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவியுடன் அளித்துள்ள கலக்கல் பேட்டி!
சென்னை: இதுவரை 47 சூப்பர் ஹிட் படங்களை இயக்கி உள்ள இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவி கற்பகத்துடன் அளித்துள்ள பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.
தெனாலி படத்திற்கு கூகுள் குட்டப்பன் படத்தை கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவியுடன் இணைந்து தயாரிக்கிறார்.
பிக் பாஸ் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் இணைந்து இந்த படத்தில் நடிக்கவுள்ளனர்.

லாஸ்லியா தர்ஷன் படம்
மலையாளத்தில் வெளியான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக தமிழில் கூகுள் குட்டப்பன் படம் உருவாகிறது. இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் நடிக்கவுள்ளனர். இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தனது சொந்த பேனரில் இந்த படத்தை தயாரிக்கிறார்.
மனைவியுடன் பேட்டி
ஆர்.கே தயாரிப்பு நிறுவனத்திற்கு அர்த்தமே ஆர். கற்பகம் தான் என இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தனது மனைவியுடன் இந்த பேட்டியில் கூறியுள்ளார். தெனாலி படத்திற்கு பிறகு 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படத்தை இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி பண்ண சொன்னார்
நான் ஹேராம் தயாரித்து இயக்குகிறேன், நீங்க தெனாலி படத்தை தயாரித்து இயக்கலாமே என கமல்ஹாசன் என்னிடம் கேட்டது பற்றி ரஜினியிடம் ஆலோசனை செய்தேன். யோசிக்கவே யோசிக்காதீங்க, உடனே கமலுக்கு அட்வான்ஸ் கொடுத்து படத்தை ஆரம்பியுங்க என ரஜினி சொன்ன அரிய தகவலையும் இந்த பேட்டியில் கே.எஸ். ரவிக்குமார் ஷேர் செய்துள்ளார்.

ஸ்ட்ரெஸ் பஸ்டர்
47 படங்களை எப்படி செய்தேன் என பலரும் கேட்டனர். அதற்கெல்லாம் இவங்க தான் காரணம். குடும்ப பிரச்சனையை என் மைண்டுக்கு கொண்டு வராமல், இத்தனை ஆண்டுக்ள் குடும்பத்தை நடத்திய பொறுமையின் சிகரம் என்றார். கே.எஸ். ரவிக்குமாரின் டென்ஷனை தணிக்கும் ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது தனக்கு பெருமை என அவரது மனைவியும் பேசியுள்ள அரிதான பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!


Click it and Unblock the Notifications











