போஸ்டரிலே முழு கதை இருக்கு.. மாறா படம் பற்றி இயக்குநரும் இசையமைப்பாளரும் என்ன சொல்றாங்க பாருங்க!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள மாறா திரைப்படம் பற்றி அந்த படத்தின் இயக்குநரும், இசையமைப்பாளரும் இணைந்து கொடுத்துள்ள பேட்டி ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் யூடியூப் தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நீண்ட நாட்கள் கழித்து மாதவன் ரொமான்டிக் ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளார்.
அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள இந்த திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனத்துடன் வெற்றி நடை போடுகிறது.

இசையமைப்பாளர் ஜிப்ரான்
உத்தமவில்லன், ராட்சசன் என ஏகப்பட்ட ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். படம் முழுக்க டிராவல் இருப்பதால், அதற்கு ஏற்றார்போல, விண்ட் இன்ஸ்ட்ருமென்ட்களை அதிகம் பயன்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு பாடலும் சிறப்பாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.

தாமரை வரிகளில்
இந்த படத்திற்கு பாடல் வரிகளை பாடலாசிரியர் தாமரை எழுதி கொடுத்துள்ளார். தாமரை வரிகளில் எல்லா பாடல்களும் அழகிய தமிழில் அற்புதமாக உருவாகி உள்ளது என இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் படத்தின் இயக்குநர் திலீப் குமார் இருவரும் இந்த பேட்டியில் கூறியுள்ளனர்.

போஸ்டரிலேயே கதை
மாறா படத்தின் போஸ்டரே வித்தியாசமாக இருக்கும். மேலும், டைட்டிலில் கூட மீன், வண்ண ஓவியங்கள் என கலர்ஃபுல்லாக இருக்கும். இவையே அந்த படத்தின் கதையை சொல்லி விடும் என இசையமைப்பாளர் ஜிப்ரானும், இயக்குநர் திலீப் குமாரும் மேஜரான ட்விஸ்ட்டை ரிவீல் செய்துள்ளனர். படத்தை பார்த்து விட்டு போஸ்டரை பார்த்தால் அப்படியே கதை புரியும் என்கின்றனர். இந்த போஸ்டரை டிசைனர் கோபி தான் உருவாக்கி உள்ளார்.
ரம்யமாக
அடிதடி ஆக்ஷன் நிறைந்த கதையாக அல்லாமல், ஒரு அழகான கவிதையாக ரம்யமாக இந்த மாறா திரைப்படம் இருக்கும் என இருவரும் கூறியுள்ளனர். ஏற்கனவே மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











