For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடிப்பாவி.. மாஸ்டரையே மாத்திட்டியா.. வனிதா விஜயகுமார் செய்த வேலை.. விஜய் ரியாக்‌ஷன்!

  |

  சென்னை: மூன்றாவது திருமணத்தில் பிசியாக இருக்கும் நடிகை வனிதா விஜயகுமார், நடிகர் விஜய்யுடன் நடித்த அனுபவங்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

  தளபதி விஜய்யின் பிறந்தநாள் நேற்று சமூக வலைதளங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

  ஹாஷ்டேக்குகளை உருவாக்கி இந்தியளவில் ரசிகர்கள் ஏகப்பட்ட புதிய சாதனைகளை படைத்துள்ளனர்.

  Thalapathy Vijay க்கு 20 வயசுல அவ்வளவு Maturity • Vanitha Vijaykumar Exclusive

  பெண்களை மையப்படுத்தும் கதைகளை வரவேற்கும் OTT தளங்கள்.. இதுதான் காரணம்.. மனம் திறந்த பிரபல நடிகை!

  வனிதா வாழ்த்து

  வனிதா வாழ்த்து

  நடிகர் விஜய்யின் 46வது பிறந்தநாளை முன்னிட்டு ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் நடிகை வனிதா விஜயகுமார். சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ள வனிதா விஜயகுமார், தனது ஹீரோ தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக பல சுவாரஸ்ய தகவல்களை இந்த பேட்டியில் பேசியுள்ளார்.

  விஜய் ஜோடி

  விஜய் ஜோடி

  இயக்குநர் நம்பிராஜன் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான படம் சந்திரலேகா. நடிகர் விஜய்க்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் இந்த படத்தில் நடித்திருப்பார். இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" பாடல் எவர்க்ரீன் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

  21வது பிறந்தநாள்

  21வது பிறந்தநாள்

  20 வயதில் சந்திரலேகா படத்தில் நாயகனாக விஜய் நடித்திருந்தார் என்றும், 25 வருடங்களுக்கு முன்பாக, நடிகர் விஜய்யின் 21வது பிறந்தநாளை சந்திரலேகா படப்பிடிப்பு தளத்தில் கொண்டாடியது, இன்னமும் தனக்கு நினைவு இருப்பதாகவும், நடிகர் விஜய்யுடன் பேசி, பழகிய தருணங்கள் எல்லாம் எப்போதுமே நினைவை விட்டு நீங்காது என்றும் கூறியுள்ளார்.

  அப்பவே அப்படி

  அப்பவே அப்படி

  என் மகனுக்கு இப்போ 19 வயசு ஆகாது. ஆனால், அவனுக்கெல்லாம் இன்னும் மெச்சூரிட்டினாவே என்னான்னு தெரியாது. ஆனால், 20 வயதில் அப்பவே, Ignore Negativity என்றும், உங்களை பற்றி பேசுறாங்க என்றால், நீங்க வளர்ச்சி அடையிறீங்க, அவங்க மனசுல இருக்கீங்கன்னு அர்த்தம். உங்களை பத்தி யாருமே பேசலன்னாதான் நீங்க வருத்தப் படணும்னு அப்பவே செம மெச்சூரிட்டியா பேசினாரு என விஜய் அப்பவே அப்படி எனக் கூறியுள்ளார்.

  வாழ்க்கை மாற்றியது

  வாழ்க்கை மாற்றியது

  கடந்த ஆண்டு விஜய் பிறந்தநாளான ஜூன் 22ம் தேதி தான், பிக்பாஸ் இல்லத்திற்கு தான் சென்றதாகவும், என் வாழ்க்கையே மாற்றிய நிகழ்வு அது என்றும், நடிகர் கவினுக்கும் ஜூன் 22ம் தேதி பிறந்தநாள் உள்ளிட்ட பல சுவாரஸ்ய சம்பவங்களை நடிகை வனிதா விஜயகுமார் இந்த பேட்டியில் மனம் திறந்து வெளிப்படுத்தி உள்ளார்.

  விஜய் அப்படி சொல்லிட்டாரு

  விஜய் அப்படி சொல்லிட்டாரு

  சந்திரலேகா படத்தில் இடம்பெற்ற "அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்" பாடலை தாஜ்மகால், ஃபத்தேபூர் சிக்ரி, அக்பர் மஹால் உள்ளிட்ட புனித இடங்களை உருவாக்கினோம். அங்கே பாடல்களை இசையமைக்கக் கூடாது என்றும், நடிகர்களே பாட வேண்டும் என்றும் கூறினார்கள். அது தனக்கு சிரமமாக இருந்தது எனக் கூறிய வனிதா விஜயகுமார், அந்த படத்தின் ஷூட்டிங்கின் போது ராஜு மாஸ்டரை மாற்ற தான் காரணமாக இருந்ததற்கு, "அடிப்பாவி.. மாஸ்டரையே மாத்திட்டியே" என விஜய் கொடுத்த கவுன்ட்டர் கமெண்ட்டையும் தற்போது அழகாக சிரித்துக் கொண்டே வனிதா விஜயகுமார் பேசியுள்ள வீடியோவை காண லிங்கை க்ளிக் பண்ணுங்க..

  English summary
  Actress Vanitha Vijaykumar talks about lot of interesting stories happened during the making of Chandralekha movie. She also talks about super qualities Vijay in her exclusive interview.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X