மாஸ்டர் பொங்கல்.. சமுத்திரகனியுடன் சூப்பர் புராஜெக்ட்.. கேப்மாரி பட அனுபவம்.. எஸ்ஏசி எக்ஸ்க்ளூசிவ்!

சென்னை: பழம்பெரும் இயக்குநரும் தளபதி விஜய்யின் அப்பாவுமான எஸ்ஏசி என சுருக்கமாக அழைக்கப்படும் எஸ்.ஏ. சந்திரசேகரின் எக்ஸ்க்ளூசிவ் ஆன ஷூட்டிஸ்பாட் பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.

Recommended Video

அந்த படம் ஏன் எடுத்தனு கேட்டாங்க | CLOSE CALL WITH DIRECTOR S.A.CHANDRASEKAR |FILMIBEAT TAMIL

கொரோனா காலத்திலும் தனது வயதை பொருட்படுத்தாமல் படு பிசியாக ஷூட்டிங் செய்து வருகிறார் இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர்.

இயக்குநரும் நடிகருமான சமுத்திரகனியுடன் புதிய புராஜெக்ட் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருக்கும் அவரை ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மடக்கி எடுத்த க்ளோஸ் கால் பேட்டி நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டில் வெளியாகி உள்ளது.

அந்த படம் ஏன் எடுத்தனு கேட்டாங்க

அந்த படம் ஏன் எடுத்தனு கேட்டாங்க

சமூதாய அக்கறை கொண்ட டிராபிக் ராமசாமி படத்தை எடுத்த போது பாராட்டாத உலகம், நடிகர் ஜெய், நடிகைகள் வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி உள்ளிட்டோரை வைத்து ரொமான்டிக்காக எடுத்த கேப்மாரி படத்தை பார்த்துவிட்டு இந்த படத்தை ஏன் எடுத்தீங்கன்னு திட்றாங்க சார் என எஸ்ஏசி செம சிம்பிளாக பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

நான் கடவுள் இல்லை

நான் கடவுள் இல்லை

நடிகனாகவும் உதவி இயக்குநராகவும், உதவி கதாசிரியராகவும் சமுத்திரகனி இந்த நான் கடவுள் இல்லை என்கிற புராஜெக்டில் பணியாற்றுவது குறித்த அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். சமுதாய அக்கறை ரொம்பவே அதிகமாக கொண்ட ஒரு நல்ல மனிதர் சமுத்திரகனி. ஆரம்பத்தில் இயக்குநரை வைத்து எப்படி எடுக்கப்போறோம் என நினைத்தேன். ஒரே நாளில் இருவரது எண்ண ஓட்டங்களும் ஒன்றாக ஆகிவிட்டன என்றார்.

கொரோனா நெருங்காது

கொரோனா நெருங்காது

இந்த வயதிலும் ஓயாமல் உழைக்கிறீங்களே எப்படி என கேட்டதற்கு, சினிமா மீது உள்ள காதல் சார், அது கடைசி வரைக்கும் மாறாது. பணம் காசு வச்சிருந்தா மட்டும் சினிமா எடுக்க முடியுமா? என்றும், கழுத்தில் ஒரு டேக் மாதிரி மாட்டி இருக்கீங்களே என்னன்னு கேட்டதுக்கு, இது இருந்தா 100 மீட்டருக்கு வைரஸ் பரவாதுன்னு சொன்னாங்க, அதை நம்பி வேலை செய்றேன் என சிரித்துக் கொண்டே கூறினார்.

மாஸ்டர் பொங்கல்

இப்படி எல்லாத்தையும் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு ஓப்பன் ஹார்ட்டாக பேசிய விஜய் அப்பாவிடம், மறக்காம மாஸ்டர் படம் குறித்த ஹாட் அப்டேட்டையும் கேட்க, மாஸ்டர் படம் தியேட்டர்களில் பொங்கலுக்கு வந்தால் நல்லா இருக்கும், அப்படி தான் வரும் என நினைக்கிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X