For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நிறைய பேரு தியேட்டர் போயி பாக்க முடியல... காரணத்தை ஓப்பனா பேசிய முகேன் ராவ்

  |

  சென்னை : பிக்பாஸின் மூன்றாவது சீசனில் பங்கேற்று பிரபலமானவர் முகேன் ராவ். இவரின் நடிப்பில் வெள்ளித்திரையில் வெளிவந்துள்ள முதல் திரைப்படம் வேலன்.

  Recommended Video

  Velan | Mugen Rao Exclusive | கிராமத்து பையனா நடிக்கணும்னு ரொம்பநாள் ஆசை | Filmibeat Tamil

  அதிரடிக்காட்சிகளாக இன்னும் மக்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கிறது 2021 டிசம்பர் இறுதியில் வெளியான வேலன் திரைப்படம். கவின் எம் இயக்கத்தில், முகேன் ராவ், மீனாட்சி கோவிந்தராஜன், பிரபு, சூரி என பலரும் நடித்துள்ளனர்

  முதல் படமாக இருந்தாலும் தன் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் முகேன் ராவ். இந்தியா மட்டுமல்லாமல் மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும் இவரின் நடிப்பு பேசப்படுகிறது.

  சபாஷ் ராஜு.... கடைசியில் மனதில் உறுத்திய விஷயத்தை சொல்லி வருத்தம்.... சபாஷ் ராஜு.... கடைசியில் மனதில் உறுத்திய விஷயத்தை சொல்லி வருத்தம்....

  மலேசியா புகழ் வேலன்

  மலேசியா புகழ் வேலன்

  கேள்வி : முதல்பாலே சிக்ஸர்.. உங்களுக்கு கிடைச்ச பாராட்டுல எது ரொம்ப பிடிச்சது?

  பதில் : எனக்கு ஆதரவு கொடுத்து வர எல்லாருக்கும் ரொம்ப நன்றி தெரிவிச்சிக்கிறேன். பெரிய ஸ்க்ரீன் ல வரனும்ன்னு அப்பா முன்னாடி வாழ்த்தினாரு. ஆனா இப்ப அவரு இல்ல. ஆனா இப்ப அம்மா என்ன வாழ்த்தினாங்க.. "சாதிச்சிட்டடா"ன்னு சொல்லி சந்தோஷப்பட்டாங்க. அது மிகப்பெரிய உற்சாகமாவும் ஆசீர்வாதமாவும் இருந்துச்சு. வெளி நாட்டு மக்களும் நிறைய ஆதரவும் அன்பும் குடுத்துருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு..

  என் மகன் மாதிரியே

  என் மகன் மாதிரியே

  கேள்வி : ஷூட்டிங் ஸ்பாட் அனுபவங்கள் எப்படி?

  பதில் : ஸ்ரீரஞ்சனி ஷூட்ல ரொம்பவே அன்பா இருந்தாங்க. என் பையன் மாதிரியே இருக்கியேன்னு ல்லாம் சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க.. ஷூட்டிங் ஸ்பாட் ல யாருமே என்ன ஒரு புது பையன்.. இவன் கிட்ட ஏன் பேசனும்ன்னு அப்படியெல்லாம் நெனக்கவே இல்ல.. அவ்ளோ அன்பா, சப்போர்ட்டா இருந்தாங்க. ரொம்ப சரிசமமா நடத்துனாங்க. செட்ல இருந்த எல்லார்கிட்டயும் நிறைய விஷயத்த கத்துகிட்டேன். எவ்வளவு உயரத்துல இருந்தாலும் எல்லாரயும் மதிக்கனும்ன்னு ஒரு முக்கியமான விஷயத்த கத்துகிட்டேன்.

  தாறுமாறு சூரி

  தாறுமாறு சூரி

  கேள்வி : சூரியோட உங்க சேஸிங் ல்லாம் மீம் ல வர்ற அளவு ரீச் ஆகிட்டீங்களே?

  பதில் : ஆமா.. நெனச்சே பாக்கல.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அவர பாத்து பேசினப்ப கூட.. அண்ணே உங்கள ரொம்ப பிடிக்கும். நீங்க நடிச்ச சீன் ல இதெல்லாம் பிடிக்கும்-ன்னு பர்டிகுலர் சீன் ல்லாம் சொல்லி சொன்னேன். அவரு ரொம்ப சிரிச்சி சந்தோஷப்பட்டாரு. . நிறைய விஷயங்கள் சொல்லிக்குடுத்தார். ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு அவர் கூட நடிச்சது.

  சந்தேகப்பட்டாங்க

  சந்தேகப்பட்டாங்க

  கேள்வி : பிக்பாஸ் பேமிலி என்ன சொன்னாங்க?

  பதில் : சேண்டி அண்ணா, ரொம்பவே வாழ்த்துனாரு. ரொம்ப நல்லா டான்ஸ் பண்ணிருக்க.. ஆப்டா இருந்துச்சு. பாக்கவே நல்லாருந்துச்சுன்னு சொன்னாரு. பிக்பாஸ் டீம் ல க்ரிடிசைஸ் பன்றவங்க கூட பாசிட்டிவ்வா சொன்னாங்க.. ஃபைட் சீன் எப்படி பண்ண போறியோன்னு நெனச்சோம்.. ஆனா கன்வின்ஸிங் ஆ இருந்துச்சு.. நல்லாருந்துச்சுன்னு சொன்னாங்க.

  மிக்ஸிங் மன நிலை

  மிக்ஸிங் மன நிலை

  கேள்வி : இந்த வெற்றி எப்படி இருக்கு?

  பதில் : படத்தோட டைட்டில் அமைஞ்சதே ரொம்ப சந்தோஷமா இருக்கு. அதுவும் இந்த 2021 டிசம்பர் எண்ட் ல வந்துருக்கு படம். 2022 ஒரு வெற்றிகரமா அமைஞ்சிருக்கு. ஆனா வருத்தம் அப்பா இல்ல.. இந்த கொரோனா டைமா இருக்கறதால நிறைய பேரு தியேட்டர் போயி பாக்க முடியல. இப்படி ரெண்டு விதமாவும் இருக்கு மன நிலை. அன்பு,ஆதரவு அங்கீகாரம் ரெண்டும் கிடைக்கிறதுதான் ஒரு கலைஞனுக்கு திருப்தி. அது கிடைச்சது எனக்கு மிகப்பெரிய கிஃப்ட். என சொல்லி மகிழ்ந்தார் முகேன் ராவ். இந்த பேட்டியின் முழு வீடியோவில் இன்னமும் நிறைய ஸ்வாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து உள்ளார் . பில்மிபீட் தமிழ் யூட்யூப் சென்று முழு வீடியோவையும் காணலாம் .

  English summary
  Feels Sad that people Not Able to Watch Movies in Theatres Says Mugen Rao
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X