10 ஆண்டுகளுக்கு பிறகு சன் டிவியில் விஜய்யின் ஸ்பெஷல் பேட்டி.. ஒளிபரப்பு எப்போ தெரியுமா?
சென்னை: பீஸ்ட் படத்துக்காக சன் பிக்சர்ஸ் செய்துள்ள புரமோஷன் பேட்டியின் பிரத்யேக புரமோ தற்போது வெளியாகி உள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் விஜய் சன் டிவிக்கு ஸ்பெஷல் பேட்டி கொடுத்துள்ளார் என சன் டிவி அறிவித்துள்ளது.
தொகுப்பாளர்கள் யாரும் பேட்டி எடுக்காமல் இயக்குநர் நெல்சனே நடிகர் விஜய்யை பேட்டி எடுப்பதும் இருவரும் சேர்ந்து ரகளை பண்ணுவதுமாக அமைந்துள்ள பேட்டி அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாக போகிறது.

10 ஆண்டுகளுக்கு பிறகு
சன் டிவியில் நடிகர் விஜய் பேட்டி கொடுத்து 10 ஆண்டுகள் ஆகிறது என சன் டிவியே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பீஸ்ட் படத்தின் புரமோஷனுக்காக இயக்குநர் நெல்சன் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் செம ரகளையுடன் நடிகர் விஜய் பதில் அளித்துள்ளார். அடுத்த ஞாயிற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

வேறமாறி புரமோ
இயக்குநர் நெல்சனே நடிகர் விஜய்யை பேட்டி எடுக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பேட்டியின் பிரத்யேக புரமோவை தற்பொது சன் டிவி எந்தவொரு முன் அறிவிப்புமின்றி சட்டென வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது. வரும் ஏப்ரல் 10ம் தேதி இரவு 9 மணிக்கு இந்த பேட்டி வருகிறது.

குட்டி ஸ்டோரி ஸ்டாக் இல்லையா
வெறும் இரண்டே இரண்டு சோபா மட்டுமே போடப்பட்டு விஜய் மற்றும் நெல்சன் மிகவும் அருகே அருகே அமர்ந்து கொண்டு எக்ஸ்ட்ரீம் க்ளோஸ் அப்பில் இந்த பேட்டி உருவாகி உள்ளது போன்ற ஷாட்கள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன. விஜய்யிடம் குட்டி ஸ்டோரி ஏதாவது இருந்தா சொல்லுங்க சார் என நெல்சன் கேட்க, ஏதும் ஸ்டாக் இல்லப்பா என விஜய் சொல்வதை பார்த்து விஜய்யிடமே குட்டி ஸ்டோரி தீர்ந்து விட்டதா என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். ஆனால், இந்த பேட்டி முழுவதுமே செம ஃபன்னாக செல்லும் என்று தான் எதிர்பார்க்கப்படுகிறது.

பூஜா ஹெக்டே எங்கே
நடிகர் விஜய்யை மட்டும் வைத்து இயக்குநர் நெல்சன் பேட்டி எடுத்துள்ள நிலையில், பிரம்மாண்ட செட் ஏதும் இல்லையா என்றும், ஹீரோயின் பூஜா மற்றும் நடிகர் செல்வராகவன் உள்ளிட்ட பீஸ்ட் படக்குழுவினர் இந்த பேட்டியில் பங்கேற்கவில்லையா என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

ஆடியோ லாஞ்ச் மிஸ்ஸிங்
பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் வைத்து மைக் பிடித்து நடிகர் விஜய் பேசுவதை காணவே அவரது படத்திற்கு முன்னதாக ரசிகர்கள் வெறித்தனமாக வெயிட் செய்வார்கள். ஆனால், இந்த முறை ஆடியோ லாஞ்ச் மற்றும் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி என எந்த புரமோஷனையும் செய்யாமல் சன் பிக்சர்ஸ் ரசிகர்களை ரொம்பவே ஏமாற்றி விட்டதாக ரசிகர்கள் தங்களின் வேதனையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
5 மொழிகள் ஏன்
வலிமை, பீஸ்ட் என புதிய படங்கள் 5 மொழிகளில் வெளியாவதாக அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின்றன. ஆனால், அந்த ஏரியாக்களில் எந்த புரமோஷனையும் ஏன் செய்வதில்லை என ரசிகர்கள் எழுப்பும் கேள்விக்கு விடையாக ஓடிடி ரிலீசுக்காகத் தான் இத்தனை மொழிகளில் படம் டப் செய்யப்படுவதாக கூறுகின்றனர். மற்ற மொழி ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்கவில்லை என்றாலும், ஓடிடியில் படத்தை பார்த்து வருகின்றனர் என்பதால் தான் இப்படி ரிலீஸ் செய்கிறார்களாம். சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை திரைப்படம் 500 மில்லியன் நிமிடங்கள் ஓடிடியில் ஓடி சாதனை படைத்ததும் இப்படித்தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











