Exclusive: செல்வத்துக்கும் லீலாவுக்கும் திருமணம் செய்ய விரும்புறாங்க.. மெட்டி ஒலி வனஜா பேட்டி!

சென்னை: இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் 2002 முதல் 2005 வரை சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியலுக்கு இன்னமும் ரசிகர்கள் உள்ளனர்.

Recommended Video

Metti Oli Leela-வின் ரியல் காதல் கதை | Metti Oli Leela Family | Metti Oli Vanaja Part 2

சமீபத்தில் கொரோனா லாக்டவுனில் புதிதாக சீரியல்கள் எடுக்க முடியாத நிலையில், மீண்டும் மறு ஒளிபரப்பு செய்யப்பட்ட மெட்டி ஒலி சீரியலை ரசிகர்கள் புதிய சீரியல்களுக்கு இணையாக ரசித்து பார்த்தனர்.

மெட்டி ஒலி சீரியலில் லீலாவாக நடித்த நடிகை வனஜாவின் பிரத்யேக பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

மெட்டி ஒலி

3 ஆண்டுகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புடன் வெற்றிகரமாக ஓடிய சூப்பர் ஹிட் சீர்யல் தான் மெட்டி ஒலி. அந்த சீரியலின் இன்ட்ரோ பாடலான "அம்மி.. அம்மி.. அம்மி மிதித்து" பாடலுக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இன்றும் இருக்கிறது. இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் வெளியான மெட்டி ஒலி சீரியலில் நடித்த அத்தனை கதாபாத்திரங்களும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கதாபாத்திரங்கள் தான்.

லவ் டிராக்

அந்த சீரியலில் லவ் டிராக்கில் நடித்திருந்த நடிகை வனஜாவை இத்தனை ஆண்டுகள் ஆகியும் ரசிகர்கள் லீலா என்றே சொல்லுங்கள், வனஜா என்று சொல்லாதீங்க என வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்திருப்பதை பார்த்தாலே அவர் எந்த அளவுக்கு ஃபேமஸ் என்பது புரியும். லீலாவும் செல்வமும் சேராமல் போனது இன்னமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாகவே உள்ளதாக இந்த பிரத்யேக பேட்டியில் லீலா கதாபாத்திரத்தில் நடித்து அசத்திய நடிகை வனஜா கூறியுள்ளார்.

மெட்டி ஒலி நடிகர்கள்

மெட்டி ஒலி நடிகர்கள்

இயக்குநர் திருமுருகன் இயக்கி நடித்த மெட்டி ஒலி தொடரில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, வனஜா, சேத்தன், போஸ் வெங்கட், நீலிமா ராணி, தீபா வெங்கட் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். சன் டிவி, கே டிவி, மூன் டிவி என ஏகப்பட்ட முறை இந்த சீரியல் ரிப்பீட் மோடில் ஒளிபரப்பு செய்யப்பட்டு ஹிட் அடித்ததாக நம்ம மெட்டி ஒலி லீலா இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

அப்படியே இருக்காரு

அப்படியே இருக்காரு

மெட்டி ஒலி எந்த அளவுக்கு மென்மையாக நடித்திருந்தாரோ மனதளவில் அப்படியே லீலா இருக்கிறார் என ரசிகர்கள் இந்த பேட்டியை பார்த்து விட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். நெகட்டிவ் ரோல்கள் ஏதாவது இப்போ செய்யலாம்னு நானே நினைச்சாலும் நீ லீலா தான்மா நீ நெகட்டிவ் ரோலில் எல்லாம் நடிக்கக் கூடாது என இயக்குநர்களே கூறுவதாகவும் புன்னகையுடன் நடிகை வனஜா கூறுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

செல்வத்துக்கும் லீலாவுக்கும் திருமணம்

செல்வத்துக்கும் லீலாவுக்கும் திருமணம்

மெட்டி ஒலி சீரியலில் அழகான காதல் ஜோடிகளாக லீலா மற்றும் செல்வம் கதாபாத்திரங்கள் அமைந்திருக்கும். ஆனால், இயக்குநர் திருமுருகன் கதையில் அவர்கள் இருவரையும் ஒன்று சேர விடாமல் பிரித்தது பலருக்கும் இன்னமும் பிடிக்கவில்லை. இப்போ கூட ரசிகர்கள் தன்னை பார்த்தால், நீங்க ஓகேன்னு மட்டும் சொல்லுங்க மேடம் உங்களுக்கும் செல்வத்துக்கும் திருமணம் பண்ணி ஒரு எபிசோடு போட்டுரலாம் என கேட்டு வருவதாகவும் இந்த பேட்டியில் சின்னத்திரை நடிகை வனஜா கலகலப்பாக பேசியுள்ள பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது. இரு பாகங்களாக வெளியாகி உள்ள மெட்டி ஒலி லீலாவின் பேட்டியை மறக்காம கண்டு ரசியுங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X