Rajini, Kamal: ஹீரோ யாரு? கிழியப்போகுது ஸ்கிரீன்.. ரசிகர்களின் ரியாக்ஷன்!
சென்னை: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் அபூர்வ ராகம், மூன்று முடிச்சு, அவர்கள், பதினாறு வயதினிலே, நினைத்தாலே இனிக்கும் என அடுத்தடுத்த படத்தில் நடித்து வந்தனர். ஒரு கால கட்டத்திற்கு பின், இருவரும் கலந்து பேசி இணைந்து நடிக்க வேண்டாம் என முடிவெடுத்தனர். அவர்கள் அந்த முடிவெடுத்து 48 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது நெல்சன் இயக்கும் படத்தில் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தின் அட்டகாசமான ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் இப்போதே கொண்டாட்டத்திற்கு தயாராகி விட்டனர்.
ப்ரோமோ குறித்து பேசிய ரசிகர் ஒருவர், ரெண்டு பேரையும் ஒரே நேரத்தில் திரையில் பார்த்ததே திருப்தியாக இருக்கிறது. இந்த ப்ரோமோவை பார்த்த பிறகு படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அனிருத், நெல்சன் இதை விட படத்திற்கு வேறு என்ன வேண்டும். இந்த படத்தில் யார் ஹீரோ என்றால் இரண்டு பேருமே எனக்கு பிடித்தமானவர்கள் தான். ஆனால், வில்லனாக கமல் நடித்தால் மிகவும் அட்டகாசமாக இருக்கும். கமல் கலக்கி விடுவார் என்றார்.

அட்டகாசமான ப்ரோமோ: மற்றொரு ரசிகர், ப்ரோமோ அட்டகாசமாக இருக்கிறது. 48 வருடத்திற்கு பிறகு இருவரையும் ஒன்றாக திரையில் பார்க்கிறேன். இருவருமே திரையில் வேறு மாதிரி இருக்கிறார்கள். ப்ரோமோ மிகவும் சர்ப்ரைசிங்காக இருந்தது. என்னை பொருத்தவரையில் இந்த திரைப்படத்தில் கமல் வில்லனாக இருந்தால். நான் ரசித்து பார்ப்பேன் என்றார்.
தலைவர் தனி ரகம்: மற்றொரு ரசிகர், பல வருடத்திற்கு பிறகு இரண்டு பேரும் இணைந்து நடித்திருக்கிறார்கள், தலைவர் பக்கத்தில் கமல் இருந்தாலும் தலைவர் தனியாக தெரிகிறார். எப்பொழுதுமே தலைவர் வேற ரகம். இந்த திரைப்படத்தில் தலைவர் ரஜினி வில்லனாக இருக்க வேண்டும். கமல் ஹீரோவாக இருந்தால், படம் இன்னும் சூப்பராக இருக்கும் என்றார்.
ஹீரோ யாரு?: ஒரு பக்கம் சூப்பர் ஸ்டார், ஒரு பக்கம் உலக நாயகன் என ப்ரோமோ மிகவும் அட்டகாசமாக இருக்கிறது. மூன்று நிமிடத்திற்கு அனிருத் பிஜிஎம்மை தெறிக்கவிட்டு இருக்கிறார். எனக்கு இந்த திரைப்படத்தில் ரஜினி வில்லனாக நடித்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எந்திரன் படத்தில் சிட்டி ரோபோவாக நடித்து ரஜினி அட்டகாசப் படுத்திருப்பார். அதேபோல இந்த திரைப்படத்திலும் அவர் வில்லனாக நடித்தால் நல்லதாக இருக்கும். இந்த படத்திற்கு நெல்சன் சரியான தேர்வு, இன்றைய இளைஞர்களின் பல்ஸ் என்ன என்பது அவருக்கு நன்றாக தெரியும் என்றார்.


Click it and Unblock the Notifications











