Exclusive: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன் குறித்து கிண்டல்.. கேலி.. நடிகர் விதார்த் பரபரப்பு பதில்!

Recommended Video

Bigg Boss 3 Tamil : Promo 3 : Day 81 : Cheran family visit BB House

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பங்கேற்றிருக்கக்கூடாது என பலரும் கருத்து தெரிவித்துள்ள நிலையில் நடிகர் விதார்த்தும் நமக்கு அளித்த சிறப்பு பேட்டியில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விதார்த் நமது தமிழ் பிலிமி பீட் தளத்திற்கு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார். அதில் பல்வேறு சுவாரசிய தகவல்களை பகிர்ந்துகொண்டார்.அதுதொடர்பான செய்தி தொகுப்பை அண்மையில் வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் அந்த பேட்டியின் பார்ட்-2 ஆக மேலும் பல சுவாரசிய தகவல்களை இந்த பதிவில் உங்களுக்காக,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான். தற்போது சின்னத்திரையின் ஹாட் டாப்பிக்காக உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசாத பிரபலங்களே இல்லை என்று கூறும் அளவுக்கு, நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லாமல் டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறது.

புரிந்துகொள்ள வாய்ப்பு

புரிந்துகொள்ள வாய்ப்பு

இந்நிலையில் பிரினிஸின் நிறுவனத்தின் பெயரிடப்படாத படத்தில் நடித்து வரும் விதார்த்திடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில், இயக்குநர் சேரன் பங்கேற்றிருப்பது குறித்து கேள்வி எழுப்பினோம். அதற்கு பதிலளித்த நடிகர் விதார்த், " எல்லாருமே தங்களை நல்லவர் என்று தான் கூறிக்கொள்வார்கள். அப்படி இருக்கும்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பவர்கள், அவர்களை பற்றி புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பு. நம்மை நாமே மீண்டும் பார்த்துக்கொள்ளலாம். 24 மணிநேரம் நடக்கும் நிகழ்வுகளை ஒரு மணி நேர நிகழ்ச்சியாக எடிட் செய்து காட்டுகிறார்கள். யாரை வேண்டுமானாலும் நல்லவராய் காட்டலாம் யாரை வேண்டுமானாலும் கெட்டவராய் காட்டலாம். இதனை வைத்து யாரையும் நாம் எதுவும் சொல்ல முடியாது.

ரொம்ப பிடிக்கிறது

ரொம்ப பிடிக்கிறது

சேரன் சாரை ஏற்கனவே பிடிக்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியை பாத்த பிறகு ரொம்ப பிடிக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றது சேரன் சாருக்கு சிறப்பானதாக இருக்கும். பிக்பாஸ் வீட்டில் அவருக்கு நிறைய எக்ஸ்பீரியன்ஸ் கிடைத்திருக்கும். நிச்சயம் அவருக்கு இப்போது நிறைய கதைகள் கிடைத்திருக்கும். சேரன் சார் மிகச்சிறந்த இயக்குநர், பிக்பாஸ் வீட்டிலேயே போட்டோ எடுத்து கதை சொல்ல சொன்னபோது கூட மிக அழகாக கதையை சொல்லி அசத்தினார். இப்போ இருக்கும் இளைஞர்களுக்கு சேரனின் படைப்புகள் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு நன்றாகவே தெரியவரும் என்றார்.

வெளியே வந்துவிடும்

வெளியே வந்துவிடும்

கவினும் சாண்டியும் சேரனிடம் நடந்து கொள்ளும் விதம் குறித்த கேள்விக்கு பதிலளித்த நடிகர் விதார்த், எல்லாருக்குள்ளும் ஒவ்வொரு மனிதருடைய கிண்டல் கேலிகள் வெளியே வந்துவிடும். ஒரு மணி நேரத்தில் யாரையும் நாம் ஜட்ஜ் செய்ய முடியாது. கேமரா என்பதை மறந்துவிட்டு கிண்டல் செய்தார்களா அவர்களின் உண்மையான குணமா என்பது தெரியவில்லை.

மிகப்பெரிய கலைஞன்

மிகப்பெரிய கலைஞன்

ஆனாலும் கவினும் சாண்டியும் செய்வது தவறுதான். அவரை காயப்படுத்தக்கூடாது, பொதுவாகவே மற்றவர்களை காயப்படுத்தக்கூடாது, சேரன் மிகப்பெரிய கலைஞன். அங்குள்ள அனைவருமே ஏதோ விதத்தில் திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான். அவரிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாதா? கிண்டல் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அவர்களின் குணம்

அவர்களின் குணம்

அவர்கள் தாங்கள் செய்யும் தவறை நியாயப்படுத்தக்கூடாது. அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டிருக்கலாம் கேட்காமலும் இருந்திருக்கலாம், நமக்கு எதுவும் காட்டப்படவில்லை. அவர்களை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களின் குணம் அது, வெளிப்படுகிறது அதற்காக அவர்களை வெறுக்க வேண்டாம். அவர்கள் இப்படி நடந்துகொள்ள கூடாது என்று வேண்டுமானால் வருத்தப்படலாம், ஆனால் வெறுக்க வேண்டாம். திரும்பி வந்த பிறகு பார்த்து திருத்திக்கொள்ளலாம் அல்லது நான் அப்படி நடந்துகொள்ளவில்லை அது இப்படி வெளியாகியிருக்கிறதே என்று கூட அவர்கள் கூறலாம். என்று கூறினார் விதார்த்.

ரியலாக இருந்தார் சரவணன்

ரியலாக இருந்தார் சரவணன்

தொடர்ந்து சரவணன் குறித்து பேசிய விதார்த், சரவணன் அண்ணனிடம் இன்னும் பேசவில்லை. அவர் ஒரிஜினலாக எப்படி இருப்பாரே அப்படிதான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தார். ஆயிரம் பொற்காசுகள் படத்திற்காக இருவரும் ஒன்றாக பணியாற்றினோம். அவருடன் 40 நாட்கள் ஒன்றாக இருந்துள்ளேன், அதனால் அவரை பற்றி எனக்கு தெரியும். அவர் நடிக்கவில்லை. சரவணன் அண்ணன் பாதியில் வெளியேறியது வருத்தம் தான், அவர் கடைசி வரை இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவர் வெளியே வந்த பிறகு இதுவரை பேசவில்லை. அவரிடம் பேச வேண்டும். என்று கூறி முடித்தார் விதார்த், நாமும் அவர் நடித்துக்கொண்டிருக்கும் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து புறப்பட்டோம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X