விவேக் சார் நம்மிடையே இல்லைங்கிறத மறந்து சிரிப்பீங்க.. LOL காமெடி டீம் கலக்கல் பேட்டி!

சென்னை: அமேசான் பிரைமில் வரும் செப்டம்பர் 27ம் தேதி LOL எங்கே சிரி பார்ப்போம் என்கிற கலக்கலான ஷோ ஒளிபரப்பாக உள்ளது.

மறைந்த சின்னக் கலைவாணர் விவேக்கின் கடைசி காமெடி நிகழ்ச்சியான இதில் பத்துக்கும் மேற்பட்ட காமெடியன்கள் கலந்து கொள்கின்றனர்.

பிரபல நடிகர்களும் ஸ்டாண்ட் அப் காமெடியன்களும் சிரிக்காமல் ரசிகர்களை சிரிக்க வைக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் அட்டகாசமான கான்சப்டே, அப்படி நம்மை சிரிக்க வைக்கப் போகும் LOL காமெடி டீமுடன் நடத்திய பிரத்யேக பேட்டியின் வீடியோ தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி வைரலாகி வருகிறது.

விவேக்கின் கடைசி ஷோ

சின்னக் கலைவாணர் என மக்களால் போற்றப்பட்ட காமெடி நடிகர் விவேக் திடீர் மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவரது மறைவு ஒட்டுமொத்த சினிமா உலகையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், கடைசியாக அவர் நடத்திய காமெடி ஷோ நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 27 முதல் அமேசான் பிரைமில் வெளியாகிறது.

நடுவராக விவேக்

நடுவராக விவேக்

ஆர்த்தி, மாயா, அபிஷேக், பிரேம்ஜி, ஷாமா, குக் வித் கோமாளி பிரபலம் புகழ் உள்ளிட்ட பல காமெடியன்கள் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சிக்கு நடுவராக நடிகர் விவேக் கலக்கி உள்ளார். அவருடன் இணைந்து அகில உலக சூப்பர்ஸ்டார் மிர்ச்சி சிவாவும் நடுவர் பணியை ஆற்றி உள்ளார். முதலில் சிரிக்கும் காமெடியன்களுக்கு ரெட் சிக்னல் கொடுத்து வெளியே அனுப்புவது தான் இவர்கள் வேலையே..

முதல்வரை எப்படி சிரிக்க வைப்பீங்க

முதல்வரை எப்படி சிரிக்க வைப்பீங்க

இந்த பேட்டியில் காமெடி நடிகை ஆர்த்தி, மாயா மற்றும் காமிக்ஸ்தான் வின்னர் அபிஷேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆரம்பமே செம டஃப் கேள்வியாக தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் திடீரென ஒரு அறைக்கு வருகிறார். அவரை நீங்கள் சிரிக்க வைக்க வேண்டும் என்ன பண்ணுவீங்கன்னு கேட்டதும் அபிஷேக் அய்யா ஆளைவிட்டுடுங்க சாமி என்கிற அளவுக்கு ஜகா வாங்கினார்.

ஒன்றிய அரசு கவிழ்ந்துடுச்சு

ஒன்றிய அரசு கவிழ்ந்துடுச்சு

ஆனால், அந்த கேள்விக்கு கொஞ்சமும் தயக்கம் காட்டாமல் எப்போதுமே சரவெடி பதில் அளித்து வரும் நடிகை ஆர்த்தி ஒன்றிய அரசு கவிழ்ந்துடுச்சுன்னு சொல்வேன் உடனே முதல்வர் சிரித்து விடுவார் என அட்டகாசம் செய்த ஆர்த்தி நடிகர் விவேக் குறித்து பேசும் போது, அப்படியொரு ஆளுமை நம்மிடையே இல்லை என்பதை மறந்து அனைவரும் சிரிக்கும் அளவுக்கு இந்த ஷோ இருக்கும் என நெகிழ்ந்து பேசினார்.

மாயா ஹாப்பி

மாயா ஹாப்பி

விவேக் சார் போன்ற லெஜண்டுடன் வேலை செய்தது தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என மாயா இந்த கூறியுள்ளார். அதே போல அபிஷேக்கும் இப்படியொரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த அமேசான் பிரைமுக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார். மூவரும் இணைந்து அடித்துள்ள ஏகப்பட்ட ரகளைகளை வீடியோவில் மிஸ் பண்ணாம பாருங்க!

காமிக்ஸ்தானை தொடர்ந்து

காமிக்ஸ்தானை தொடர்ந்து

காமிக்ஸ்தானை தொடர்ந்து அமேசான் பிரைமில் வெளியாகவுள்ள இந்த கலக்கலான LOL எங்கே சிரி பார்ப்போம் நிகழ்ச்சிக்காக ஏகப்பட்ட ரசிகர்கள் வெயிட்டிங்கில் உள்ளனர். அனைவரும் மீண்டும் நடிகர் விவேக்கை பார்க்க வேண்டும் என்கிற ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் விவேக் நடிப்பில் அரண்மனை 3 மற்றும் சரவணன் அருளின் லெஜண்ட் திரைப்படங்களும் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X