Exclusive - திரிஷாவுக்கு அந்த ஆசை இருக்கிறது.. விஜய் புதை குழியில்.. பிரபலம் அதிரடி
சென்னை: ஒருபக்கம் சங்கீதா விவாகரத்து வேண்டுமென்று மனுத்தாக்கல் செய்தார். மறுபக்கம் திரிஷாவோடு விஜய் ஜோடி போட்டு வந்தார். இந்த பரபரப்புகள் அடங்குவதற்குள், 'விஜய் தன்னை நீலாங்கரை வீட்டுக்குள் விட மறுக்கிறார். அவர் அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும்' என புதிய மனுவை இன்று தாக்கல் செய்திருக்கிறார். இப்படி விஜய் - சங்கீதா - திரிஷா விஷயம் நாளுக்கு நாள் சூடுபிடிக்கும் நிலையில்; பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஃபில்மிபீட் தமிழுக்கு இதுகுறித்து பேட்டியளித்தார்.
அவர் ஃபில்மிபீட் தமிழுக்கு அளித்த பேட்டியில், "ஆண் மகனுக்கு எப்போதும் கன்ட்ரோல் தேவை. மனைவி வீட்டில் இருக்கும்போது ஹோட்டலுக்கு போனால் அந்த உணவு ருசியாகத்தான் இருக்கும். ஆனால் உடல்நிலைக்கு நல்லதா. இல்லைதானே. அப்படித்தான் இதுவும். புதை குழியில் விழுந்த கதை. அந்த நடிகைக்கு இதுவா முதல் காதல். இதற்கு முன்னர் தெலுங்கு நடிகர் ஒருவருடன் பேசப்பட்டார். பல பேருடன் பேசப்பட்டிருக்கிறார். இப்போது இவர்களுக்குள் வந்திருப்பதை நாம் காதலாக எடுத்துக்கொள்ள முடியுமா?.. இது ஒரு இனக்கவர்ச்சி அவ்வளவுதான்.

விஜய்க்கு திமிர் இருக்கிறது: விஜய்க்கு திமிர். ஆணவம், பணம் என எல்லாம் அவரிடம் இருக்கிறது. அவர் அப்பாவே செந்தூர பாண்டி படத்தில் ஆடாதடா ஆடாதடா மனிதா என பாடியிருக்கிறார். ஆடியவர்கள் யாருமே வென்றது இல்லை. ஒரு கூட்டமே நம்மை பின் தொடரும்போது உங்களுக்கான கண்ணியமும், சுய ஒழுக்கமும் ரொம்ப முக்கியம். இதையெல்லாம்கூட கவனிக்காமல்; நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்பதுதான் அவருடைய மன நிலைமையாக இருக்கிறது.
நீலிக்கண்ணீர் வடித்தீர்களா?: கரூரில் இவர் கட்சி கூட்டம் நடத்தியபோது 41 பேர் இறந்தார்கள். அதையெல்லாம் நீங்கள் கொஞ்சமாவது யோசித்து பார்த்தது உண்டா?. அந்தக் குடும்பங்களை மகாபலிபுரத்துக்கு அழைத்து அழுததாக ஒரு செய்தி வந்தது. அப்போ நீலிக்கண்ணீர்தானே வடித்திருக்கிறார். புதிய பறவை படத்தில் சிவாஜியை பார்த்து சரோஜா தேவி, அத்தனையும் நடிப்பா என்று கேட்பார். அப்படித்தான் விஜய்யை பார்த்து கேட்க தோன்றுகிறது. நடத்திய மாநாடுகள் எல்லாம் ஏமாற்று வேலைதானே.
ஏற்புடைய செயலா அது?: நீங்கள் உங்கள் மனைவியுடன் ஒரு திருமணத்துக்கு சென்றால் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் யாரோ ஒரு நடிகையோடு செல்கிறார். மனைவி விவாகரத்து கேட்டிருக்கும் நிலையில் அவர் இப்படி செய்கிறார் என்றால்; அது அவரது மனநிலையைத்தான் காண்பிக்கிறது. விஜய்யை குறை சொல்வதைவிடவும்; அவரை ஃபாலோ செய்யும் வெறித்தனமான கூட்டத்தை சொல்ல வேண்டும். அவர் அரசியலுக்கு வந்த நோக்கமே வேறு. அவர் வரவழைக்கப்பட்டிருக்கிறார். இவரை போய் எம்ஜிஆரோடு ஒப்பிடுகிறார்கள். அதையெல்லாம் செய்யலாமா?.. எம்ஜிஆரின் குண நலன்கள், உதவும் மனது இவருக்கு இருக்கிறதா?. உதவியாளரையே நெஞ்சில் ஏறி மிதித்திருக்கிறார்.
அவ்வளவு வேதனைகள்: சங்கீதாவுக்கு பின்னால் திமுக இருப்பதாக சொன்னீர்கள். இப்போது திரிஷாவுடன் வெளிப்படையாக வந்ததும் திமுகவின் சதித்திட்டமா?. இதில் அவர் எந்த பதிலடியும் கொடுக்க முடியாது. காதலித்து திருமணம் செய்த மனைவியே அவரை வேண்டாம் என்று சொல்கிறார். விஜய் மாதிரி ஒரு சூப்பர் ஸ்டாரை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா?. சங்கீதா செய்திருக்கிறார் என்றால்; அந்த அளவுக்கு அவருக்கு வேதனைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
திரிஷாவுக்கு அதுதான் ஆசை: ஆறு வருடங்களாக இந்தப் பிரச்னை இருக்கிறது. அதை சரி செய்துகொண்டு அரசியலுக்கு வந்திருக்கலாம். மகனே இவரை அன்ஃபாலோ செய்கிறாரே. அப்பாவுக்கு ஒன்று என்றால் மகன் தானே வந்து நிற்பான். நீங்கள் ஊருக்கெல்லாம் ஹீரோ; மகனுக்கு ஜீரோ. யாருக்குமே ஒழுங்காக இல்லை. அந்த நடிகைக்கு சி.எம் ஆக வேண்டும் என கூறியிருக்கிறார். கடையில் வாங்கி திங்கும் பண்டம் என்று நினைத்துவிட்டார் போல. சீஃப் மினிஸ்டரை சீப் மினிஸ்டராக்கி விட்டார். இவ்வளவு கேவலமா போய்விட்டதே" என்றார்.


Click it and Unblock the Notifications















