For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நயன்தாரா மனதில் இந்த படம் part of life... எனக்கு heart of life, ஜி.எஸ்.விக்னேஷ் பிரத்தியேக பேட்டி

  |

  சென்னை: நடிகை நயன்தாராவிடம் 2.30 மணி நேரம் கதை கூறியதாக O2 படத்தின் இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் தெரிவித்தார்.

  மேலும் அவர் கூறுகையில், நடிகை நயன்தாராவை பொறுத்தவரை இப்படமானது Part of the Life. . என்னை பொறுத்தவரை Heart of the Life என்றும் தெரிவித்தார்.

  நயன்தாரா திருமணம் முடிந்தவுடன் வெளி வந்த படம் o2. இன்று வரை ஒரு தாயின் பாசத்தை பற்றி வித்யாசமாக சொன்னதில் பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

  ஒய் ஜி மகேந்திராவின் நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி...அப்படி என்ன செய்தார்? ஒய் ஜி மகேந்திராவின் நாடக குழுவிற்கு இன்ப அதிர்ச்சி அளித்த ரஜினி...அப்படி என்ன செய்தார்?

  வித்தியாசமாக இருக்க வேண்டும்

  வித்தியாசமாக இருக்க வேண்டும்

  கேள்வி: சினிமாத்துறையின் உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது?

  பதில்: நான் 11ம் வகுப்பு படிக்கும்போதே MTV நடத்திய Short Film Competition பங்கேற்றேன். அதில் நான் எடுத்த குறும்படம் வெற்றி பெற்றது. எனது அக்கா என்னிடம் கூறும்போது, எதையும் வித்தியாசமாக யோசிக்க வேண்டும். அப்பொழுது தான் ஜெயிக்க முடியும் என்று கூறினாள். அதன்படியே நான் யோசித்தேன். உதாரணமாக மரத்தின் இலை அசைகிறது என்றால், எனது கண்ணோட்டத்தில் இலை நடனமாடுகிறது என்பது அர்த்தம். 2012ம் ஆண்டு D.J.Vaishnava கல்லூரியில் விஷூவல் கம்யூனிகேஷன் முடித்தேன். கல்லூரியில் படிக்கும்போது நான் கேமரா வாங்கி, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும், முழுமையான அடிப்படை அறிவையும் வளர்த்துக் கொண்டேன் என்றார்.

  10 ஆண்டுகள்

  10 ஆண்டுகள்

  கேள்வி: நீங்கள் யாரிடம் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணிபுரிந்துள்ளீர்களா?

  பதில்: இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மாஸ் என்கிற மாசிலாமணி படத்தில் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணியாற்றினேன். நான் எடுத்து காசிமேடு என்கிற குறும்படத்தை பார்த்து இயக்குநர் வெங்கட்பிரபு எனக்கு இந்த வாய்ப்பை அளித்தார். நடிகர் சூர்யா நடித்த இப்படத்தில் முழுவதுமாக நான் அசிஸ்டெண்ட் இயக்குனராக பணியாற்றினேன். இன்னும் சொல்லப்போனால் இயக்குநர் வெங்கட்பிரபுவிடமிருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் . பின்பு அங்கிருந்து வெளிவந்து இந்தியில் ஒரு குறும்படம் எடுத்தேன். அந்த குறும்படம் 15 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்தது. இதன் மூலமாக தான் எனக்கு தைரியம் கிடைத்தது. சினிமாத்துறையில் நான் நுழைவதற்கு 10 ஆண்டுகள் எடுத்து கொண்டுள்ளேன் என்றார்.

  Pitch Bible

  Pitch Bible

  கேள்வி: நடிகை நயன்தாராவை இப்படத்தில் நடிக்க வைக்க நீங்கள் எடுத்த முயற்சி என்ன?

  பதில்:வேல்ஸ் புரோக்டக்ஷன் அஸ்வின், நடிகை நயன்தாராவின் மேனேஜரை எனக்கு அறிமுகப்படுத்தினார். இதன் காரணமாக நயன்தாராவை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என் வாழ்நாளில் மறக்க முடியாத நாள் அது. அவரை சந்திப்பதற்கு முன், கதையை Pitch Bible மூலம் தயார் செய்தேன். ஏனென்றால் அவர்களிடம் முழு கதையை சொல்வதற்கு நேரம் கிடைக்குமா? என்ற சந்தேகம் ஏற்பட்டது. நான் கொடுத்த Pitch ஐ நடிகை நயன்தாரா முழுவதுமாக படித்தார். இது மட்டுமின்றி ஒரு மாதிரி பொம்மை பஸ்சையும் உருவாக்கிக் கொண்டேன். எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு என்பது என்னுடைய Life Time Opportunity ஆகும். கொரோனா காலக்கட்டத்தில் எனது கதையை கேட்பதற்கு நடிகை நயன்தாராவிடமிருந்து எனக்கு நாள் ஒதுக்கப்பட்டது. நான் 2.30 மணி நேரம் கூறிய கதையை பொறுமையாக கேட்ட நயன்தாரா, கண்டிப்பாக இந்த படத்தை பண்ணலாம் என்றார். எனக்கு அப்போது ஏற்பட்ட மகிழ்ச்சியை இப்போதும் என்னால் மறக்க முடியாது என்றார்.

