பஞ்சு மில்லில் கூலி வேலை.. டிக் டாக்கில் கவர்ச்சி.. இப்போ சினிமா ஹீரோயின்.. இலக்கியா எக்ஸ்க்ளூசிவ்!

சென்னை: டிக் டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட உடனே அடுத்த கட்டமாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து தனது ரசிகர்களை குஷிப்படுத்த காத்திருக்கிறார் டிக் டாக் இலக்கியா.

Recommended Video

தப்பா பேசுனா கன்னத்துல அறைஞ்சுடுவேன் | TIKTOK ELAKKIYA EXCLUSIVE | FILMIBEAT TAMIL

படு செக்ஸியாக டிக் டாக் வீடியோக்களை பதிவிட்டு ஏகப்பட்ட ரசிகர்களை பிடித்துள்ள இலக்கிய தற்போது சுடத்தான் வந்தியா எனும் அடல்ட் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு எக்ஸ்க்ளூசிவ் ஆக அவர் கொடுத்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

பஞ்சு மில்லில் கூலி வேலை

வெறும் 5 ஆயிரம் ரூபாய் சம்பளத்துக்கு திருப்பூரில் உள்ள பஞ்சு மில்லில் கூலி வேலை பார்த்ததாக டிக் டாக் இலக்கியா இந்த பேட்டியில் தனது ஆரம்ப கால கதையை ஒளிவு மறைவின்றி கூறியுள்ளார். சென்னைக்கு வரும் போது வெறும் 3 ஆயிரம் ரூபாயில் வாடகை வீட்டில் தங்கிய இலக்கியா தற்போது 20 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வாழும் நிலமைக்கு உயர்ந்துள்ளது சந்தோஷத்தை தருகிறது என்றுள்ளார்.

குடும்பத்துடன் பேசுவதில்லை

குடும்பத்துடன் பேசுவதில்லை

டிக் டாக், சினிமா என சென்னைக்கு தனது கனவை துரத்த ஓடி வந்த இலக்கியா கடந்த 7 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் பேசுவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். இப்போ சம்பாதிக்கும் பணத்தில் குடும்பத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆசையும் அதிகமாக இருப்பதாகவும், சீக்கிரமே குடும்பத்துடன் சேருவேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மீடூ விவகாரம்

மீடூ விவகாரம்

சென்னைக்கு நடிக்க வந்த காலத்தில் பல உப்மா கம்பெனிகளில் தனக்கு நேர்ந்த மீடூ பிரச்சனைகள் குறித்து ஏகப்பட்ட பேட்டிகளில் தைரியமாக பேசியுள்ளார் டிக் டாக் இலக்கியா. தப்பாக தன்னிடம் யாராவது எல்லை மீற நினைத்தால் ஒரே அறை தான் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் இலக்கியா.

டிக் டாக்கில் படுகவர்ச்சியாக

டிக் டாக்கில் படுகவர்ச்சியாக

டிக் டாக் செயலியில் படுகவர்ச்சியாக ஏகப்பட்ட வீடியோக்களை போட்டு ரசிகர்களை சேர்த்துள்ள இலக்கியா டிக் டாக் தடை காரணமாக இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார். தனது ஒரிஜினல் இன்ஸ்டாகிராம் ஐடியையும் இந்த பேட்டியின் இறுதியில் கூறியுள்ளார். மறக்காம நோட் பண்ணிக்கோங்க!

பாதி காட்டினாலும் ஆபாசம் தான்

பாதி காட்டினாலும் ஆபாசம் தான்

கவர்ச்சியாக வீடியோக்கள் போடுவது குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்கிற கேள்விக்கு, ஏகப்பட்ட நடிகைகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதி உடலை காட்டியபடி போஸ் போடுகின்றனர். பாதி காட்டினாலும், முழுதாக காட்டினாலும் ஆபாசம் ஆபாசம் தான். எனக்கு கிளாமர் ரொம்ப பிடிக்கும். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக தெரியவே முழு கவர்ச்சியை களமிறக்கி வருகிறேன் என ஒரே போடாக போட்டுள்ளார்.

நீ சுடத்தான் வந்தியா

நீ சுடத்தான் வந்தியா

இருட்டு அறையில் முரட்டு குத்து, இரண்டாம் குத்து, பல்லு படாம பாத்துக்கோ என தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆபாச டைட்டில்களுடன் அடல்ட் ஒன்லி படங்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கவர்ச்சிப் புயல் டிக் டாக் இலக்கியா நடிப்பில் நீ சுடத்தான் வந்தியா எனும் டபுள் மீனிங் டைட்டிலுடன் புதிய படம் உருவாகி இருக்கிறது. விரைவில் திரையிலும் வெளியாக உள்ளது.

பிகினியும் லிப் லாக்கும்

பிகினியும் லிப் லாக்கும்

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் முழுவதும் டிக் டாக் இலக்கியா நீச்சல் உடை அணிந்தும் லிப் லாக் முத்தம் கொடுக்கும் விதமாகவே காட்சிகள் அமைந்திருந்த. அதற்காக பல டேக்குகள் ஆனதா? என்கிற கேள்விக்கு பதில் அளித்த அவர், நடிக்க வந்துட்டா அதெல்லாம் பண்ணித் தான் ஆகணும். இயக்குநர் ஓகே சொல்லும் வரை டேக்குகள் எடுக்கத்தான் வேண்டும் என செம கூலாக கொடுத்துள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!

More from Filmibeat

Read more about: tik tok elakkiya
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X