கிறுக்கு சிறுக்கியா மாறிய விஜே மகேஸ்வரி.. அம்மாவாகிட்டா இப்படி கவர்ச்சியா ஆடக்கூடாதா?.. ஓபன் டாக்!
சென்னை: இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்களின் ஐடிக்களையும் கவர்ச்சி மாடல் நடிகைகளையும் தேடி ஓடுவதற்கு முன்பாக சன் மியூசிக் விஜே தான் 90ஸ் கிட்ஸ்களின் கனவு தேவதைகளாக இருந்தனர். ஹேமா சின்ஹா, மகாலட்சுமி, மகேஸ்வரி எல்லாம் புதிய பாடல்களை போடுவதை விட அவர்களிடம் பேசவே பலரும் போன் பண்ணி லைனில் காத்திருந்து பேசிய காலமெல்லாம் இருந்தது. இன்னமும் 90ஸ் கிட்ஸ்களின் மலரும் நினைவாக அவை வலம் வருகின்றன.
அப்படி ரசிகர்களை அதிகம் கவர்ந்த விஜே மகேஸ்வரி அசத்தப் போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றும் வந்த நிலையில், சமீப காலமாக கவர்ச்சி ரூட் பக்கம் திரும்பியது பலரையும் ஷாக் ஆக்கியது.

இந்நிலையில், அவர் அளித்த பேட்டியில், அம்மாவாகிட்டா இப்படி கவர்ச்சி காட்டி ஆடக்கூடாதா? இந்த காலத்து ஜென் ஸி பசங்களாம் இதுமாதிரி கேள்விகளையே தவிர்த்து விடுவார்கள் என பேட்டியளித்துள்ளார்.
கிறுக்கு சிறுக்கி வீடியோ ஆல்பம்: பிரபல தொகுப்பாளினியாக 16 வயதிலேயே சன் மியூசிக்கில் கலக்கியவர் தான் விஜே மகேஸ்வரி. 11ம் வகுப்பு படிக்கும் போதே வந்த வாய்ப்பை தவறவிடாமல் கச்சிதமாக பயன்படுத்தி சன் மியூசிக்கில் கலக்கினார். 21 வயதிலேயே திருமணம் ஆகி ஆண் குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகிவிட்டார். விஜே மகேஸ்வரி 2022ல் விஷமக்காரன் படத்திலும் 2024ல் கிஸ்ஸு கிஸ்ஸு படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் சரிகம தமிழ் யூடியூப் சேனலில் அவர் நடித்த கிறுக்கு சிறுக்கி வீடியோ பாடல் வெளியாகிறது. அதன் புரமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அம்மாவானா ஆடக்கூடாதா?: எந்தளவுக்கு கவர்ச்சி காட்ட வேண்டும், கவர்ச்சிக் காட்டக்கூடாது என்பது எனக்குத் தெரியும். அம்மாவான பிறகு ஏன் இப்படியெல்லாம் ஆடுறீங்க, நடிக்கிறீங்க போன்ற கேள்விகள் எல்லாம் ரொம்பவே பூமர் தனமானது. இந்த காலத்து பிள்ளைகள் எல்லாம் அதையெல்லாம் பொருட்டாகவே எடுத்துக் கொள்ள மாட்டார்கள். எனக்கு என்ன புடிச்சிருக்கோ அதை மட்டும் தான் நான் செய்வேன் என செம போல்டாக விஜே மகேஸ்வரி பதிலளித்துள்ளார்.
ஏஐ மோசடி: என்னை மட்டுமின்றி என் மகனை கூட விடாமல் ஏஐ மூலமாக ஆபாசமாக சித்தரித்து அசிங்கப்படுத்தினர். அதனால், சைபர் கிரைமில் எல்லாம் புகார் கொடுத்துள்ளேன். சமூக வலைதளங்கள் வருவதற்கு முன்பு வரை என்னை எல்லாம் பொது வெளியில் பார்த்தால் அந்த அளவுக்கு மரியாதை கொடுப்பார்கள். இப்போ சோஷியல் மீடியா புல்லிங் தான் அதிகளவில் இருக்கிறது. சோஷியல் மீடியா மூலமாகத்தான் ரசிகர்களை கனெக்ட் செய்ய முடிகிறது. ஆனால், அந்த இடத்திலேயே அசிங்கமான ஆபாச எண்ணங்களை ஏஐ மூலம் விதைப்பது ரொம்பவே வேதனையாக உள்ளது என்றும் விஜே மகேஸ்வரி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications