Exclusive: மனைவி தான் சப்போர்ட்.. “ரோஜா ரோஜா” பாடகர் சத்யன் மனைவியுடன் மனம் விட்டுப் பேசிய பேட்டி!
சென்னை: "பல பேர் மைக் தட்டி பிடுங்கி இருக்காங்க" என்று பாடகர் சத்யன் கூறியது, அவரது இசைப் பயணத்தில் அவர் சந்தித்த சவால்களை வெளிப்படுத்துகிறது. ரோஜா ரோஜா பாடல் மூலம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் பின்னணி பாடகர் சத்யனும், அவரது மனைவி நித்யாவும் தங்களது காதல் கதை மற்றும் இசைப் பயணம் குறித்து மனம் திறந்துள்ளனர்.
சத்யனும் நித்யாவும் ஒரு கச்சேரியில் ஒன்றாகப் பாடியபோது நண்பர்களாக அறிமுகமாகி, அது காதலாக மாறியுள்ளது. ஒன்பது வருடங்கள் காத்திருந்து திருமணம் செய்து கொண்டனர். நித்யா, சத்யனை ஒரு பெரிய பாடகராக பார்க்க வேண்டும் என்று எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறுகிறார்.

சத்யனுக்கு இசைத்துறையில் வாய்ப்பு கிடைக்காததற்கான காரணத்தை பற்றி பேசுகையில், ஒரு கட்டத்தில் தன்னால் வீட்டிற்கு ஒரு ரூபாய் கூட சம்பாதித்து தர முடியவில்லை என்று வருத்தத்துடன் கூறினார். இருப்பினும், நித்யா தனது கணவரின் திறமையை எப்போதும் நம்பினார்.
சத்யன் மற்றும் நித்யா இருவரும் தங்களது முதல் டூயட் பாடல் அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். நித்யா, சத்யனின் அர்ப்பணிப்பு மற்றும் திறமையை புகழ்ந்து பேசினார். மேலும், சத்யனுக்கு ஒரு தெய்வீக குரல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சத்யன் ஒரு சிறந்த பாடகர் மட்டுமல்ல, ஒரு சமூக ஆர்வலரும் கூட. மனித உரிமைகள் மற்றும் பெண்கள் உரிமைகள் குறித்து அவர் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். 2019ல் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வுக்காக 28 மணி நேரம் பாடி சாதனை படைத்துள்ளார்.
சமூக ஊடகத்தின் முக்கியத்துவத்தை பற்றி சத்யன் பேசுகையில், ஒருவருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காத போது, அது ஒரு முக்கியமான பங்கு வகிக்கும் என்கிறார். மேலும், ஊடக வெளிச்சம் இல்லாத திறமையானவர்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர சமூக ஊடகங்கள் உதவுகின்றன என்கிறார்.
2023 ஆம் ஆண்டு நியூ இயர் நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட 50,000 பேர் முன்னிலையில் சத்யன் பாடியதை நித்யா நினைவு கூர்ந்தார். அந்த தருணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததாகவும் அவர் கூறினார். அந்த நிகழ்ச்சியை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடினர்.
கொரோனா ஊரடங்கு சமயத்தில், சத்யன் மற்றும் நித்யா, ஃபேஸ்புக் லைவ் மூலம் நிதி திரட்டி 6,000 குடும்பங்களுக்கு உதவி செய்தனர். இந்த தம்பதியின் மனிதநேயமிக்க செயல் பலரையும் கவர்ந்தது. கடினமான காலங்களில் மற்றவர்களுக்கு உதவுவதில் அவர்கள் காட்டிய அக்கறை பாராட்டுக்குறியது. கண்டிப்பாக மீண்டும் பழையபடி சத்யன் மற்றும் நித்யா தம்பதியினரின் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் குவிய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











