Exclusive: சின்மயிக்கு பாட வாய்ப்புக் கொடுப்பேன்.. ’மார்கன்’ விஜய் ஆண்டனி.. வெளிப்படையான பேட்டி!
சென்னை: லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சமுத்திரகனி, தீப்ஷிகா, பிரிகிடா சாகா, அஜய் திஷன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்கன்' திரைப்படம் வரும் ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்திற்கான புரமோஷன் பணிகளை விஜய் ஆண்டனி மற்றும் படக்குழுவினர் தொடங்கி உள்ளனர். தமிழ் பிலிமி பீட்டுக்கு விஜய் ஆண்டனி, லியோ ஜான் பால், பிரிகிடா, அஜய் திஷன் மற்றும் தீப்ஷிகா இணைந்துக் கொடுத்துள்ள கலகலப்பான பேட்டி வெளியாகி உள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவான "முத்த மழை" பாடல் இடம்பெறாதது ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளன.

மேலும், தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய பாடல் ரசிகர்களை கவர்ந்த நிலையில், அந்த பாடலை வைக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை எழுந்த நிலையில், கடைசியாக அந்த பாடலையே நீக்கி விட்டனர் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், சின்மயிக்கு வாய்ப்பு கொடுப்பீங்களா? என்கிற கேள்விக்கு விஜய் ஆண்டனி பதில் அளித்துள்ளார்.
மார்கன் படம் என்ன மாதிரியான ஜானர்: மார்கன் படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் இது எந்த மாதிரியான படம் என குழம்பிப் போயுள்ளனர். இது என்ன மாதிரியான படம் என சொல்லுங்கள் என விஜய் ஆண்டனியிடம் எழுப்பிய கேள்விக்கு, இந்த படத்தில் த்ரில்லர், அமானுஷ்யம், சூப்பர் நேச்சுரல் விஷயங்கள், காதல் கொஞ்சம் காமெடி என அனைத்து அம்சங்களும் அடுக்கப்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.
சின்மயிக்கு சான்ஸ் கொடுப்பீங்களா? தமிழ் சினிமாவில் பாடகி சின்மயி ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை பாடிக் கொண்டிருந்தார். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அவரை பாடக் கூடாது என்றும் டப்பிங் செய்யக் கூடாது என்றும் தடைகள் விதிக்கப்பட்டன. சமீபத்தில் நடைபெற்ற தக் லைஃப் இசை வெளியீட்டு விழாவில் பாடகி தீ பங்கேற்காத நிலையில், முத்த மழை பாடலின் தமிழ் வெர்ஷனை மேடையில் ஏறி சின்மயி பாடியிருந்தார். அது ரசிகர்களை அதிகம் ஈர்த்த நிலையில், அவர் மீண்டும் தமிழில் பாட வேண்டும் என்கிற கோரிக்கையை ரசிகர்கள் வைத்து வருகின்றனர். இந்நிலையில், மார்கன் படத்தின் புரமோஷனுக்கு வந்த விஜய் ஆண்டனியிடம் சின்மயிக்கு சான்ஸ் கொடுப்பீங்களா? என்கிற கேள்விக்கு கண்டிப்பாக, சீக்கிரமே படங்களுக்கு இசையமைக்க முடிவு செய்திருக்கிறேன். அவரை நிச்சயம் என்னுடைய இசையில் பாட வைப்பேன் என்றார். ஏற்கனவே 'நம்பியார்' படத்தில் விஜய் ஆண்டனி இசையில் சின்மயி பாடியிருக்கிறார்.
விஜய் ஆண்டனிக்கு வெற்றி கிடைக்குமா? இசையமைப்பாளராக ஏகப்பட்ட சூப்பர் ஹிட் பாடல்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த விஜய் ஆண்டனி நடிகராக மாறிய பின்னரும், பல நல்ல கதைகளை கொடுத்து வருகிறார். பெரிய நடிகர்கள் படங்களில் கதை இல்லையே என ரசிகர்கள் குறை சொல்லி வரும் நிலையில், வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் விஜய் ஆண்டனிக்கு இந்த மார்கன் திரைப்படம் நிச்சயம் பெரிய வெற்றியை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. படத்துக்காக ஒரு பக்கம் பெயின்ட் அடித்துக் கொண்டு மெனக்கெட்டு நடித்துள்ளார் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











