ஜனநாயகனை தேடி அடிச்சு அராஜகம் பண்றாங்க.. அரசியல் யுத்தம் ஆரம்பிச்சிடுச்சு.. கொந்தளித்த கௌதமன்!

சென்னை: நடிகர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை. படம் வெளியாவதற்கு இன்னும் இரு நாட்களே உள்ள நிலையில் இன்னமும் சான்றிதழ் கிடைக்காததால் விஜய் ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து இயக்குநரும், நடிகருமான கௌதமன், அரசியல் யுத்தம் ஆரம்பித்துவிட்டது என கூறியுள்ளார்.

Realone Media யூடியூப் சேனலுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ஜனநாயகன் படத்திற்கு இதுவரை சென்சார் கொடுக்காதது விஜய் அரசியலில் நுழைந்ததால் தான். உரிமை கேட்கிற, நியாயம் கேட்கிற ஒரு இடத்திற்கு வந்தால் அதிகார வர்க்கம் எப்போதுமே அதை விடாது. அதுவும் ஓரமாக நின்று கத்தி விட்டுப் போகிறவர்களால் எந்த சிக்கலும் இல்லை என்றால் அவர்களை விட்டு விடுவார்கள். ஆனால், சிக்கல் வருகிறது என்றால் அவர்களைத் தேடிப்பிடித்து அடிப்பது தான் அதிகார வர்க்கத்தின் வேலை. தற்போது விஜயால் சிக்கல் வரும் என்பதால் தான் பல பிரச்சினைகளை அவருக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

Jana Nayagan Vijay Gauthaman
Photo Credit:

ஜனநாயகன்: எம்ஜிஆரின் நாடோடி மன்னன் படம் வெளியாகும் போது பிரச்சனை வந்தது. அதே பிரச்சினை தான் தற்போது விஜய்க்கும் வந்து இருக்கிறது. அவருக்கு இருக்கும் பெயர், புகழால் ஆட்சி அதிகாரத்தை கை பற்றி நமக்கு வேலையில்லாமல் செய்துவிட்டால் என்ன செய்வது, நம் அடுத்த தலை முறையினர் என்ன செய்வார்கள் என்கின்ற பயம் ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.

அரசியல் யுத்தம்: இதனால், ஜனநாயகன் படம் ஓடக்கூடாது என்பதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவை அனைத்தையும் செய்வார்கள். பராசக்தி திரைப்படத்திற்கும், ஜனநாயகன் திரைப்படத்திற்கும் நடப்பது ஒரு அரசியல் யுத்தமாக தான் நான் பார்க்கிறேன். ஜனநாயகன் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றுவிட்டால், விஜய்க்கு இன்று இருக்கிற பெயரை விட, காலத்தால் அழிக்க முடியாத மிகப்பெரிய பெயர் வரும். அந்தப் பெரும் பெயரை தடுப்பதற்காக இந்த அதிகாரவர்க்கம் பல வேலைகளை செய்கிறது. ஒருவேளை ஜனநாயகன் படத்தை தடுத்துவிட்டால், அதிலும் ஒரு பெரிய அரசியல் நடக்கும் என்று கௌதமன் அந்த பேட்டியில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X