twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Exclusive: sarvam thalamayam: சர்வம் தாளமயம்.. இன்றைய கால சூழலில் ஒரு முக்கியமான படம்: ஜி.வி.பிரகாஷ்

    சர்வம் தாளமயம் படம் பற்றி ஒன்இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார் நடிகர் ஜி.வி.பிரகாஷ்.

    |

    சென்னை: சினிமாவில் நேர்மையான அரசியல் இருக்க வேண்டும் என நடிகர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

    இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் ஜி.வி.பிரகாஷ். முதலில் இளைஞர்களை கவரும் வகையிலான படங்களையே பெரும்பாலும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ஜாலியான படங்களுக்கு மத்தியில் கருத்தாழம் மிக்க படங்களிலும் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

    நாச்சியார் படம் இவர் மீதான இமேஜை வேறு தளத்திற்கு மாற்றியது. தற்போது இவர் நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தில் ஜி.வி.யின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் ஒன்இந்தியா தளத்திற்காக ஜி.வி.யை சந்தித்தோம். அப்போது அவர் பேசியதாவது

    சர்வம் தாளமயம் படவாய்ப்பு:

    சர்வம் தாளமயம் படவாய்ப்பு:

    சில நல்ல விஷயங்கள் தானாக அமையும். அப்படி அமைந்தது தான் சர்வம் தாளமயம். ஒருநாள் ராஜீவ் மேனன் சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஏதோ விளம்பரத்துக்கு இசையமைக்க தான் கூப்பிடுகிறார் என நினைத்தேன். அங்கு போன பிறகு சர்வம் தாளமயம் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

    மிக மகிழ்ச்சி:

    மிக மகிழ்ச்சி:

    சரி படத்துக்கு இசையமைப்பதற்காக கூப்பிட்டிருக்கிறார் என நினைத்தேன். ஆனால் நான் நடிப்பதற்காக தான் என்னிடம் கதை சொல்கிறார் என்பது பிறகு தான் தெரிந்தது. மிகவும் சந்தோஷப்பட்டேன்.

     கடின உழைப்பு:

    கடின உழைப்பு:

    இந்த படத்துக்காக ராஜீவ் மேனன் நிறைய உழைத்திருக்கிறார். அதே போன்றதொரு உழைப்பை தர வேண்டும் என என்னிடம் கூறினார். நானும் என்னால் முடிந்த அளவிற்கு உழைத்தேன். அதன் பலன் இப்போது தெரிகிறது. என்னை பொறுத்தவரை பலனை எதிர்பார்க்காமல் உழைத்துக்கொண்டே இருக்க வேண்டும். அதற்கான பலனை கடவுள் என்றைக்காவது ஒருநாள் கொடுப்பார்.

    மிருதங்கம் கற்றேன்:

    மிருதங்கம் கற்றேன்:

    இந்த படத்திற்காக நான் உமையாள்புரம் சிவராமன் சாரிடம் மிருதங்கம் கற்றுகொண்டு, நிறைய காட்சிகளில் நானே வாசித்தேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் மிருதங்கம் வாசித்தேன். இதற்காக கடுமையாக உழைத்தேன். அதற்கான பாராட்டு தான் இது.

    நேர்மையான அரசியல்:

    நேர்மையான அரசியல்:

    இன்றைய சினிமாவில் நிச்சயம் நேர்மையான அரசியல் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் அது ரசிகர்களை எளிதாக சென்றடையும். இந்த படத்தில் கர்நாடக இசையின் அழகையும் பதிவு செய்திருக்கிறோம். அதேபோல் முக்கியமான ஒரு சமூக பிரச்சினை பற்றியும் கூறியுள்ளோம். இன்றைய கால சூழலில் இது ஒரு முக்கியமான படம். ஒரு புதுமையான படமாக இருக்கும்.

    இளம் விஞ்ஞானி கதை:

    இளம் விஞ்ஞானி கதை:

    அடுத்து ஐங்கரன்னு ஒரு படம் பண்ணுகிறேன். அது ஒரு இளம் விஞ்ஞானியை பற்றிய கதை. ஜெயில், வாட்ச்மேன், 100 பர்சென்ட் காதல், குப்பத்து ராஜா, என நிறைய படங்கள் செய்கிறேன். சிறு வயதில் இருந்தே ஆக்டிவாக இருப்பதால், நிறைய விஷயங்களில் கவனம் செலுத்த முடிகிறுது.

    ஜெயில் பட பாடல்கள்:

    ஜெயில் பட பாடல்கள்:

    ஹீரோ ஜி.வி.பிரகாஷ் தான் இப்போது நிறைய வெளியில் தெரிகிறார். அதனால் இசையமைப்பாளர் ஜி.வி.யை மிஸ் செய்வதாக நிறைய பேர் கூறுகின்றனர். இந்த இடைவெளியை உடைக்கும் வகையில் ஜெயில் படத்தின் பாடல்கள் இருக்கும். அப்படத்தின் பாடல்கள் நிச்சயம் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும்.

    சந்தோசமான வாழ்க்கை:

    சந்தோசமான வாழ்க்கை:

    எனது மனைவியும் ஒருபக்கம் அவரது வேலைகளில் தீவிரமாக இருக்கிறார். அவருடைய வெற்றி என்னை சார்ந்து இருக்கக் கூடாது என நினைக்கிறேன். யார் சொன்னாலும் எனது பெயரை அவரது பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளக் கூடாது என சொல்லியிருக்கிறேன். எனவே குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கிறது", என்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

    English summary
    Actor G.V.Prakash shared his experience about working in Rajiv Menon's Sarvam Thalamayam.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X