Exclusive: ’வாழை’ ஒரு ஆபாச படம் மட்டுமல்ல.. சமூக விரோத படமும்கூட.. சாரு நிவேதிதா பிரத்யேக பேட்டி!
சென்னை: மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி வெளியான 'வாழை' திரைப்படம் விஜய்யின் 'கோட்' அலையையும் தாண்டி இன்னமும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களிலேயே வாழை திரைப்படம் தான் சிறந்த படம் என பல முன்னணி பிரபலங்களும் மக்களும் பாராட்டி வருகின்றனர்.
ஆனால், வாழை திரைப்படம் ஒரு ஆபாச படம் என எழுத்தாளர் சாரு நிவேதிதா கடுமையாக விமர்சித்தது எழுத்துலகில் மட்டுமின்றி திரையுலகிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், மாரி செல்வராஜின் வாழை படத்தை ஏன் ஆபாச படம் என சொல்றீங்க என தமிழ் பிலிமிபீட் நேரடியாக அவரிடமே பேட்டி எடுக்க அப்படி தான் சொல்லக் காரணம் என்ன? என்பது குறித்து விரிவாக பல காரணங்களை அடுக்கி பேட்டிக் கொடுத்துள்ளார்.
பரியேறும் பெருமாள் படத்தை பாராட்டினேன்: மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தை பலர் பாராட்டாத நிலையில், நான் அந்த படத்தை அப்படி பாராட்டி கொண்டாடினேன் என சாரு நிவேதிதா இந்த பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், வாழை படத்தை பெரிதும் எதிர்பார்ப்புடன் சென்று பார்த்த தனக்கு அந்த படம் மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்த நிலையில், தான் இப்படி விமர்சித்துள்ளேன் என சாரு நிவேதிதா கூறியுள்ளார்.
அம்மா, அக்கா மாதிரி நினைக்கல: வாழை படத்தில் மாரி செல்வராஜ் இளம் வயதில் பூங்கொடி டீச்சரை காதலிக்கும் காட்சிகளை வைத்தது மிகப்பெரிய தவறு என்றும் அவர் அம்மா மாதிரி, அக்கா மாதிரி இருக்கீங்க என்று வசனத்தால் சொன்னாலும் அவருடைய சிந்தனை மற்றும் உடல் அசைவுகள் அப்படி இல்லை என்று சாரு நிவேதிதா போட்டுத் தாக்கியுள்ளார்.

டிவிஎஸ் 50ல் முன்னாடி உட்கார வைத்து: பூங்கொடி டீச்சராக மலையாள நடிகை நிகிலா விமலை நடிக்க வைத்ததில் இருந்தே மாரி செல்வராஜின் மனநலம் தெரிகிறது. அந்த ஊரில் உள்ள எந்த பெண்களும் அப்படியொரு கவர்ச்சியாக இல்லை. ஆனால், அவர் மட்டும் ஏன் திணிக்கப்பட்டுள்ளார். மேலும், டிவிஎஸ் 50ல் முன்னாடி உட்கார வைத்து அந்த பொசிஷனையும் காட்டியிருக்கும் விதத்தில் மறைமுகமாக காமத்தை விதைத்து இருக்கிறார் மாரி செல்வராஜ்.
ஆபாச படம் மட்டுமல்ல: மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படம் வெறும் ஆபாச படம் மட்டுமல்ல அந்த படம் சமூக விரோதப் படம் கூட (Anti Social) என கடுமையாக விமர்சித்து மாரி செல்வராஜ் எதையும் வெளிப்படையாக காட்டாமல் சப்ரஸ் செய்து காட்சிகளை அடுக்கி இருக்கும் விதத்தில் உணர்ச்சிகளை தூண்டுகிறார். ஆபாச படங்களில் மட்டும் தான் இதுபோல உணர்ச்சிகளை தூண்டும் விஷயங்கள் இருக்கும். அதே போல நான் கடவுள் படத்தில் குழந்தைகளை கடத்தி ஊனமாக்கி பிச்சை எடுப்பது போல வறுமையை காட்டி பல கோடிகளை சம்பாதித்து வருகிறார் மாரி செல்வராஜ் என கடுமையான விமர்ச்னாங்களை எழுத்தாளர் சாரு நிவேதிதா வைத்துள்ளார்.
சாரு நிவேதிதாவுக்கு எதிராக: மாரி செல்வராஜ் மற்றும் அவரது வாழை படத்தை விமர்சித்துள்ள சாரு நிவேதிதாவுக்கு எதிராக ஏகப்பட்ட ரசிகர்களும் எழுத்தாளர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இவரது விமர்சனத்துக்கு மாரி செல்வராஜ் பதில் அளிப்பாரா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. சாரு நிவேதிதா மேலும், என்னவெல்லாம் வாழை படத்தை பற்றி சொல்லியிருக்கிறார் என்பதை காண இந்த பேட்டியை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











