சிவாஜியால கூட அப்படி நடிக்க முடியாது.. அலற விடும் ’சைக்கோ’ டீச்சர் ப்ரீத்தமின் பிரத்யேக பேட்டி!
சென்னை: எந்த ஒரு நடிகராலும், ஏன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் கூட இயக்குநர்கள் சொல்லும் கதாபாத்திரங்களை அப்படியே உள்வாங்கி நடிக்க முடியாது என தனது அசத்தலான பேட்டியில் ப்ரீத்தம் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
Recommended Video
மிஷ்கினின் 'சைக்கோ' படத்தில் ரேச்சல் டீச்சராக நடித்துள்ள நடிகை ப்ரீத்தம் கே. சக்கரவர்த்தி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேகமாக பேட்டிக் கொடுத்துள்ளார்.

மிஷ்கின் இயக்கத்தில், உதய்நிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், ராம் நடிப்பில் இந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி வெளியான படம் சைக்கோ.
இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்து இருந்தார். கலவையான விமர்சனங்களை பெற்று இந்த படம் ஓடியது குறிப்பிடத்தக்கது.
மிஷ்கினின் சைக்கோ படத்தில் சைக்கோ வில்லனாக நடித்த ராஜ்குமார் பிச்சுமணியை சைக்கோவாக மாற்றும் கதாபாத்திரமான அவரது பள்ளி ஆசிரியை ரேச்சல் டீச்சராக நடித்து மிரட்டியவர் ப்ரீத்தம் சக்கரவர்த்தி.
நடிப்பு கலையில் அதிக ஆர்வம் உள்ள இவர், நாடக ஆசிரியராகவும் கலக்கி வருகிறார். தமிழில் அதிக படங்களில் நடிக்கவில்லை என்றாலும், தெலுங்கில் இவர் பல படங்களில் நடித்துள்ளார். மேலும், கைவசம் 3 படங்கள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
கொலைகாரனை நான் பார்த்ததே இல்லை, அவனாக எப்படி நடிப்பது என நடிகர்கள் கேட்டால், அதற்கு தனது பதில், உங்க வீட்ல எலி வந்து அட்டகாசம் செய்தால், அதனை எப்படி அடித்து, வெறித்தனமாக கொன்று, அதன் வாலை பிடித்து, அதன் மீசை துடிக்கிறதா? என்பதை குரோதத்துடன் பார்க்க மாட்டீர்கள், அப்படியென்றால் நீங்களும் கொலைகாரன் தானே, அதனை அப்படியே ஆக்டிங்காக கன்வர்ட் பண்ணினாலே போதும் என சர்வ சாதாரணமாக கூறுகிறார்.
மேலும், கொசுவை அடித்துக் கொன்று அதன் ரத்தத்தை பார்த்தாலும், அவர்கள் கொலைகாரர்கள் தான் என்றும், கூறி நடிப்பின் மீது இருக்கும் தனது தீராக் காதலை வெளிப்படுத்தி உள்ளார்.
அவரது அசுரத்தனமான நடிப்பு ஆற்றலுடன் வெளியாகி உள்ள இந்த பிரத்யேக பேட்டியை மறக்காம கண்டு பல விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications











