Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பிக் பாஸ் வெற்றி கொண்டாட்டம்.. ரசிகர்களுக்கு அதிரடியாக கோரிக்கை வைத்து வீடியோ வெளியிட்ட ஆரி!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டிலை வென்று வீடு திரும்பிய ஆரி, அந்த வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில், அதிரடியாக ஒரு வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ன் டைட்டில் வின்னராக கடந்த ஞாயிற்றுக் கிழமை ஆரி அர்ஜுனன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவர் வெற்றி பெற்றதை பாராட்டி ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
ஆரி பேட்டி
ஆரி அர்ஜுனன் பேட்டி இன்னமும் வரவில்லையே என எதிர்பார்த்து கொண்டிருந்த ரசிகர்களுக்கு பேக்ஸ்டேஜ் எனும் யூடியூப் தளத்தில் ஆரியின் பேட்டி விரைவில் வெளியாகிறது. அதனை முன்னிட்டு தற்போது, ஆரி பேசியுள்ள எக்ஸ்க்ளூசிவ் புரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய பல கேள்விகளுக்கு இதில் ஆரி பதில் அளிக்க உள்ளார்.
வெற்றி கொண்டாட்டம்
பிக் பாஸ் வெற்றியை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் அண்ணா என்று ஏகப்பட்ட ரசிகர்கள் போன் போட்டும் சமூக வலைதளங்களில் மெசேஜ் செய்தும் வருகின்றனர் என அந்த வீடியோவில் பேசும் ஆரி, ரசிகர்கள் மத்தியில் அதிரடியாக ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். தனக்கு கிடைத்திருப்பது மக்களின் வெற்றி என்று கூறும் ஆரி, இந்த வெற்றியை மக்கள் எப்படி எல்லாம் கொண்டாடினால் நல்லா இருக்கும் என ஒரு லிஸ்டே போட்டுள்ளார்.
அதுதான் ஆரி
மற்றவர்களை போல பந்தா பண்ணிக் கொண்டு தேவையில்லாமல் காசை செலவழித்து கொண்டாடும் கொண்டாட்டத்தை ஆரியும் கொண்டாடினால், எப்படி? அதனால் தான் இப்படியொரு வெற்றி கொண்டாட்ட யோசனையை மக்களுடன் சேர்ந்து கொண்டாட திட்டமிட்டுள்ளார் ஆரி ஆர்ஜுனன். மக்கள் தங்களால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்வதே என்னுடைய வெற்றி கொண்டாட்டம் எனக் கூறியுள்ளார்.
ஒரு விதையை விதைச்சு
உங்க வீட்ல ஒண்ணா சேர்ந்து சாப்பிட்டு இந்த வெற்றியை கொண்டாடலாம், நண்பர்களுடன் கொண்டாடலாம், இல்லை அனாதை ஆசிரமத்திற்கு, முதியோர் இல்லத்திற்கு ஒரு வேளை உணவு அளித்து இந்த வெற்றியை கொண்டாடலாம், இல்லை ஒரு விதையை விதைச்சு, ஒரு மரத்தை நட்டு இந்த வெற்றியை கொண்டாடலாம்.
இளநீர் வாங்கிக் கொடுத்து
ஒண்ணுமே இல்லைங்க இளநீர் வாங்கிக் கொடுத்து விவசாயிகளின் வாழ்க்கையை மகிழ்வித்து கொண்டாடலாங்க, சமூக மாற்றத்திற்கான எந்தவொரு முயற்சியை வேணா நீங்க எடுங்க, அதை உங்க சாய்ஸ்லயே விட்டுடுறேன். மாற்றத்திற்கான ஒரு முயற்சியாய் இந்த கொண்டாட்டம் இருந்திச்சின்னா ரொம்ப சந்தோஷம் என நடிகரும் பிக் பாஸ் டைட்டில் வின்னருமான ஆரி அர்ஜுனன் தனது ரசிகர்களுக்கு கோரிக்கை வைத்து போட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
மாற்றம் ஏற்படுமா
பிக் பாஸ் வீட்டுக்குள் முரட்டுத் தனமாக சுற்றிக் கொண்டு இருந்த பாலாவையே பேசி பேசியே மாற்றிய நடிகர் ஆரி ஆர்ஜுனன், இப்படியொரு வீடியோ போட்டு தனது ரசிகர்களையும் சமூக சேவையை செய்ய தூண்டியுள்ளார். அவர் நினைப்பது போன்ற மாற்றம் ஏற்படுமா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். தனது கோரிக்கையை ஏற்று ரசிகர்கள் செய்யும் கொண்டாட்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் தனக்கு டேக் செய்ய சொல்லி உள்ளார். இது ரொம்பவே நல்ல விஷயம் என ஆரியை பலரும் பாராட்டி வருகின்றனர்.