எனை நோக்கிப் பாயும் தோட்டாவை தனுஷ் இயக்கினாரா?.. கெளதம் மேனன் கொடுத்த விளக்கத்தை பாருங்க!

சென்னை: சிம்புவை வைத்து விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட படங்களை இயக்கிய கெளதம் மேனன் தனுஷுடன் இணைந்து கடந்த 2019ம் ஆண்டு பண்ண படம் தான் எனை நோக்கி பாயும் தோட்டா. சமீபத்தில் கெளதம் மேனன் அளித்த பேட்டி ஒன்றில் அது என் படமே கிடையாது என்பது போல கெளதம் மேனன் பேசியது ரசிகர்களை பயங்கர அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இயக்குநராக மாறியுள்ள நடிகர் தனுஷ் பல படங்களில் நடிக்கும் போது கூட இயக்குநராக மாறிவிட்டாரோ என்றும் அதைத்தான் கெளதம் மேனன் மறைமுகமாக இந்த படத்தை தான் இயக்கவில்லை என்றும் இது தனுஷ் இயக்கிய படம் எனக் கூறுகிறார் என சோஷியல் மீடியாவில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

gautham menon dhanush interview

இந்நிலையில், அந்த பஞ்சாயத்துக்கு தற்போது கெளதம் மேனனே இன்னொரு பேட்டி ஒன்றில் செம கூலாக அளித்துள்ள பதில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க..

மறுவார்த்தை பேசாதே: இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் தான் எனை நோக்கி பாயும் தோட்டா. அந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என்பதை கண்டுபிடிங்க என்றெல்லாம் ட்விஸ்ட் வைத்து "மறுவார்த்தை பேசாதே" பாடலை வெளியிட்டு இருந்தார். தர்புகா சிவா தான் படத்திற்கு இசையமைப்பாளர் என்றும் இந்த முறை ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணையவில்லை என்பதையும் அவர் வெளிப்படுத்தினார். படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே இளைஞர்களை கவர்ந்தன. ஆனால், படம் தான் படுத்துவிட்டது.

gautham menon dhanush interview

என் படமே இல்லை: விமர்சகர் பரத்வாஜ் ரங்கநாதன் சமீபத்தில் கெளதம் மேனனை பேட்டியெடுக்கும் போது தனுஷுடன் நீங்க பண்ண படம் "எனை நோக்கி" என அந்த படத்தின் முழுப் பெயரே தெரியாமல் தடுமாறி பேசும்போது விளையாட்டாக கெளதம் மேனன் அது என் படமே கிடையாது. நான் பண்ணவே இல்லை எனக் கூறினார். ஆனால், தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அவரது பேட்டி பெரும் குழப்பத்தையும் சர்ச்சையையும் கிளப்பியது.

தனுஷுக்கு எதிராக: இயக்குநர் கெளதம் மேனன் சூர்யாவை தொடர்ந்து தனுஷுக்கு எதிராகவும் பேசிவிட்டார் என தனுஷ் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் அவரை போட்டு பொளக்க ஆரம்பித்துவிட்டனர். தனுஷ் ஹேட்டர்கள் இப்படித்தான் ஒவ்வொரு படத்திலும் டைரக்‌ஷனை கற்றுக் கொள்கிறேன் என பல படங்களை சொதப்பிவிட்டாரா தனுஷ் என கிண்டல்களையும் ட்ரோல்களையும் பறக்கவிட்டனர்.

gautham menon dhanush interview

கெளதம் மேனன் விளக்கம்: இந்நிலையில், அது சும்மா நான் காமெடியாக சொன்னது. எனை நோக்கி பாயும் தோட்டா என் படமே இல்லை என நான் சொல்லக் காரணம் அந்த படத்தின் இரண்டாம் பாதியை நான் சரியாக பண்ணவே இல்லை. அவசர அவசரமாக அந்த படத்தை பண்ணது தான் அது ரசிகர்களை கவராமல் போக காரணம். ஆனால், அதை நெட்டிசன்கள் ட்விஸ்ட் பண்ணி பெரிய சர்ச்சையான விஷயமாக மாற்றிவிட்டனர் என விளக்கம் கொடுத்துள்ளார்.

டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் என்ன ஆச்சு?: மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி தனது சொந்த தயாரிப்பில் தயாரித்து நடித்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தை கெளதம் மேனன் இயக்கியிருந்தார். படம் வெளியாகி 9 நாட்கள் ஆகும் நிலையில், உலகம் முழுவதும் இதுவரை வெறும் 14.5 கோடி ரூபாய் தான் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மலையாள படங்கள் 100 கோடி வசூலை கடந்த ஆண்டே குவிக்கத் தொடங்கிய நிலையில், மம்முட்டியின் படமே பெரிதாக வசூல் செய்யவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X