விஜயிடம் நிறைய மாற்றம்.. நல்ல தலைவருக்கான தகுதி இருக்கிறது.. காயத்ரி ஜெயராமன்
சென்னை : தளபதி விஜய் பற்றி சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்தார் காயத்ரி ஜெயராமன்.
தென்னிந்திய மொழிகளில் சிறப்பாக நடித்து அசத்திய காயத்ரி ஜெயராமன். ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவை விட்டு விலகினார். அப்போது அவருக்கு அதிக படியான சினிமா வாய்ப்புகள் தேடி வந்தன. அதை மறுத்து நீண்ட வருடங்களுக்கு பிறகு தற்சமயத்தில் தொடர்ந்து நாடகங்களில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன் .தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் அழகு என்ற நாடகத்தில் தலைவாசல் விஜய் ,ரேவதி போன்ற பிரபலங்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காயத்ரி ஜெயராமன்

இந்த நாடகத்தில் முதலில் சவுண்ட் சரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்க தான் சம்மதித்ததாகவும் பின்னர் கதை போக போக சவுண்ட் சரோஜா என்ற பாத்திரம் வாட்டர் வனஜாவாக மாற்றபட்டது. சவுண்ட் சரோஜா ஒரு வக்கீல் எப்போதும் சண்டை போடுவாள் ஆனால் வாட்டர் வனஜா தாய் பாசம் உள்ள தாய் அவள் அடிக்கடி அழுவால். இப்படி இரண்டு கதாபாத்திரத்திற்கும் வேறுபாடுகள் அதிகம் .
ஆரம்ப காலத்தில் நாடகம் பார்த்து அழுகும் அம்மாவை பல முறை கிண்டல் செய்துள்ளேன். நான் நாடகத்தில் நடிக்க போகும் போது மாறுபட்ட கதாபாத்திரங்களிலே நடிக்த விரும்பினேன் ஆனால் இறுதியில் என்னையும் கண்ணீர் ததும்பிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து விட்டார்கள் என நகைச்சுவையாக கூறினார் காயத்ரி ஜெயராமன் .
மேலும் எங்கள் நாடகத்தில் வயதில் மூத்தவர் தலைவாசல் விஜய் தான் ஆனால் இருப்பதிலே குறும்புதனம் கேலி செய்வது அதிகம் அவர்தான் வயதிற்கும் அவர் செய்யும் சேட்டைகளும் சுத்தமாக சம்மந்தம் இருக்காது என்று தலைவாசல் விஜய் பற்றி கூறியுள்ளார் காயத்ரி .

விஜயுடன் வசீகரா படத்தில் நடித்துள்ள காயத்ரி தற்போது விஜயிடம் அதிகபடியான மாறுதல்களை பார்கிறேன் அப்போது விஜய் செட்டில் இருக்கிறார் என்பதே தெரியாது ஆனால் தற்போது விஜய் மேடையில் ஏறி அவ்வளவு பேசுகிறார். நல்ல தலைவருக்கான தகுதி அவரிடம் இருக்கிறது என கூறினார் காயத்ரி .

மேலும் தமிழ் சினிமாவில் ஒரு மோசமான விஷயம் நான் நடித்த காலகட்டத்தில் இருந்தது, ஒரு முனையில் ஊட்டி கூட்டிச்சென்று அரைநிர்வாணமாக ஆடச்சொல்வார்கள் மறுமுனையில் ராஜஸ்தான் பாலைவனத்திற்கு அழைத்து சென்று கோர்ட்சூட் போட்டு ஆடச்சொல்வார்கள். இந்த மாதிரியான விஷயங்கள் பலற்றில் நான் சிக்கி தவித்துள்ளேன் முக்கியமாக நான் பிரபலமான ' மஞ்ச காட்டு மைனா ' பாடலின் படப்பிடிப்பின் போது அதிகம் பாதிக்கபட்டேன் என பகிர்ந்து.


Click it and Unblock the Notifications











