Exclusive: ’கராத்தே கிட்’ படத்தில் லெஜண்டுக்கு வாய்ஸ் கொடுத்த அனுபவம்.. சின்னத்திரை நடிகர் மோனிஷ் பேட்டி!

சென்னை: 15 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் ஜாக்கி சான் 'கராத்தே கிட்' சீரிஸில் நடித்துள்ள 'கராத்தே கிட் லெஜண்ட்ஸ் திரைப்படம் கடந்த மே 30ம் தேதி திரையரங்குகளில்வ் வெளியானது. ஜோனதன் என்ட்விஸ்ட்டில் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜாக்கி சான் உடன் ரெட்ரோ கராத்தே கிட் படங்களின் நாயகன் ரால்ஃப் மாச்சியோ நடித்திருந்தது தான் ரசிகர்களுக்கு செம ட்ரீட்.

இந்தியில் ஜாக்கி சானுக்கு அஜய் தேவ்கன் குரல் கொடுத்திருந்தார். நாயகனாக நடித்துள்ள இளம் நடிகர் பென் வாங் கதாபாத்திரத்துக்கு அஜய் தேவ்கனின் மகன் யுக் குரல் கொடுத்திருந்தார். கராத்தே கிட் திரைப்படம் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று ஏகப்பட்ட ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி இந்த வாரம் ஈர்த்து வருகிறது.

Exclusive Meet Actor Monish who lend his voice to legendary actor Ralph Macchio in Karate Kid Legends

கராத்தே கிட் லெஜண்ட்ஸ் படத்தில் நடித்த லெஜண்டரி நடிகரான ரால்ஃப் மாச்சியோவுக்கு சின்னத்திரை நடிகர் மோனிஷ் குரல் கொடுத்துள்ளார். அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, தனது சின்னத்திரை, சினிமா, ஓடிடி மற்றும் டப்பிங் உள்ளிட்ட பயணம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவரது பேட்டியை, இங்கே பார்க்கலாம் வாங்க..

யாரு இந்த ரால்ஃப் மாச்சியோ: 1961ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி பிறந்த ஹாலிவுட் நடிகர் ரால்ஃப் மாச்சியோவுக்கு (Ralph Macchio) 63 வயதாகிறது. 1980ம் ஆண்டு வெளியான 'Up the Academy' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 1983ம் ஆண்டு தி அவுட்சைடர்ஸ் படத்தில் நடித்த அவருக்கு 1984ம் ஆண்டு 'தி கராத்தே கிட்' படத்தில் டேனியல் லா ரூசோ கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்தது. தொடர்ந்து கராத்தே கிட் 2 மற்றும் 3ம் பாகங்களில் நடித்த அவர் பல ஆண்டுகள் கழித்து கராத்தே கிட் லெஜண்ட்ஸ் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார்.

Exclusive Meet Actor Monish who lend his voice to legendary actor Ralph Macchio in Karate Kid Legends

சினிமா, சீரியல், டப்பிங்கில் கலக்கும் மோனிஷ்: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் துணை நடிகராக நடித்த மோனிஷ் தற்போது சத்யா, தங்கமகள் உள்ளிட்ட பல பிரபல சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கான அங்கீகாரத்தை பெற்று வருகிறார். ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ஹார்ட் பீட் வெப்சீரிஸிலும் நடித்துள்ளதாக கூறியுள்ள அவரிடம், ரால்ஃப் மாச்சியோ குரலுக்கு டப் செய்ய எப்படி வாய்ப்பு கிடைத்தது, அந்த அனுபவம் எப்படி இருந்தது? என்கிற கேள்விகளை முன்வைத்தோம். "சிறு வயதில் இருந்தே ஜாக்கி சான் படங்கள் என்றால் ரொம்பவே உயிர். ஆனால், ரால்ஃப் மாச்சியோ படங்கள் பெரிதாக பார்த்தது இல்லை. நெட்பிளிக்ஸில் வெளியான 'ஒன் பீஸ்' வெப்சீரிஸில் வில்லன் கதாபாத்திரமான 'Buggy the star clown' கதாபாத்திரத்துக்கு குரல் கொடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராஃல்ப் மாச்சியோவுக்கு குரல் கொடுத்த அனுபவம்: அப்படியே டப்பிங் பணிகளை ஆரம்பித்தேன். கஜோல் நடிப்பில் வெளியான 'Trial' வெப்சீரிஸிலும் முக்கியமான கதாபாத்திரத்துக்கு குரல் கொடுத்தேன். அதன் பின்னர், தற்போது கராத்தே கிட் லெஜண்ட்ஸ் படத்தில் ரால்ஃப் மாச்சியோ கதாபாத்திரத்துக்கு பேச அழைத்தனர். பெரிய படம், பெரிய கதாபாத்திரம் இந்த வாய்ப்பெல்லாம் நமக்கு கிடைக்குமா? சும்மா டெஸ்ட் பண்ணிட்டு அனுப்பிடுவாங்கன்னு தான் போய் ட்ரை பண்ணேன். ஆனால், வாய்ஸ் நல்லா இருக்குன்னு பேச சொல்லிட்டாங்க, தியேட்டரில் அத்தனை பெரிய லெஜண்டுக்கு தமிழில் குரல் கொடுத்ததையும் ரசிகர்கள் கொண்டாடுவதையும் பார்க்க சந்தோஷமாக இருக்கு என்றார்.

கராத்தே கிட் லெஜண்ட்ஸ் வசூல்: ஜாக்கி சான், ரால்ஃப் மாச்சியோ மற்றும் பென் வாங் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியான கராத்தே கிட் லெஜண்ட்ஸ் திரைப்படம் கலவையான விமர்சனங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் முதல் நாளில் 1.6 கோடி ரூபாய் வசூல் செய்த கராத்தே கிட் லெஜண்ட்ஸ் திரைப்படம் 2வது நாளான சனிக்கிழமை 2.06 கோடி ரூபாய் வசூல் ஈட்டியுள்ளதாக sacknilk வெப்சைட் தகவல் தெரிவித்துள்ளது. 2 நாட்களில் ஒட்டுமொத்தமாக 3.66 கோடி ரூபாய் வசூலை இந்த படம் ஈட்டியுள்ளது. முதல் நாளில் உலகளவில் 7.5 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியுள்ளதாக 'வெரைட்டி' தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான இன்று வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X