ஹாரீஸும் நானும் பைக்கில் ஊர் சுற்றுவோம்.. கௌதம் மேனன் கலகல பேட்டி!

சென்னை: மின்னலே படப்பிடிப்பின் போது ஹாரீஸ் ஜெயராஜும் நானும் பைக்கில் ஊர் ஊரா சுற்றியிருக்கிறோம் என்று கௌதம் மேனன் கூறினார் .

Recommended Video

GVM magics in Cinema | HBD Gautam Menon | GVM movies vs reality

இயக்குனர் கௌதம் மேனன் தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் இவர் தமிழில் சிறந்த படங்களை இயக்கியிருக்கிறார். பிப்ரவரி 25ந் தேதியான இன்று பிறந்தநாள். இவருக்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக பலரும் வாழ்த்து கூறி படங்களையும் இவரின் திறமையும் பற்றி பேசி வருகிறார்கள் .

 Gautham menon interview

இவர் மின்னலே படத்தின் மூலம் சினிமாவில் இயக்குனராக தன் கனவை நோக்கி பயணிக்க தொடங்கினார். இந்த படம் தமிழில் மிக பெரிய வெற்றியடைந்தது இந்த படத்தின் பாடல்கள் இன்று வரை ரசிகர்களின் பிடித்த பாடல்களில் ஒன்று. இந்த படம் தமிழில் ஓடிய அளவுக்கு ஹிந்தியில் ஓடவில்லை. ஆனாலும், தொலைக்காட்சியில் அதிகமுறை திரையிடபட்டு ஹிந்தி ரசிகர்களுக்கு பிடித்த படமாக மாறியது. தமிழில் வரும் வசீகரா பாடல் ஹிந்தியிலும் பெரிய ஹிட். கௌதம் மேனன் என்றால் இந்த பாடலையும் படத்தையும் தான் பலரும் கூறுவார்களாம் .

கௌதம் மேனன் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறும்போது,ஏ.ஆர்.ரகுமானுடன் முதல் படத்தில் பணியாற்ற ஆசைப்பட்டேன். ஆனால் ஏ.ஆர்.ரகுமானின் கால்ஷீட் இரண்டு வருடங்களுக்கு கிடைக்காது என்ற நிலையில், எதார்த்தமாக ஹாரீஸ் ஜெயராஜை சந்திக்க நேரிட்டது அதன்பின் அவர் இசையமைப்பாளரானார் என்று தெரிவித்தார் .

 Gautham menon interview

கௌதம் மேனனின் அதிகபடியான படங்களுக்கு ஹாரீஸ் தான் இசையமைத்து இருக்கிறார். இவர்களின் கூட்டணியில் வந்த அனைத்து பாடல்களும் பெரிய ஹிட் அடித்தவை. இதுவரை இவர்கள் இருவரும் 6 படங்களில் இணைந்து பணியாற்றி யிருக்கின்றனர். மேலும் துருவநட்சத்திரம் படத்திக்கு ஹாரீஸ் தான் இசையமைத்து வருகிறார் .

மின்னலே படத்தின் போது நானும், ஹாரீஸ் ஜெயராஜும் பைக்கில் ஊர் ஊரா சுற்றியிருக்கிறோம். ஆரம்ப கட்டத்தில் பட வேலைகளுக்காக அலையும் போது இவ்வாறு நாங்கள் ஊர் சுற்றியிருக்கிறோம் என்று கௌதம் மேனன் கூறினார்.

கௌதம் மேனனின் அப்பா மிக பெரிய கமல் ரசிகராம். அதனால் வேட்டையாடு விளையாடு படத்தின் படப்பிடிப்பின் போது அவரை ஒரு காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். இதை சமீபத்திய பேட்டியின் போது பகிர்ந்தார். கமல் கற்க கற்க பாடலின் போது ஒரு பப்புக்கு வந்து அனைவரையும் சுடுவார். அப்போது ஒரு இடத்தில் கௌதம் மேனனின் அப்பா அமர்ந்திருப்பார். அவரின் அப்பா அதன் பின் இறந்து போக அவரின் நினைவாக தான் வாரணம் ஆயிரம் படத்தை இயக்கியிருப்பார் கௌதம் வாசுதேவ் மேனன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X