கொலை வெறி தாக்குதல்.. ஆசிட்டை ஊத்திடுவேன்.. மிரட்டிய கூலிப்படை..மோகன் ஷர்மாவின் பரபரப்பு பேட்டி!
சென்னை: பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான மோகன் ஷர்மாவை கூலிப்படை கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கி உள்ளது.
நடிகர் மற்றும் தயாரிப்பாளரான மோகன் ஷர்மா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மர்ம கும்பல் தாக்குதல்: நடிகர் மோகன் ஷர்மா தனது குடும்பத்தோடு சேத்துப்பட்டு ஹரிங்ட்ன் சாலையில் தற்போது வசித்து வருகிறார். இரவு திநகர் சென்று விட்டு வீட்டிற்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் சிலர் நடிகர் மோகன் ஷர்மாவை கீழே தள்ளி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நடிகர் மோகன் ஷர்மா கண்களுக்கு கீழே காயம் ஏற்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
வீட்டை ஆக்கிரமித்தனர்: மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மோகன் ஷர்மா யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், நான் கடந்த சில வருடத்திற்கு முன் போயஸ் கார்டனில் இருந்த வீட்டை விற்றேன். நான் வீட்டை விற்ற அடுத்த நாளில் ஒரு புரோக்கர் வீட்டின் கதவை உடைத்து வீட்டை ஆக்ரமித்துக் கொண்டார். இது குறித்து நான் வீட்டுக்கு சென்று விசாரித்தபோது நீங்க தான் வீட்டை விற்றுவிட்டீர்களே உங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று மிகவும் தெனாவட்டாக கூறினார்.
மோதிரத்தால் முகத்தில் குத்தினார்: இதுகுறித்து எனது அட்வகேட்டிடம் பேசினேன், அவர் நீதிமன்றத்தில் எவிக்ஷன் ஆர்டர் வாங்க சொன்னார். இதனால் எவிக்ஷன் ஆர்டருக்காக கோர்டில் அப்பீலுக்கு சென்றேன். இந்த விஷயம் எப்படியோ இந்த புரோக்கருக்கு தெரிந்துவிட்டது. செவ்வாய்க்கிழமை வீட்டிற்கு வந்து கொண்டிருந்தேன். மருந்து வாங்க காரை விட்டு இறங்கிய போது, காரில் வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் என்னை சரமாரியாக தாக்கினார்கள். அதில் ஒருவன் கையில் பெரிய மோதிரம் போட்டிருந்தான். அந்த மோதிரத்தால் என் முகத்தில் வளைத்து வளைத்து குத்தினான்.

குடும்பத்தோடு அழித்துவிடுவேன்: எனக்கு தலை சுற்றியதால், அப்படியே மயங்கிவிட்டேன், அப்போது ஒருவன் கையில் சிறிய பாட்டிலை காட்டி இதில் ஆசிட் இருக்கிறது அப்படியே முகத்தில் ஊற்றிவிடுவேன். இனிமேல், போயஸ் கார்டன் வீடு தொடர்பாக எவிக்ஷன், அது இதுனு எதாவது கேஸ் போட்டேனா அவ்வளவுதான், குடும்பத்தோடு அழித்துவிடுவோம், பிணம்கூட கிடைக்காது என்று மிரட்டினார்கள் என்று மோகன் ஷர்மா மனம் வருந்தி பேசினார்.
கைது செய்ய வேண்டும்: இதுகுறித்து சேத்துப்பட்டு காவல்நிலையத்திலும், கமிஷனர் அலுவலகத்திலும், சிஎம் செல்லுக்கும் புகார் கொடுத்து இருக்கிறேன். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என் உயிருக்கும், என் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நடிகர் மோகன் ஷர்மா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











