லாக்டவுன்ல எடுத்த முதல் படம்.. அக்ஷய் படத்தில் கிடைத்த வாய்ப்பு.. தலைவாசல் விஜய் எக்ஸ்க்ளூசிவ்!
சென்னை: சுவிட்சர்லாந்தில் அக்ஷய் குமாரின் பெல்பாட்டம் பட ஷூட்டிங்கிற்காக சென்றுள்ள நம்ம ஊர் நடிகர் தலைவாசல் விஜய், அங்கிருந்தே வீடியோ கால் மூலம் கொடுத்த பிரத்யேக பேட்டி வைரலாகி வருகிறது.
Recommended Video
இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால், அக்ஷய் குமாரின் இந்த படம் தான் லாக்டவுன் காலத்தில் ஷூட்டிங் எடுத்து முடிக்கப்பட்ட படமாகும்.

ஏகப்பட்ட தமிழ் படங்களில் பல வித கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமான தலைவாசல் விஜய், பெல்பாட்டம் படம் குறித்தும் அக்ஷய் குமார் பற்றியும் இந்த பேட்டியில் விரிவாக பேசியுள்ளார்.
முன்னதாக வித்யூத் ஜம்வாலின் ஜங்ளி உள்ளிட்ட சில இந்தி படங்களில் நடித்துள்ள தலைவாசல் விஜய்க்கு இந்த படத்தில் வாய்ப்பு, ஜூம் கால் மீட்டிங் மூலமாகவே கிடைத்தது பற்றியும் சுவாரஸ்ய தகவல்களை நம்முடன் பகிர்ந்துள்ளார்.
இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலேயே இந்த கதாபாத்திரம் வித்தியாசமாக இருக்கும் என்றும், சுவிட்சர்லாண்ட் சென்ற 100க்கும் மேற்பட்ட படக்குழுவினரை ஒரே ஹோட்டலில் குவாரண்டைன் செய்தது குறித்தும், கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும் ஷூட்டிங் லாக்டவுன் அனுபவங்களையும் கூறியுள்ளார்.
இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் அக்ஷய் குமார் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் வாணி கபூர், ஹூமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட மூன்று நாயகிகள் நடித்து வருகின்றனர்.
அக்ஷய் குமாருடன் தான் தனக்கு ஏகப்பட்ட காட்சிகள் என்றும், அவர் படத்தில் பார்ப்பது போலவே நேரிலும் அவ்வளவு ஜாலியான நபர் என தலைவாசல் விஜய் கொடுத்துள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பார்த்து மகிழுங்கள்!


Click it and Unblock the Notifications











