twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னால் போலீசை ஹீரோவாக காட்ட முடியாது.. இயக்குனர் ராம் பளீர்!

    |

    சென்னை : தனது படங்களின் மூலம் தொடர்ந்து பல ரசிகர்களையும் பல விருதுகளையும் வென்று வருபவர் இயக்குனர் ராம்.

    படங்களிலும் சரி தனிப்பட்ட முறையிலும் சரி எப்போதும் ஒளிவு மறைவில்லாமல் பேசி வரும் ராம் தற்பொழுது போலீசை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருக்கிறார்.

    சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், என்னால ஒரு நாளும் போலீசை ஹீரோவா காட்ட முடியாது என பதில் அளித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    அப்பாவிற்கு டான்ஸ் கற்றுத்தரும் சாந்தனு.. வைரல் வீடியோ!அப்பாவிற்கு டான்ஸ் கற்றுத்தரும் சாந்தனு.. வைரல் வீடியோ!

    திறமையான இயக்குனர்

    திறமையான இயக்குனர்

    பல இயக்குனர்கள் 100 படங்களை இயக்கி பெறும் பெயரை ஒரு சில இயக்குனர்கள் ஓரிரு தரமான படங்களை இயக்கி மிகப் பெரிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெற்று விடுகிறனர். அவ்வாறு தமிழ் சினிமாவில் திறமையான இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் ராம் தமிழ் திரைப்படத் துறையில் மிகப் பிரபலமாக இன்றும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

    வெகுமதிகள் ஏராளம்

    வெகுமதிகள் ஏராளம்

    இவர் இயக்கியது ஓரிரு படங்கள் மட்டுமே என்றிருந்தாலும் பெற்ற விருதுகளும் வெகுமதிகளும் ஏராளம், தொடர்ந்து தனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களையும் சமூக அவலங்களையும், ஏக்கங்களையும் கொட்டித் தீர்த்து வரும் இயக்குனர் ராம் இந்திய அளவில் உற்றுநோக்கப்படும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

    கவலைப்படாமல்

    கவலைப்படாமல்

    தான் இயக்கிய ஒவ்வொரு படைப்பிலும் சொல்லவந்த கருத்தை ஆழமாக பதிவிட்டு மக்களிடையே கொண்டு செல்லும் இவர் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் பற்றி எல்லாம் ஒருபோதும் கவலைப்படாமல் தரமான படங்களை இயக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

    அற்புதமான நடிகர்

    அற்புதமான நடிகர்

    இந்த நிலையில் இவர் இயக்கிய முதல் படமான கற்றது தமிழ் ஜீவா என்ற அற்புதமான நடிகரை தமிழ் திரை உலகிற்கு வெளி காட்டியது. இன்றளவும் நடிகர் ஜீவாவின் திரைப்பட வாழ்க்கையில் கற்றது தமிழ் அனைவரும் திரும்பிப் பார்க்கக் கூடிய ஒரு படமாக இருந்து வருகிறது.

    பாராட்டுகளும்

    பாராட்டுகளும்

    பல சர்ச்சைகளையும், டைட்டில் பிரச்சனைகளையும் சந்தித்து வெளியான கற்றது தமிழ் திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று பல விருதுகளை வென்று வந்தது. கற்றது தமிழ் பெற்ற வரவேற்பை தொடர்ந்து இவர் இயக்கிய தங்கமீன்கள் திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய அங்கீகாரத்தை பெற்று மூன்று தேசிய விருதுகளை வென்று சர்வதேச அளவில் நிமிர்ந்து நின்றது.

    கவனத்தையும் ஈர்த்து

    கவனத்தையும் ஈர்த்து

    தங்கமீன்கள் படத்தை தொடர்ந்து இயக்குனர் ராம் இயக்கிய தரமணி மற்றும் பேரன்பு படங்களும் சர்வதேச அளவில் நல்ல பாராட்டுகளை பெற்று பல உலக நாடுகளில் விருது விழாக்களில் பேரன்பு திரையிடப்பட்டு விருதுகளோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது.

    தொலைக்காட்சி ஒன்றிற்கு

    தொலைக்காட்சி ஒன்றிற்கு

    இவ்வாறு தனது படங்களின் மூலம் எப்போதும் ஆழமான கருத்துக்களை பதித்து வரும் இயக்குனர் ராம் சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார் அதில் தொகுப்பாளர் கேட்டிருந்த கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அவர், என் படத்தில் போலீசை நான் ஹீரோவாக காட்ட மாட்டேன், ஏனென்றால் அவர்களால் எந்த ஒரு நிலையிலும் நியாயத்தையும் நல்லதையும் பண்ண முடியாது என்பது என்னுடைய அரசியல் சார்ந்த கருத்து, சர்வாதிகாரத்தை என்னால் ஹீரோயிஸமாக காட்ட முடியாது என்று கூறினார்.

    நல்லவர்களா வெச்சி

    நல்லவர்களா வெச்சி

    சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் போலீசை நாம் அவ்வாறு தான் காண்கிறோம் ரஜினிகாந்த் எனக்கு கால்ஷீட் கொடுத்தாலும் என்னால் போலீசை ஹீரோவா நல்லவர்களா வெச்சி படம் எடுக்க முடியாது. இவ்வாறு இயக்குனர் ராம் போலீசை பற்றிய தனது கருத்தை தெரிவித்து இருந்த இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    English summary
    Film director Ram special Interview
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X