என் மடியிலத்தான் சாவேனு சொன்னியே.. நீயும் உன் குடும்பமும் நல்லாவே இருக்க மாட்டீங்க.. ஜாய் கதறல்!

சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் இன்று காலை வெளியிட்டு இருந்த அறிக்கையில், ஜாய் என்னை அவதூறு செய்வதற்காக தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளிப்படுவதாக மிரட்டியதால் நான் அவரை திருமணம் செய்து கொண்டேன் என்று கூறியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஜாய் கிரிஸில்டா மிரட்டி எப்படி திருமணம் செய்ய முடியும் என கண்ணீருடன் பேசி உள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு தன்னை திருமணம் செய்து கொண்டதாகவும், தான் கருவுற்ற நிலையில், தன்னிடமிருந்து விலகியதாக ஜாய் கிரிசில்டாமகளிர் ஆணையத்திலும் புகாராக அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டது. அதில், நேற்று விசாரணை முடிந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு துணை ஆணையருக்கு மாநில மகளிர் ஆணையம் பரிந்துரை கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிறிஸ்டில்லாவை திருமணம் செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டதாகவும், குழந்தை தன்னுடையது தான் என ஏற்றுக்கொண்டதாகவும் தகவல்கள் வெளியானது.

ஜாய் பேட்டி: இதுகுறித்து,ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ள ஜாய் கிரிஸில்டா, நான் மிரட்டி திருமணம் செய்து கொண்டேன் என சொல்லி இருக்கிறார். மிரட்டி திருமணம் செய்து கொள்வதற்கு அவர் சின்ன குழந்தையா? எனக்கும் அவருக்கும் 35 வயதிற்கு மேல் ஆகிறது. அவரை நான் எப்படி மிரட்டி திருமணம் செய்தேன் என்று சொல்ல முடியும். இதுவரை நான் 35க்கும் மேற்பட்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறேன். ஏதாவது ஒரு புகைப்படத்தில் அவர் வெறுப்புடனோ, விருப்பம் இல்லாமலோ இருந்திருக்கிறாரா? அனைத்து புகைப்படத்திலும், மகிழ்ச்சியாக சிரித்தபடி தான் இருக்கிறார். ஒருவேளை அவர் சொன்னபடியே நான் மிரட்டிய திருமணம் செய்து கொண்டே இருந்தால், மெசேஜில் 'ஐ லவ் யூ பொண்டாட்டி' என்று எப்படி அனுப்பினார். ஐ லவ் யூ பொண்டாட்டி, நீ இல்லாமல் நான் இல்லை, உன் மடியில் தான் நான் சாவேன் என அவர் அனுப்பிய ஏராளமான மெசேஜ்கள் என்னிடம் இருக்கிறது.

சாபம் சும்மாவிடாது: பணத்திற்காக திருமணம் செய்தேன் என்று சொல்லி இருக்கிறார். இதுவரையில் அவர் எனக்காக எதுவுமே செய்ததில்லை அவருடைய பேங்க் அக்கவுண்ட் டீடைல்சை காட்ட சொல்லுங்கள். பணத்தை எதிர்பார்த்து இருக்கும் பெண் பணத்தை வாங்கிக் கொண்டு அமைதியாக சென்று இருப்பாள். இதுபோன்று ரோடு, தெரு, போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என அழைந்து கொண்டு இருக்க மாட்டாள். ஒரு குழந்தையின் அப்பா, அந்த குழந்தையின் பிறப்பை கொச்சைப்படுத்தி பேசி இருக்கிறார். அந்த குழந்தையின் சாபம் உன்னையும், உன் குடும்பத்தையும் சும்மாவிடுமா என ஜாய் கிரிஸில்டா கண்ணீருடன் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X