ரஜினி மாதிரி சத்யராஜையும் மன்னிப்பு கேட்க சொல்லுங்க: வாட்டாள் நாகராஜ்- எக்ஸ்க்ளூசிவ்
பெங்களூர்: சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் தெரிவித்துள்ளார்.
காவிரி பிரச்சனையின்போது கன்னடர்களுக்கு எதிராக பேசிய நடிகர் சத்யராஜ் மன்னிப்பு கேட்காத வரை பாகுபலி 2 படத்தை கர்நாடகாவில் வெளியிட விட மாட்டோம் என்று கன்னட ஆர்வலர் வாட்டாள் நாகராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் ஒன்இந்தியாவுக்கு அளித்த பேட்டி,

பப்ளிசிட்டி
விளம்பரம் தேடுவதற்காக பாகுபலி 2 படத்தை வெளியிடவிடாமல் செய்கிறீர்களா என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், நாங்கள் படத்திற்கு எதிராக இல்லை. படத்தில் நடித்துள்ள சத்யராஜுக்கு தான் எதிராக உள்ளோம். காவிரி, கன்னடம், கர்நாடகா, கன்னடர்களுக்கு எதிராக பேசியதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அது வரை போராடுவோம். ரஜினிகாந்த் போன்று அவரும் மன்னிப்பு கேட்டுவிட்டால் படத்தை எதிர்க்க மாட்டோம் என்றார்.

பாகுபலி
அது ஏன் பாகுபலி 2 படத்தை எதிர்க்கிறீர்கள்? சத்யராஜின் பிற படங்கள் ரிலீஸானபோது எங்கே சென்றீர்கள் என்ற கேள்விக்கு வாட்டாள் கூறுகையில், சத்யராஜின் கருத்தை நாங்கள் எப்பொழுதுமே எதிர்க்கிறோம். அவரின் பிற படங்கள் இங்கு வெளியாகியுள்ளன ஆனால் தற்போது தான் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கன்னட அமைப்புகள் ஒன்று கூடி போராட முன்வந்துள்ளன என்றார்.

சந்தர்ப்பவாதி
பாகுபலி போன்ற மெகா படத்தை எதிர்க்கும் நீங்கள் சந்தர்ப்பவாதி அல்லவா என்ற கேள்விக்கு வாட்டாள் நாகராஜ் கூறுகையில், இல்லை இல்லை. தற்போது தான் அனைத்து கன்னட அமைப்புகளும் ஒன்று கூடியுள்ளன என்றேன். சத்யராஜ் ஏன் மன்னிப்பு கேட்கக் கூடாது என்கிறார்.

சத்யராஜ்
சத்யராஜ் அப்படி என்ன சொல்லிவிட்டார்? என்ற கேள்விக்கு வாட்டாளின் பதில், நாங்கள் தாய் போன்று மதிக்கும் காவிரியை அவர் தனது மனைவியோடு ஒப்பிட்டுவிட்டார். அவர் கன்னடர்கள் மற்றும் கர்நாடகாவை அவமதித்துவிட்டார். அவர் அசிங்கமாக பேசியபோது மேடையில் கமல், ரஜினி இருந்தனர். அவர் என்னை நேரடியாக தாக்கிப் பேசினார். அப்படி இருக்கும்போது கேள்வி கேட்கக் கூடாதா?

அரசு
அரசு ஆதரவுடன் படம் ரிலீஸானால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டதற்கு அவர் கூறுகையில், ராணுவமே வந்தாலும் போராடுவோம். படம் ரிலீஸானால் எதிர்ப்போம். முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளோம். தியேட்டரை விடுங்க பாத்ரூமில் கூட அந்த படம் ஓடக் கூடாது என்றார்.


Click it and Unblock the Notifications











