மீண்டும் இந்தியில் ஜெனீலியா
முன்னாள் ஹரிணியான இந்நாள் ஜெனீலியா, இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ள படத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருப்பது அக்ஷய் கண்ணா. படத்தில் ஜெனீலியாவுக்கு காமெடி கலந்த கலக்கல் வேடமாம்.
| Click here for more images |
தமிழ் ஜெனீலியாவுக்கு கை கொடுக்கவில்லை. ஆனால் தெலுங்குக்காரர்கள் கப் என்று பிடித்துக் கொண்டதால், அங்கேயே தொடர்ந்து கலக்க ஆரம்பித்தார் ஜெனீலியா.
தற்போது ஜெனீலியா கையில் தமிழில் 2 படங்கள் உள்ளன. ஜெயம் ரவியுடன் சந்தோஷ சுப்ரமணியம் படம் அதில் ஒன்று.
இந்த நிலையில், மறுபடியும் ஜெனீலியா இந்திக்குப் போகிறார். இப்படத்தை ப்ரியதர்ஷன் இயக்குகிறார். காமெடி கலந்த சப்ஜெக்ட்டாக இதைத் திட்டமிட்டுள்ளார் ப்ரியதர்ஷன்.
நவம்பர் 2வது வாரத்தில் தீபாவளிக்குப் பிறகு படப்பிடிப்பு ெதாடங்குகிறதாம். அக்ஷய் கண்ணா இப்படத்தில் ஜெனீலியாவுடன் இணைகிறார். பரேஷ் ராவல் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
இப்படம் குறித்து ஜெனீலியா கூறுகையில், நான் இந்திக்குப் புதியவள் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் நான் சுத்தமான இந்திக்காரி, மும்பைக்காரப் பெண். எனது சொந்த மொழியில் நடிப்பது குறித்து பெருமைப்படுகிறேன்.
ஏற்கனவே 2 இந்திப் படங்களில் நடித்திருந்தாலும், பெரிய இயக்குநரான ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிப்பது பெருமையாக உள்ளது. பாலிவுட்டில் மீண்டும் எனது வருகையை இந்தப் படம் சிறப்பாக ஆரம்பித்து வைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
சமீபத்தில்தான் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ஜெனீலியா விலகினார். இந்திப் படத்தில் நடிப்பதற்காகவே சூர்யா படத்திலிருந்து அவர் விலகியதாக கூறப்படுகிறது.
எங்கிருந்தாலும் வாழ்க!


Click it and Unblock the Notifications











