திருநங்கை நமிதா வாழ்க்கையில இவ்ளோ கஷ்டங்களை சந்திச்சிருக்காரா.. பல ரகசியங்களை கூறும் சுதா மம்மி!

சென்னை: குடிகாரர்களையும், போதைக்கு அடிமையானவர்களையும் கொண்டு போய் சேர்க்கும் Rehabilitation எனும் புனர்வாழ்வு மையத்திற்கு கொண்டு போய் நமிதாவை அவரது பெற்றோர்கள் சேர்த்த கொடுமையெல்லாம் நடந்ததாக பிக் பாஸ் சீசன் 5 போட்டியாளர் திருநங்கை நமிதா பற்றி மனம் திறந்து கூறியுள்ளார் சுதா மம்மி.

Recommended Video

BIGG BOSS 5 Namitha பற்றி Sudha Mummy | # Closecall | Filmibeat Tamil

முதல் திருநங்கை போட்டியாளர் எனும் வரலாற்று சாதனையை பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் நிகழ்த்தி காட்டியதே நமிதா செய்த பெரிய சாதனை என பெருமையுடன் பேச ஆரம்பித்த சுதா மம்மி நமிதா சிறு வயது முதல் பட்ட பல கஷ்டங்களையும் இந்த பேட்டியில் நம்முடன் பகிர்ந்துள்ளார்.

திருநங்கை அல்லது திருநம்பிகளுக்கு சமூகத்தில் ஏற்படும் அத்தனை கஷ்டங்களையும் இவரும் சந்தித்து தான் தற்போது இந்த அளவுக்கு முன்னேறி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதா மம்மி பேட்டி

ஏகப்பட்ட திருநங்கைகளுக்கு அடைக்கலம் கொடுத்து அவர்களை அரவணைத்து வரும் சுதா மம்மி என செல்லமாக அழைக்கப்படும் சுதாவிடம் தான் பிக் பாஸ் போட்டியாளராக இந்த சீசனில் கலந்து கொண்டுள்ள திருநங்கை நமிதா மாரிமுத்துவும் அடைக்கலம் புகுந்து ஒவ்வொரு படியாக தனது முயற்சியால் முன்னேறி உள்ளார். பிக் பாஸ் வீட்டுக்குள் நமிதா மாரிமுத்து நுழைந்தவுடனே சுதா மம்மியை சந்தித்து எடுத்த நேர்காணல் இதோ உங்களுக்காக..

18 வயசு இருக்கும்

18 வயசு இருக்கும்

தன்னிடம் உள்ள பெண் தன்மையை அறிந்து கொண்டு திருநங்கையாக மாற முயற்சித்த நமிதாவுக்கு குடும்பத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளும் சிக்கல்களும் மற்ற திருநங்கைகளும் திருநம்பிகளும் சந்திப்பது போலவே ஆரம்பத்தில் இருந்தது. தன்னிடம் நமிதா வரும் போது அவருக்கு சுமார் 18 வயசு இருக்கும் என சுதா மம்மி இந்த பேட்டியில் கூறியுள்ளார்.

ரிஹாபிலேஷன் சென்டர்

ரிஹாபிலேஷன் சென்டர்

நமிதா மாரிமுத்துவின் பெற்றோர்கள் அவரை Rehabilation சென்டருக்கே அனுப்பி வைத்தனர் எனும் திடுக்கிடும் தகவலையும் இந்த பேட்டியில் போட்டு உடைத்திருக்கிறார் சுதா மம்மி. பொதுவாக புகைப்பழக்கம், குடிப்பழக்கம் மற்றும் போதை பொருள் பழக்கம் உள்ளவர்களை தான் அங்கே கொண்டு சேர்ப்பார்கள். ஆனால், நமிதாவின் உடல் ரீதியான மாற்றத்தை புரிந்து கொள்ளாமல் அவர் பெற்றோர்கள் அப்படி செய்ததை எல்லாம் என்னிடம் சொல்லி அவர் அழுதுள்ளார் எனக் கூறினார்.

வேண்டாம்னு சொன்னேன்

வேண்டாம்னு சொன்னேன்

மாடலிங் துறையில் நமிதாவுக்கு நிறைய ஆர்வம் இருந்தது. ஆனால், திருநங்கை எப்படி மாடலிங் துறையில் எல்லாம் மேலோங்கி வர முடியும், தினமும் உண்ண உழைக்க வேண்டுமே என அவரிடம் பல முறை இதெல்லாம் வேண்டாம்மான்னு சொல்லி தடுத்திருக்கிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் அவரது சொந்த முயற்சியில் பல தடைகளை தாண்டி பல அழகிப் பட்டங்களை தனதாக்கி சாதனை படைத்துள்ளார் என பெருமையுடனும் சில சுவாரஸ்ய விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

வரலாறு படைத்து விட்டார்

வரலாறு படைத்து விட்டார்

இந்த சீசன் பிக் பாஸ் டைட்டிலை நமிதா வெல்கிறாரோ இல்லையோ அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் திருநங்கை எனும் வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி காட்டிய நிலையிலேயே பல கோடி மக்களின் இதயங்களை வென்றுள்ளார்.

அது சீக்ரெட்

அது சீக்ரெட்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது நீங்க உள்ள போய் நமிதாவை பார்ப்பீங்களா? யாரெல்லாம் உள்ளே போக பிளான் பண்ணியிருக்கீங்க என போட்டு வாங்கிய கேள்விக்கு அதை எப்படி பாஸ் இப்ப சொல்வோம். அது பரம சீக்ரெட் என சொல்லி கலகலப்பாக முடித்துள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X