நயன்தாரா ரெஃபரன்ஸ் இருக்கு.. எனக்கு அவங்க தான் இன்ஸ்பிரேஷன்.. நானும் சிங்கிள் தான் ஹீரோயின் பேட்டி!

சென்னை: இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள நானும் சிங்கிள் தான் படத்தின் நாயகி தீப்தி சதி அளித்துள்ள பேட்டி வெளியாகி உள்ளது.

மலையாளம், கன்னடா, தெலுங்கு, தமிழ் மற்றும் மராத்தி மொழி படங்களில் நடித்துள்ளவர் தீப்தி சதி.

இயக்குநர் கோபி இயக்கத்தில் 'அட்டகத்தி' தினேஷ் நடிப்பில் எப்பவோ உருவான இந்த திரைப்படம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று வெளியாகி உள்ளது.

டைட்டிலும் இன்ஸ்பிரேஷனா

டைட்டிலும் இன்ஸ்பிரேஷனா

இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன் லவ் குரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடல்ட் காமெடிக்கும், யூத் என்டர்டெயினருக்கும் இடைப்பட்ட கோட்டில் இந்த படம் உருவாகி உள்ளது. படத்தின் டைட்டிலே நானும் ரவுடி தான் படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆகி நானும் சிங்கிள் தான் என வைக்கப்பட்டது போல் உள்ளது.

நயன்தாரா ரெஃபரன்ஸ்

நயன்தாரா ரெஃபரன்ஸ்

இந்நிலையில், இந்த பேட்டியில் நடிகை தீப்தி சதி, தனக்கு நயன்தாரா தான் இன்ஸ்பிரேஷன் என்றும், எப்படி இத்தனை ஆண்டுகளாக அதே கிரேஸ் உடன் மாஸ் காட்டுகிறார் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். இந்த படத்திலும் நயன்தாரா ரெஃபரன்ஸும் இருக்கு என சில பல தகவல்களையும் ஓப்பன் செய்துள்ளார்.

நல்லா தமிழ் பேசுறாரே

நல்லா தமிழ் பேசுறாரே

தெலங்கானாவை சேர்ந்த தீப்தி சதி, வளர்ந்தது மும்பையில் தானாம். தமிழில் ஏற்கனவே சோலோ படம் மூலம் அறிமுகமான இவர், இந்த பேட்டியில் நல்லாவே தமிழ் பேசுவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இளைஞர்களுக்கு பிடிக்கும் காதல் காமெடி படமாக இது இருக்கும் என கூறியுள்ளார்.

லண்டன் ஷூட்டிங்

சென்னை மற்றும் லண்டனில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. லண்டனில் ஷூட்டிங் செய்த போது ஷுட்டிங் செய்தது போலவே இல்லை என்றும், ஜாலியாக டூர் வந்தது போல இருந்தது எனவும் வெளிப்படையாக இந்த பேட்டியில் தீப்தி சதி பேசியுள்ளார். நானும் சிங்கிள் தான் பாடல்களில் இவரது டான்ஸ் வேற லெவலில் பட்டையை கிளப்புகிறது. மிஸ் பண்ணாம பேட்டியை பாருங்கள்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X