விதியுடன் மோது.. விமலுடன் மோதாதே.. எல்லா கேள்விகளுக்கும் தக் லைஃப் பதில்.. ஐயோ பாவம் தொகுப்பாளினி!

சென்னை: நடிகர் விமல் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் மகா சேனா. இந்த படம் வரும் 12ஆம் தேதி அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளில் வெளியாக உள்ளது. படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அதற்கு காரணம், விமல் இந்த படத்திற்காக நிஜ யானையுடன் பழகி, பயிற்சி எடுத்து நடித்துள்ளார். இப்படி இருக்கும்போது, படத்தின் புரோமோசன் வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகர் விமல் தொகுப்பாளினி கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துள்ளது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

முதன் முதலாக நீங்கள் ஒரு விலங்குடன் நடித்துள்ளீர்கள் என்று கேள்வி எழுப்ப, அதற்கு ஆமாம், அடுத்து மாட்டுடன் நடிக்கலாம் என்று இருக்கிறேன் என்று கூறுகிறார். எப்போது எல்லாம் உங்களுக்கு கோபம் வரும் என்ற கேள்விக்கு, கோபப்படுத்தினால் கோபம் வரும். ஏன் எல்லா கேள்விகளுக்கும் ஒரே வார்த்தையில் பதில் கூறுகிறார்கள் என்ற கேள்விக்கு, தெரிந்தால் தானே பேச முடியும் என்று பதில் கூறுகிறார். வீட்டிலும் இப்படித்தான் ஒரே வார்த்தையில் பதில் சொல்லுவீர்களா என்று கேட்டதற்கு, வீட்டில் என்னிடத்தில் எந்த கேள்வியும் கேட்க மாட்டார்கள் என்கிறார்.

யானையிடம் எப்படி வேலை வாங்கி நடித்தீர்கள் என்ற கேள்வி, யானைக்கு ஜாங்கிரி என்றால் மிகவும் பிடிக்கும், அதை வாங்கிக் கொடுத்து வேலை வாங்கி விடுவேன் என்று விமல் கூற, உடனே தொகுப்பாளினியோ, தட்டிக் கொடுத்து வேலை வாங்கி விடுவீர்களா என்று கேட்க, தட்டிக் கொடுத்து வேலை வாங்குவதா? அது நம்மளை தட்டி விட்டுட்டு போய் விடும் என்று கூறுகிறார்.

galaxy star Vemal Recent Interview Thug Life Answers To Anchor Goes Trending
Photo Credit:

ஆசை இல்லை: நான் ஒரு கிராமத்துக்காரன், எனக்கு கிராமத்துக் கதைகளாகத்தான் பொருந்தி வருகிறது என்று விமல் கூறுகிறார். உடனே, தொகுப்பாளினி, நகரத்தில் இருக்கும் கதாபாத்திரங்களில் நடிக்க உங்களுக்கு ஆசை இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா என்று கேள்வி கேட்க, உடனே அவரோ, அப்படி எல்லாம் எந்த ஆசையும் இல்லை என்று கூறுகிறார். சூரி அவர்களின் வளர்ச்சி அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி உள்ளது என்று கேட்க, நன்றாக உள்ளது, சந்தோஷமாக உள்ளது என்று பதில் அளிக்கிறார்.

கதை: மகாசேனா என்ன மாதிரியான படமாக இருக்கும் என்ற கேள்விக்கு, மலைவாழ் மக்கள் என்று விமல் படத்தின் கதையை சொல்லிக் கொண்டு இருக்கும்போது, அடுத்த இரண்டு மக்களுக்குள் சண்டை என்று தொகுப்பாளினி கூற, உடனே விமல், படம் பார்த்துவிட்டு வந்து கதை சொல்லுங்க என்று கூறுகிறார். படத்தின் கிளைமாக்ஸில் சாமி சிலையை மீட்டு வருவோம், அப்படி மீட்கப்பட்டால் தான் அது படம் இல்லை என்றால் அது படம் இல்லை என்று விமல் கூற, உடனே தொகுப்பாளினி என்னங்க முழு கதையையும் சொல்லி விட்டீர்கள் என்று கேட்க, அப்படி என்றால் சாமி சிலை மீட்கப்படவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள் எனவும் பதில் அளிக்கிறார் விமல்.

கோபம்: நீங்கள் எனது பட புரோமோசனுக்கு பேட்டி எடுக்குறீர்கள், அது எல்லாம் ஓடுச்சா என்று கேட்கிறார் விமல், அடுத்ததாக ஜென் Z கிட்ஸ்களின் உறவு முறைகளை வரிசைப் படுத்துகிறேன் என்று, " காதலன், காதலி, பெஸ்டி, பெஞ்ச், ஸ்டூல் அடுத்து கர்சீப் என்று பதில் அளித்தார். ஒரு கேள்விக்கு பதில் அளிக்கும் போது, கொஞ்சம் கோபமடைந்த விமலைப் பார்த்து, நீங்கள் கோபப்படுகிறீர்கள் என்று தொகுப்பாளினி கூற, உடனே விமலோ, கோபப்படுத்தறீங்க மைலார்ட்" என்று பதில் அளிக்கிறார். அவரது இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X