உன்ன நெனச்சு நெனச்சு உருகிப்போனேன்... சைகோ பாடல்களால் இளையராஜாவை கொண்டாடும் ஃபேன்ஸ்! - வீடியோ
Recommended Video
சென்னை: சைக்கோ படத்தில் தனது அக்மார்க் இசையால் அசத்தியிருக்கும் இளையராஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் மிஷ்கின், சித்திரம்பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய் துப்பறிவாளன் உள்ளிட்ட படங்களை இயக்கியிருக்கிறார். அந்த வகையில் தற்போது நடிகர் உதயநிதி ஸ்டாலினை வைத்து இயக்கியிருக்கும் படம் சைகோ.
இந்தப் படம் கடந்த 24 ஆம் தேதி வெளியானது. சைகோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக நடித்துள்ளார்.

உன்ன நெனச்சு..
அவருடன் நித்யா மேனன், அதிதி ராவ் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இதனால் படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது. மேலும் படம் வெளியாகும் முன்பே உன்ன நெனச்சு என்ற முதல் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.

சித் ஸ்ரீராம் குரலில்
இப்பாடலின் வரிகளை கவிஞர் கபிலன் எழுத சித் ஶ்ரீராம் பாடியுள்ளார். மிகவும் எளிமையான வரிகளால் மெலோடியாக உருவாக்கப்பட்டுள்ளது இந்த பாடல். அப்போதே அந்த பாடல் மக்களின் வரவேற்பை பெற்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து ‘நீங்க முடியுமா' என்ற 2-வது பாடலை இயக்குநர் கவுதம் மேனன் வெளியிட்டார்.

தாயின் மடியில்
இந்த பாடலையும் பின்னணி பாடகர் சித்ஶ்ரீராமே பாடியிருக்கிறார். இப்பாடலுக்கும் கவிஞர் கபிலன் தான் வரிகள் எழுதியுள்ளார். நீங்க முடியுமா பாடல் இளையராஜாவின் இசையால் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டி கலங்க வைக்கும் வகையில் உள்ளது இப்பாடல். அதனை தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு வெளியானது தாயின் மடியில் பாடல்.

பாடல்கள் செம ஹிட்
இந்த பாடலை இயக்குநர் மிஷ்கின்தான் எழுதியுள்ளார். இளையராஜாவின் இசையில் கைலாஷ் கேர் காந்தக் குரலில் மிஷ்கின் வரிகளில் வலியோடு வெளியாகியுள்ள தாயின் மடியில் பாடல் உருக வைத்துள்ளது. தற்போது சைகோ படம் வெளியாகி உள்ள நிலையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்து வருகிறுது.

கொண்டாட்டம்
இளையராஜா இசையில் சைக்கோ படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்து தரப்புமக்களையும் வசப்படுத்தியிருக்கிறது. கல்லூரி மாணவிகள், வேலைப் பார்க்கும் பெண்கள், இல்லத்தரசிகள், மாணவர்கள், இளைஞர்கள் என பலரும் இளையராஜாவின் இசையையும் சித்ஸ்ரீராமின் குரலையும் கொண்டாடி வருகின்றனர்.

தவிக்கும்போது..
இதுதொடர்பாக ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட் தளத்துக்கு கருத்து தெரிவித்துள்ள ரசிகர்கள், சைகோ படத்தின் பால்களை புகழ்ந்து தள்ளியிருக்கின்றனர். சோகமாக இருக்கும் போதும் தூக்கம் வராமல் தவிக்கும்போதும் இந்த பாடல்கள் பெரும் உதவியாக இருப்பதாகவும் நேயர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











