விஜய் ஒரு அமைதிப்புயல்.. பகவதி படத்துல இருந்தே.. ’கில்லி அப்பா’ ஆஷிஷ் வித்யார்த்தி பேட்டி!
சென்னை: பகவதி படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்த ஆஷிஷ் வித்யார்த்தி கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து அசத்தியிருப்பார். கில்லி திரைப்படம் இந்த வாரம் ரீ ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு ஆஷிஷ் வித்யார்த்தி அளித்த பேட்டியில் விஜய்யின் அமைதி குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் ஏகப்பட்ட விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
61 வயதாகும் ஆஷிஷ் வித்யார்த்தி கடந்த ஆண்டு ரூபாலி பருவா என்பவரை திருமணம் செய்துக் கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்த வயதிலும் திருமணம் செய்துக் கொள்கிறாரே ஆஷிஷ் வித்யார்த்தி என அவர் குறித்து ஏகப்பட்ட விவாதங்கள் சோஷியல் மீடியாவில் நடைபெற்றன.

கில்லி படத்தில் விஜய்க்கு அப்பாவாக போலீஸ் அதிகாரியாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்த நிலையில், தமிழ்நாட்டில் ரசிகர்கள் பார்க்கும் போதெல்லாம் கில்லி அப்பா என்றே தன்னை அழைத்து வருவதாக கூறியுள்ளார்.
விஜய் - ஆஷிஷ் வித்யார்த்தி கூட்டணி: கில்லி படத்துக்கு முன்பே பகவதி மற்றும் தமிழன் படங்களில் விஜய்க்கு வில்லனாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்திருப்பார். கில்லி படத்தில் அப்பாவாகவும் அழகிய தமிழ்மகன் படத்தில் மாமனாராகவும் ஆஷிஷ் வித்யார்த்தி விஜய்யுடன் இணைந்து நடித்திருப்பார். இவர்கள் இருவரது கூட்டணி வந்தாலே ரசிகர்களுக்கு அது வேறலெவல் ட்ரீட் தான் என்பது போலவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கில்லி அப்பா: தரணி இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து 20 ஆண்டுகளுக்கு முன்பாக கில்லி படத்தில் சரவண வேலுவாக விஜய் நடிக்க அவரது அப்பாவாக போலீஸ் அதிகாரியாக ஆஷிஷ் வித்யார்த்தி நடித்திருப்பார். பூரியை காணோம் என்கிற காமெடி முதல் கடைசியில் தனலட்சுமியாக நடித்த திரிஷா ஆஷிஷ் வித்யார்த்தியை அவரது வீட்டுக்கே அழைத்து வந்து ஒவ்வொருத்தராக அறிமுகம் செய்து வைக்கும் காட்சியெல்லாம் வேறலெவலில் ஃபன்னாக இருக்கும். போனில் ஓட்டெரி நரி பேசுறேன் என தாமு இவருடன் போனில் செய்யும் காமெடி எல்லாம் எக்ஸ்ட்ராடினரி. இன்னமும் தமிழ்நாட்டில் ரசிகர்கள் தன்னை பார்த்தால் கில்லி அப்பா என்றே அழைப்பதாக ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
அமைதிப்புயல்: கில்லி படத்தில் இல்லை அதற்கு முன்னதாகவே அவருடன் பகவதி, தமிழன் உள்ளிட்ட படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்போதிலிருந்தே வேலையில் ரொம்பவே சின்சியராக இருப்பார். ஷாட் வருவதற்கு முன்பு வரை அமைதியாக இருக்கும் நபர் ஷாட் ஆரம்பித்ததும் புயலாக மாறி எப்படித்தான் நடிக்கிறார் என நானே பலமுறை ஆச்சர்யத்துடன் பார்த்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.
அரசியலுக்கு வந்தாலும்: சினிமாவிலேயே சிறப்பாக நடிக்கக் கூடிய விஜய் அரசியலுக்கு அடுத்ததாக வர முடிவெடுத்திருப்பது அவரது தனிப்பட்ட விருப்பம். ஆனால், அரசியலுக்கு வந்தால் நிச்சயம் அதற்கு எந்தளவுக்கு உழைக்க வேண்டுமோ அந்த அளவுக்கு தனது உழைப்பை நடிகர் விஜய் கொட்டுவார் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என ஆஷிஷ் வித்யார்த்தி பேசியுள்ளார். மீண்டும் தளபதி விஜய்யுடன் இணைந்து ஆஷிஷ் வித்யார்த்தி நடிக்க வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கடைசியாக தமிழில் ஜெயம் ரவியின் இறைவன் படத்தில் நடித்த இவர் கடந்த வாரம் பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான ஆவேசம் படத்திலும் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