  30 நிமிடம் பேசினால்...

  30 நிமிடம் பேசினால்...

  கேள்வி: நடிகை நயன்தாரா திருமண வாழ்க்கை குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: நடிகை நயன்தாரா & விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பிறகு வரும் முதல் படம் இது தான். என்னுடைய முதல்படமும் இதுவே. நடிகை நயன்தாராவை பொறுத்தவரை இப்படமானது Part of the Life. என்னை பொறுத்தவரை Heart of the Life. எத்தனை வருடங்கள் ஆனாலும் அவர்கள் மனதில் ஆழமாக இப்படம் பதியும் என்றார். நடிகை நயன்தாராவுக்கு ஏற்ற மனிதர் இயக்குநர் விக்னேஷ் சிவன் தான். அவர் ஒரு ஜாலியான மனிதர். அதே போல் படப்பிடிப்பின்போது நடிகை நயன்தாராவிடம் 30 நிமிடம் பேசிக் கொண்டிருந்தால், குறைந்த பட்சம் 3 தடவையாவது விக்னேஷ் சிவன் பெயரை உச்சரிப்பார். இருவருமே பொருத்தமான ஜோடி .

  கதைக்களம் வித்தியாசமானது

  கதைக்களம் வித்தியாசமானது

  கேள்வி: படப்பிடிப்பை எத்தனை நாட்கள் நடத்தினீர்கள்?

  பதில்: இந்தபடத்தை நான் ஷூட்டிங் செய்வதற்கு முன்னர், நிறைய Pre Production Work செய்தோம். குறிப்பாக ஆர்ட் டைரக்டர் ரொம்பவே கஷ்டப்பட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் 30 அடி அளவுள்ள இடத்தில் தான் படப்பிடிப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை. ஏனென்றால் கதைக்களம் முற்றிலும் வித்தியாசமானது. மேலும் 45 நாட்களில் படத்தை முடிக்க வேண்டும். இல்லையென்றால் படத்தில் பட்ஜெட் மாறி விடும். படப்பிடிப்பை தரமணி பிலிம் இன்ஸ்டிடியூட்டில் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். 13 நாட்கள் வெளியேயும், 5 நாட்கள் அவரவர் கதாபாத்திரத்திற்கான ஷூட்டிங்கும் நடத்தினோம். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ரொம்ப சவாலாக இருந்தது.

  ரித்துக்கு திறமை அதிகம்

  ரித்துக்கு திறமை அதிகம்

  கேள்வி: குழந்தை நட்சத்திரம் ரித்துவை எவ்வாறு நடிக்க வைத்தீர்கள்?

  பதில்: ரித்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு முதலில் ஆடிஷன்ஸ் நடத்தினோம். 5 பேர் வந்திருந்தனர். எங்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. குழந்தை நட்சத்திரத்தை நடிக்க வைப்பது மிகவும் சவாலானது. யூடியூப்பில் ரித்துவின் வீடியோவை பார்த்து, அவரது தந்தையின் மொபைல் எண்ணை தொடர்பு கொண்டு ஆடிஷன்க்கு வரவழைத்தோம். நாம் என்ன சொல்கிறோமோ அதை சரியாக உள்வாங்கி சிறப்பாக நடித்தான் ரித்து. குழந்தையாக அவன் பிறக்கும்போது, அவனுக்குள் திறமை இருந்துள்ளது .

  நான்கு தடவை எழுதி கொடுத்துள்ளேன்

  கேள்வி: எஸ்.ஆர்.பிரபு குறித்து நீங்கள் கூற விரும்புவது?

  பதில்: எஸ்.ஆர்.பிரபுவை பொறுத்தவரை எதையும் சரியாக செய்யக்கூடியவர். கதையை கேட்பது அவரது வழக்கமில்லை. கதை எழுதி வாங்கி அதை வரிவிடாமல் படிக்கக்கூடியவர். எழுத்தில் உள்ளதை எவ்வாறு படமாக்க போகிறோம், உணர்வு பூர்வமாக இருக்குமோ என்பதையெல்லாம் சிந்திப்பவர். நானே இந்த ஸ்கிரிப்ட் நான்கு தடவை எழுதி கொடுத்துள்ளேன். அவர்களுடைய டீம் மாதிரி வேறு எங்கும் பார்க்க முடியாது என்றார் ஜி.எஸ்.விக்னேஷ். இந்த பேட்டியின் முழு விடியோவை காண பில்மிபீட் தமிழ் யூட்யூப் சேனலிலும் https://youtu.be/4jUB3_XPYOM இந்த லிங்கை கிளிக் செய்தும் காணலாம். இயக்குனர் ஜி.எஸ்.விக்னேஷ் இன்னும் நிறைய விஷயங்களை ஸ்வாரசியமாக பேசி உள்ளார். மறக்காமல் முழு வீடியோவையும் பாருங்கள்.

  English summary
  For Nayanthara O2 Movie is Part of life but for me it is heart of life says director GS Vignesh
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X