ரஜினி சாருக்கு யாரோ தப்பா சொல்லிக் கொடுத்துட்டாங்க.. அந்த படம் மிஸ் ஆகிடுச்சு.. கெளதம் மேனன் ஓபன்!
சென்னை: மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தை இயக்கியுள்ள கெளதம் மேனன் விரைவில் அந்த படத்தை வெளியிட உள்ள நிலையில், தமிழ் மற்றும் மலையாள மீடியாக்களுக்கு பேட்டி அளித்து புரமோஷன் செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் ரஜினி சாருக்கு படம் பண்ணுவது எப்படி மிஸ் ஆனது என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.
இயக்குநர் மணிரத்னத்தை போலவே தனக்கென ஒரு தனி ஸ்டைலை வைத்துக் கொண்டு படங்களில் வெஸ்டர்ன் ஃபிளேவர்களை தூவி தமிழ் சினிமாவையே சற்று மாற்றியமைத்த இயக்குநர்களில் ஒருவராக மாறினார் கெளதம் மேனன்.

மாதவனை வைத்து இவர் இயக்கிய முதல் படமான மின்னலே படமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில், சூர்யாவுக்கு காக்க காக்க, கமல்ஹாசனை வைத்து வேட்டையாடு விளையாடு என தொடர்ந்து வெற்றி இயக்குநராக மாறினார். பச்சைக்கிளி முத்துச்சரம் சற்றே சொதப்பிய நிலையில், வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட படங்கள் மீண்டும் கெளதம் மேனனுக்கு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்தன.
கடனில் தத்தளித்த கெளதம் மேனன்: தயாரிப்பாளராக சில இயக்குநர்கள் மாறித்தான் ரொம்பவே கஷ்டப்பட ஆரம்பித்துவிடுகின்றனர். ஒன்றாக என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தை ஆரம்பித்த நிலையில், அடுத்தடுத்து இவர் இயக்கிய படங்களும் தயாரித்த படங்களும் தோல்வியை தழுவ கடனில் சிக்கினார். அதன் பின்னர் நடிகராக உருமாறிய கெளதம் மேனன் தற்போது மம்முட்டியை வைத்து டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தை இயக்கியுள்ளார்.
மம்முட்டி படம்: கெளதம் மேனன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் இன்னமும் வெளியாகவில்லை. மத கஜ ராஜா படத்தை போல அந்த படமும் எப்போது வெளியானாலும் வெற்றி பெறும் என்கின்றனர். இந்நிலையில், கெளதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி தயாரித்து நடித்துள்ள டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அந்த படத்திற்கு புரமோஷன் செய்யும் விதமாக பேட்டியளித்த கெளதம் மேனன் சூர்யா, தனுஷ், கமல்ஹாசன் உள்ளிட்ட நடிகர்கள் பற்றி வெளிப்படையாக பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினி பண்ண வேண்டிய படம்: சியான் விக்ரம் நடித்து இன்னமும் வெளியாகாமல் கிடப்பில் கிடக்கும் துருவ நட்சத்திரம் படமே ரஜினி சார் பண்ண வேண்டியது. அவரிடம் முதல் பாதி கதையை சொல்லிவிட்டு வந்தேன். அவரும் நல்லா இருக்கு பண்ணலாம் என்றார். ஆனால், அதற்குள் சிலர் என்னை பற்றி தவறாக அவரிடம் போட்டுக் கொடுக்க அந்த படத்தை அவர் வேண்டாம் என மறுத்துவிட்டார் என ஷாக்கிங் தகவலை வெளியிட்டுள்ளார் கெளதம் மேனன்.
வெற்றி கிடைக்குமா?: நீதானே என் பொன்வசந்தம், எனை நோக்கிப் பாயும் தோட்டா, வெந்து தணிந்தது காடு, ஜோஷ்வா இமைபோல் காக்க என வரிசையாக கெளதம் மேனன் படங்கள் தோல்வியை தழுவி வரும் நிலையில், மலையாளத்தில் அவருக்கு வெற்றி கிடைக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன. மம்மூட்டி படம் அவருக்கு கைகொடுத்தால் நடிப்பதை குறைத்துக் கொண்டு மீண்டும் இயக்குநராக ஒரு ரவுண்டு வருவார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











