Just In
Don't Miss!
- News
திமுக பொதுக்குழு, மாநில மாநாடு ஒத்திவைப்பு.. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு
- Automobiles
இந்தியாவில் அடுத்தடுத்த அறிமுகமாகும் எலக்ட்ரிக் பைக்குகள்!! மிக விரைவில் ஒகி100 அறிமுகமாகிறது...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சீக்கிரமே சினிமாவுக்கு வரப் போகும் ஃபுட் ரிவ்யூவர் இர்ஃபான்.. எந்த படத்தில் தெரியுமா?
சென்னை: இர்ஃபான் வியூ யூடியூப் சேனலை பலரும் பார்த்து இருப்போம், அந்த இர்ஃபான் இப்போ ஒரு படத்தில் பிசியாக நடித்து வருகிறார். அவருடைய பேட்டி வெளியாகி உள்ளது.
சமீபத்தில் சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா தொகுத்து வழங்க ஜீப் கார் அறிமுக விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது.
அந்த நிகழ்வில் குடும்பத்துடன் கலந்து கொண்ட இர்ஃபான் ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.

நண்பன் ஒருவன் வந்த பிறகு
மீசையை முறுக்கு படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்த நடிகர் அனந்த் இயக்கி நடிக்கும் நண்பன் ஒருவன் வந்த பிறகு படத்தில் தான் இர்ஃபான் நண்பனாக நடித்து வருகிறார். இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

நண்பனாக
ஆர்.ஜே. விஜய், ஆர்.ஜே. ஆனந்தி, மோனிகா உள்ளிட்டோர் நடிக்கும் படத்தில் இர்ஃபானும் நடித்து வருகிறார். மேலும், ஏகப்பட்ட தமிழ் சினிமா வாய்ப்புகள் தனக்கு வருவதாகவும் இர்ஃபான் இந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இர்ஃபான் வியூ
இர்ஃபான் வியூ யூடியூப் சேனலில் உணவு வகைகளை ருசி பார்த்து விமர்சித்து வரும் இர்ஃபான், புதிதாக அறிமுகமான ஜீப் பற்றிய விமர்சனத்தையும் அழகாக இந்த வீடியோவில் கூறியுள்ளார். உங்களுக்கு பிடித்த கமெண்ட் என்னவென்று கேட்டதற்கு, இந்த விழாவில் சின்னத்திரை நடிகை நக்ஷத்ரா, குடும்பத்துடன் உங்க வீடியோவை பார்ப்போம் என சொன்னது தான் என்று ஸ்கோர் செய்தார்.
ஆப்பிரிக்காவுக்கு போறேன்
தாய்லாந்து, பாங்காங் என வெளிநாடுகளுக்கும் சென்று முதலை கறி உள்ளிட்ட வித்தியாசமான உணவுவகைகளை ருசி பார்த்து ரிவ்யூ சொல்லும் இர்ஃபான் அடுத்ததாக ஆப்பிரிக்காவுக்கு சென்று அங்குள்ள உணவுகளையும் ருசி பார்க்க உள்ளதாக செம ஃபன்னாக பேசியுள்ள இந்த பேட்டியை கண்டு ரசியுங்கள்!